ஸத்யத்துக்குக்கூட (அதிகாரி பேதமில்லாவிட்டாலும்) ஸந்தர்ப்ப பேதம் இருப்பதை நம் சாஸ்திரங்கள் அங்கீகரிக்கின்றன. ஸத்யத்தைச் சொல்வதே ஒரு நிரபராதிக்குக் கெடுதலை உண்டாக்குமானால் அப்போது வாக்கு ஸத்யத்தைவிட, பூதஹிதத்தைச் செய்யும் பிரமைதான் பெரிய ஸத்யம் என்பது நம் சாஸ்திரம். திருஷ்டாந்தமாக, பத்துப் போக்கிரிகள் ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டு வந்து, அவர்கள் நம்மிடம், “அந்தப் பெண் எங்கே போனாள் தெரியுமா?” என்று கேட்டால், அந்த ஸந்தர்ப்பத்தில் “தெரியாது” என்று சொல்வதுதான் ஸரி என்பது நம் மதக் கோட்பாடு. எல்லாரும் எப்போதும் நிஜமே பேச வேண்டும் என்று சொல்லும் மதங்களிலிருப்பவர்கள் இம்மாதிரி ஸமயத்தில் அந்தப் பெண்ணைக் காட்டிக் கொடுத்துவிடும்படியாகவே ஆகும். இல்லாவிட்டால் மதக் கொள்கையை மீறின பாவம் வந்துவிடும்! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Though Truth is a common principle according to our sastras, they still make a distinction taking into consideration the exigencies of a situation. If the utterance of truth can harm an innocent person, then our scriptures are clear that, under such circumstances, it is more imperative to help that person than utter the truth. For example, if ten rowdies chase a girl and they enquire us about her whereabouts then our scriptures declare that we should answer in the negative. The followers of those religions which declare that everyone should speak the truth under all circumstances may be forced to betray the girl under such circumstances. Otherwise, they may be guilty of the sin of failing the dictates of their religion. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
Leave a Reply