தேசத்தில் பொருளாதார ஸுபிக்ஷம் ஏற்பட வேண்டாமா? இதற்குச் சிலபேர் வியாபாரம், வியவஸாயம், கோரக்ஷை [பசு வளர்ப்பு] செய்ய வேண்டும். வியாபாரத்துக்காகக் கடல் கடந்தும் போக வேண்டியிருக்கும். அப்போதுதான் பொருளாதார மேம்பாடு தேசத்துக்குக் கிடைக்கும். அருளை முக்யமாகச் சொன்னாலும் பொருளையும் வேத மதம் மறக்கவில்லை. அதற்கு எவ்வளவு இடமோ அதைக் கொடுத்துத் தானிருக்கிறது, நாலு புருஷார்த்தத்திலேயே ‘அர்த்தம்’ இருக்கிறது; அறம், பொருள் என்கிறது அதுதான். லோக வாழ்க்கையை ஹிந்துமதம் அலக்ஷ்யப்படுத்துகிறது என்று சொல்வது நியாயமேயில்லாத குற்றச்சாட்டு. நம் மதத்தில் பொருள் வளர்ச்சிக்கென்றே நாலு வர்ணத்தில் ஒன்றை வைத்திருக்கிறது. ஸமூஹத்தில் பொருள் வளர்ச்சியை உண்டாக்குவதான தர்மத்தைப் பண்ணும் இவனுக்கு வைச்யன் என்று பெயர். ‘விச்’, ‘விச்வம்’, ‘வைச்யன்’ எல்லாவற்றுக்கும் ‘ரூட்’ ஒன்றுதான். இவன் லோகம் பூராவும் போய்ப் பொருள் தேடி வரவேண்டியவன். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது இவனுக்கு வைத்த தர்மம். இவனுக்காகக் கடல் வாணிபத்தைப் பெருக்கித் தந்ததில் க்ஷத்ரியர்களான ராஜாக்களுக்கும் பெருமை ஏற்பட்டது. ஸமுத்ரத்தில் பல நாட்கள் போக வேண்டியவனை, பல தேசங்களுக்குப் போக வேண்டியவனை வெஜிடேரியனாகத்தான் இருக்க வேண்டுமென்றால் முடியமா? இவனுடைய சூழ்நிலை, காரியம் இவற்றைப் பொருத்து இவனுக்கும் சாக போஜனந்தான் என்று வைக்காமல் இவனால் ஸமூஹம் பெறுகிற உதவியினாலே இவனுடைய மாம்ஸ போஜன தோஷம் போகட்டுமென்று generous -ஆக இவனுக்கு ‘ரூல்’ போட்டிருக்கிறது. ஆனாலும் என்ன பார்க்கிறோம்? வைச்யர்களில் வடக்கே அநேக ராஜ்யங்களின் பனியாக்கள், தெலுங்கர்களான கோமுட்டிகள், தமிழ் நாட்டுச் செட்டிமார்களில் சுத்தசைவர்கள் ஆகியோர் வெஜிடேரியன்களாகவே இருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆதியில் பல தேசங்களுக்குப் போய் நன்றாகச் செல்வம் ஸம்பாதித்து வந்தபின் வைச்யர்களும் வயஸுக்காலத்தில் ஊரோடு ஸெட்டில் ஆனபோது, தாங்களாகப் பிரியப்பட்டு இங்கே ஐடியலாக பிராம்மணன் பின்பற்றிய அஹிம்ஸா போஜனத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ராஜாக்களைப் போல வ்ருத்தாப்யத்தில் காட்டுக்குப் போய்விடவில்லை. வீட்டிலேயேதான் இருந்து கொண்டிருந்தார்கள். அதனால் இவர்களுடனேயே வஸித்து வந்த இவர்களுடைய பின்தலைமுறையினருக்கும் இவர்களுடைய ஆஹார நியமம் இளவயஸ தொட்டே வந்திருக்கிறது. அதனால் அப்புறம் இவர்களுக்கு சைவ போஜனமே பிறந்தநாள் தொட்டுக் குலவழக்காகியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Should not there be economic prosperity in the nation? To achieve this, some people have to do business, some have to be agriculturists, and some have to protect the cows. They may have to cross the seas and travel abroad to conduct business. The nation can prosper only then. The Vedas, though they emphasize the Grace of God, have not forgotten material wealth. They have given it the due place. In the very word ‘Purushaarththam’, (the blessings to be sought by a man) the word ‘Arththam’ referring to wealth is included. The scriptures talk of charity and wealth. So it is entirely wrong to say that the Hindu religion neglects the worldly aspects of life. Among the four Varnas or castes, one caste has been allotted the task of making the society economically prosperous. This person who is responsible for financial prosperity is Vaishyan. The root for the words ‘Vish’, ‘Vishwam’ and ‘Vaishyan’ is one and the same. He is supposed to travel throughout the world and gather wealth. This is the code of conduct prescribed for him. The Kings and emperors also get the credit for developing sea trade to help the Vaishya. How can we ask a person who is supposed to travel all over the world to be a vegetarian? It is not possible. Taking into consideration his circumstances and way of life, he has been generously permitted to consume non vegetarian food. But what do we see practically? Many Vaishyas of the North, Komuttis of Telugu region, and pure Saivas among the Chettiars of Tamizh Nadu are vegetarian. What awareness do we gain from this? After having gathered wealth through travel to different countries and having settled down in their old age, they choose to adopt the non-violent diet of the Brahmins. These businessmen never went to the forests in their old age like the Kshatriyas. They remained at home. Hence their next generation also followed the diet of these people since their younger days. Subsequently, they came to adopt vegetarian diet and this became a practice among these castes. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply