Periyava Golden Quotes-658


எதற்கும் ‘எக்ஸெப்ஷன்’ உண்டு. இதைப் பார்க்காமல் ரொம்பவும் தீவிரமாக ஒரு ரூலை ஒருவர் சொன்னால் அப்புறம் அவரே அதற்கு மாறாகப் பண்ண வேண்டிய எக்ஸெப்ஷனலான ஸந்தர்ப்பம் வருகிறபோது என்னவோ போலாகிறது. காந்தி ஒரேயடியாக அஹிம்ஸை, அஹிம்ஸை என்றார். அவரே ஒரு ஸமயம் ஒரு கன்றுக்குட்டி உயிர் போகாமல் ரொம்பவும் அவஸ்தைப்பட்டபோது அதற்கு ஒரு ‘பாய்ஸன்’ மருந்தைக் கொடுத்து உயிர் போகும்படிப் பண்ணினார். அவர் ஏற்கெனவே தீவிர அஹிம்ஸாவாதம் பண்ணியதாலேயே அப்போது பல பேர், “அப்பேர்ப்பட்டவர் இப்படி கோஹத்தி பண்ணிவிட்டாரே!” என்று கண்டனம் தெரிவித்தார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Every rule has an exception. Without taking this into consideration if somebody stresses too much upon the rule, then when exceptional circumstances arise when he himself has to act contrary to the rule, then it seems odd. Gandhi stressed a lot upon non violence (Ahimsa). But when a calf was suffering in the last stages of its life, he himself recommended that it should be eased out of pain, by giving it poison. Because he had stressed too much upon non violence earlier, many condemned him, accusing him of cow slaughter. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: