‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்பதிலே இப்படி அதிகார பேதம் பண்ணி எவனோ ஒருத்தனுக்கு பரம உத்தம தர்மத்தை விதியாக வைக்கிற தாத்பரியம் அடங்கியிருக்கிறது. அத்தனை பேரும் நல்லவனாகத்தானிருக்க வேண்டுமென்றால் முடியாது; ஒரு நல்லவன் இருந்தாலே அவனை உத்தேசித்து அத்தனை பேருக்கும் மழை பெய்துவிடுகிறது என்று பழமொழி சொன்னார்கள். ஸமூஹத்தில் ஒரு பிரிவு உத்தம தர்மத்தை அநுஷ்டித்தாலே போதும், அதன் பலன் அத்தனை பிரிவுகளையும் சேர்ந்துவிடும். சிலருடைய அநுஷ்டானத்தாலேயே ஸகலருக்கும் தர்ம மழை, அன்பு மழை, ஆண்டவனுடைய அருள் மழை கிடைத்து விடும்படியாக வர்ணாச்ரம விபாகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
The Thirukkural “Nallaar Oruvar Ularel” contains the essence of the concept of distinction among the duties allotted to persons belonging to different communities and prescription of a high scale of virtues to one particular person. It is not possible for everyone to be good. If one virtuous person exists, the proverb says, it will rain for his sake. If one section among society follows such a noble path, the benefits will accrue to the other sections of the society too. The Varnashrama division has been designed in such a way to ensure that the virtuous conduct of a few will result in a shower of virtue, love, and God’s Grace for the rest. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
PERIYAVA KAPPATHUNGO. SARANAM.PLEASE