Periyava Golden Quotes-653


டிப்ளமஸியில் ரொம்பவும் கீழ் லெவல்களுக்கு War-time-ன் [உலக யுத்தத்தின்] போது போன அநேக அந்நிய தேச ராஜாங்கங்கள் அவர்களுடைய மதங்கள் சொன்ன ஸத்யக் கொள்கையை மீறியே போயிருக்கின்றன. நம் தேசத்திலோ ‘அர்த்த சாஸ்திரம்’ என்றுள்ள ராஜரீதியில் முதலிலேயே ராஜதந்திரம் என்பதாக அவசியமான ஸந்தர்ப்பத்தில் இப்போது சொல்கிற ‘டிப்ளமஸி’யை அநுமதித்திருப்பதால், நம்முடைய ராஜாக்களுக்கு ஸந்தர்ப நெரிசலில் ஸத்யத்தை ஒளிக்க வேண்டியிருந்தபோது சாஸ்திர விரோதமாகப் போகிற தோஷமோ, ஹிபாக்ரிஸி தோஷமோ ஏற்படவில்லை. இன்னின்ன ஸந்தர்ப்பத்தில் ஸத்யத்துக்கு விலக்கு தரலாம் என்று வகைப்படுத்தி வரம்புகட்டி சாஸ்திரத்தில் வைத்துவிட்டதாலேயே அவற்றில் மட்டுமே அப்படிச் செய்வது, மற்றவற்றில் பரம ஸத்யமாக நடந்து கொள்வது என்று நம் ராஜாக்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இப்படி விதிவிலக்காகச் சிலதைச் சொல்லாமல், விதிவிலக்கே கிடையாது என்று வைத்த தேசங்களிலோ, ஏதோ சிலதில் என்றில்லாமல், அநேக விஷயங்களில் ஸத்ய விரோதமாகப்போன ராஜாக்களும் ராஜாங்கங்களும் தோன்றுவதும், – கிளர்ச்சி, புரட்சி என்று ஏற்படுவதுமாய் இருந்திருக்கிறது. ஹிஸ்டரியைப் பார்த்தால் தெரியும். ஆனால் இந்த அம்சத்தைக் கவனிக்காமலே அர்த்த சாஸ்திரம் பண்ணின சாணக்கியனைக் கபடி, தந்திரசாலி unscrupulous என்றுகூட விமர்சிப்பதைப் பார்க்கிறோம்!ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Foreign nations which stooped to a very low level of diplomacy during world War did so against the principle of truth advocated by their religions. But in our country since ‘Artha Shaastraa’ (the art of governance) permitted the need for such diplomacy during delicate circumstances our rulers had no qualms of hiding the truth and they did not become guilty of violating the scriptures or hypocrisy. Since those circumstances in which the principle of truth could be violated were clearly delineated by our scriptures, our rulers did so only during such exigencies but strictly followed the principle of truth during the other times. It is evident from history that in those nations where such exceptions to the rule were not prescribed, rulers and governments have appeared which violated the principle of truth followed by revolutions and demonstrations. But unmindful of this aspect, Chanakya who wrote ‘Artha Shaastra’ is even described as cunning and unscrupulous. Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: