‘அஹிம்ஸையானது சித்த சுத்திக்கு ரொம்பவும் உபகாரம் பண்ணுகிறது என்கிறீர்கள். ஆனால் பிராம்மணனுக்கு மட்டும் அஹிம்ஸை விதி கட்டாயமானது, மற்றவர்களுக்கு இல்லை என்கிறீர்கள். அப்படியானால் பிராம்மணன் மாத்திரம் சித்த சுத்தி பெற்றால் போதும் என்று பக்ஷபாதம் பண்ணினதாகத்தானே ஆகிறது? ‘எருவுக்குத் தகுந்த பயிர்; உணவுக்குத் தகுந்த உயிர்’ என்று சொல்லிவிட்டு, பிராம்மணனுக்கு மட்டும் அஹிம்ஸா மரக்கறி போஜனம், மற்றவர்களுக்கு மாம்ஸம் பரவாயில்லை என்றால் இது ‘டிஸ்க்ரிமினேஷன் ‘ இல்லாமல் வேறென்ன?’ என்று கேட்கலாம்.அஹிம்ஸா போஜனத்தால் ஸத்வ குண அபிவிருத்தி ஏற்படுவதைக் கொண்டு அதைச் சித்த சுத்திக்காகப் பொதுவில் விதிதித்திருக்கிறது. ஆனால் பகவானின் லீலையில் இந்த லோகத்திலேயே தர்ம ரக்ஷணார்த்தம் ராஜஸ, தாமஸ காரியங்கள்கூட நடக்க வேண்டியிருக்கிறது, தப்பு செய்கிறவனைத் தண்டிக்க வேண்டியிருக்கிறது. தர்மத்துக்காக யுத்தம் பண்ணி கொன்று குவிக்கவும் வேண்டுமென்று தானே பகவான் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணினார்? இது ராஜஸ குணம்தான். உழுவது, கொத்துவது, வெட்டுவது முதலான கார்யங்களை ஸமூஹ க்ஷேமத்துக்காகப் பண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் கடுமையாக உழைப்பவர்கள் அடித்துப் போட்டாற்போல தூங்க வேண்டும். இது தாமஸம்தான். ஆனாலும் லோக க்ஷேமார்த்தமாக ஏற்பட்ட இந்தக் கார்யங்களைச் செய்யும்படிப் பிறப்பினாலேயே ஈஸ்வராக்ஞை பெற்றிருப்பவர்கள் இந்த ராஜஸ தாமஸங்களை மேற்கொள்வதால் அது அவர்களுக்கு தோஷமாகாது. ஸமூஹத்துக்காகச் செய்வதால் அந்தத் தியாகத்தினாலேயே, செய்கிற கார்யம் புண்யமாகிறது. இவர்கள் ராஜஸ, தாமஸ குணத்துக்கு அநுகூலமான அசைவ போஜனம், பழையது மாதிரி ஆசார விரோதமான சாப்பாட்டு தினுசு முதலியவற்றைச் சாப்பிடுவதிலுள்ள தோஷங்கூட அவர்களால் ஸமூஹத்துக்கு ஏற்படுகிற உபகார புண்யத்தில் அடிபட்டுப் போய்விடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
One may question if vegetarian food which is non violent in nature is supposed to purify the mind why it is not prescribed to those other than the Brahmins. An accusation may be leveled that this is a sign of partiality to ensure that only Brahmins achieve purity of mind and it is discrimination after having declared that “a fertilizer should be used according to the crop and food according to the person who consumes it”. Because non violent food enhances Sathvik character it has been generally prescribed for purifying the mind. But as part of God’s will, actions of Raajasic and Taamasic nature have to be undertaken in this world to preserve Dharma. The wrong doer has to be punished. Did not Lord Krishna advise Arjuna to slay many in the battlefield? This is Raajasik character. Agricultural activities like ploughing, digging, and cutting have to be undertaken with the purpose of social welfare in mind. People who thus labor have to enjoy a deep sleep. This is Taamasik character. But, since by birth, as per the directions of the divine supreme, they have been allotted these duties it will not be wrong on their part to do so. Because these actions are performed for the benefit of the society, that sacrificial intent earns them Punnya. Consumption of non vegetarian food or Pazhaiyadu (old cooked rice soaked in water) do not bring any sin upon them since the social benefits accrued by their actions wash away these sins. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply