‘ஆப்ஷன’லாகச் சிலருக்கு வெஜிடேரியனிஸத்தில் பிடித்தம் ஏற்படுவதற்குக் காரணம் நாலு வர்ணங்களில் பாக்கியுள்ள பிராம்மணனுக்கு அதைக் ‘கம்பல்ஸரி’யாக வைத்திருப்பதுதான். இவன் வேதத்தை ஓதியும் ஓதவித்தும் ரக்ஷிக்க வேண்டியவனாதலால் மந்திர சுத்தியை முன்னிட்டுப் புலால் உண்ணக்கூடாது என்று வைத்தார்கள். இதன் திரை கடல் ஓடியும் திரவியம் சேர்க்கவும் கூடாது என்று ரூல். இவனுக்கு தரித்ரந்தான் சாஸ்திரம் விதித்திருப்பது. இவன் அந்நிய தேசங்களுக்குப் போகப்படாது. போனால் பிரஷ்டனாகி விடுவான். ஏன்? வேதரக்ஷணத்தின் purity கெட்டுப்போய் விடுகிற ஹேது உண்டாகிவிடும் என்பதால்தான். வெளிநாடுகளுக்குப் போனால் அவற்றின் பழக்க வழக்கங்கள் இவனுக்கு ஏற்பட்டுவிடும். ஸ்வதர்மமான பழக்க வழக்கம் போய்விடும். வெளி தேசத்துக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து, இப்படிப்பட்ட விதேசப் பழக்கங்களை ஸ்வஜாதி பந்துக்களிடம் கலந்து, அவர்களால் ஆகிற வேத ரக்ஷணையைக் கெடுத்துவிடப் போகிறானே என்றுதான் பிரஷ்டம் பண்ணச் சொன்னது. இவனுக்குக் கம்பல்ஸரியாக வைத்த அநேக ஆசாரங்களும் வ்ரதாநுஷ்டானங்களும் மற்றவர்களையும் ஆகர்ஷித்து அவர்கள் ஒரு ஸ்டேஜுக்குப் பிற்பாடு ப்ரியப்பட்டு தாங்களும் அவற்றை adopt பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Optionally, some people have developed an interest in vegetarianism, it is because it is compulsory, among the four Varnas, for Brahmins. He has to chant the Vedas and protect them. So he was prevented from eating any non vegetarian food to ensure purity of the Vedic chants. Since scriptures enjoin him to a life of poverty, he is not supposed to gather wealth by means of trade. He is not supposed to visit foreign countries; if he does so, he will be ex-communicated. The reason is that foreign travel will corrupt the purity of the protection of Vedas. If he travels abroad, he will acquire their habits and give up his traditional ones. On his return, he may spread these habits among his relatives and thus hinder the protection of the Vedas. This is the logic behind ex-communication. The strict rules of conduct imposed on a Brahmin, sometimes attract others too, and after a particular stage, they also adopt this code of conduct. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply