Pudhu Periyava’s Anugraham to Shri Swaminathan Mama


Jaya Jaya Sankara Hara Sankara – Found this interesting incident by Shri Swaminathan Mama in Whatsapp. What a grace and child like enthusiasm by our Periayva. Mama is really blessed!

Many Jaya Jaya Sankara to Smt. Uma Gururajan for the translation. Rama Rama

Experiences with HH Pudhu Periyava – Shri Swaminathan Mama

இன்றைய தினம் (1.7.2017) ஓரிக்கை, காஞ்சி ஸ்ரீகாமாட்சி ஆலயம் தரிசனம் முடிந்து ஸ்ரீசங்கர மடம் வந்தேன்.

மகா பெரியவா பிருந்தாவனம் தரிசனம் செய்து விட்டு, எதிர்த் திசையில் புதுப் பெரியவா தரிசனத்துக்குச் சென்றேன்.

நமஸ்காரம் செய்து விட்டு கைகளைக் கூப்பியபடி எழுந்து நின்றேன். ஒரு புன்னகை பூத்தார். பிரசாதம் கிடைத்தது.

அருகில் இருந்த புதுப் பெரியவா உதவியாளர் திரு. சத்யா, ‘‘டி.வி.ல நிறைய சொல்றார் பெரியவா’’ என்று புதுப் பெரியவாளிடம் தெரிவித்தார்.

அதை ஆமோதித்து விட்டு, தனது வலப் பக்கம் இருக்கிற சிறு அலமாரியில் எதையோ தேட ஆரம்பித்தார்.

என் தரிசனம் முடிந்தாயிற்று. புறப்படலாம் என்று நான் தீர்மானித்த மறுகணம், ‘கொஞ்சம் இரு’ என்பதாக உள்ளுணர்வு சொன்னது.

பிரசாதம் பெற்றுக் கொண்டாயிற்று. புதுப் பெரியவா எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். வேறு சில பக்தர்களும் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நான் கிளம்பவில்லை. ஏனோ, அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

இரண்டு நிமிடம் போயிருக்கும். புதுப் பெரியவா கையில் கத்தை கத்தையாக பேப்பர் கட்டிங்குகள். பல செய்தித்தாள்களில் வந்தவை. என்னை ஒரு பார்வை பார்த்தார். அது அவரது அருகில் செல்லுமாறு என்னைத் தூண்டியது.

புதுப் பெரியவா அருகில் போய் நின்றேன். இடப் பக்கம் திரும்பி என்னைப் பார்த்து விட்டு, வலப்பக்கம் இருக்கிற பேப்பர் கட்டிங்குகளை ஒவ்வொன்றாகப் பார்த்து நகர்த்தி விட்டு, எதையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.

ஒன்றும் புரியாமல் நானும் அமைதியாக இருந்தேன்.

திடீரென்று புதுப் பெரியவா முகத்தில் ஒரு புன்னகை. அவரது கையில் இருந்த மற்ற பேப்பர் கட்டிங்குகளை எல்லாம் அலமாரியில் வைத்து விட்டு, ஒரே ஒரு கட்டிங்கை எனக்குக் காண்பித்தார். அதில் அச்சாகி இருந்த என் புகைப்படத்தைக் காண்பித்து, ஒரு குழந்தை போல் சிரித்தார்.

என்னையே நான் மறந்தேன். அடியேன் எழுதிய ஒரு செய்தியை – அதில் வெளியாகி இருக்கிற என் புகைப்படத்தையும் காட்டித் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்வதில், என்ன அழகு!

இந்த சாகரத்தில் என்னையும் மனதில் வைத்துக் கொண்டு, என்னைப் பார்த்ததும், இதைத் தேடி என்னிடம் காட்டுகிற இந்தப் பேற்றுக்கு நான் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

அனந்தகோடி நமஸ்காரம்.

மகா பெரியவா அவதாரத் தினத்தன்று ‘தினத் தந்தி’யில் வெளியான மயிலாப்பூர் கற்பகாம்பாளைப் பற்றிய செய்தி அது.

_________________________________________________________________________________
Experiences with HH Pudhu Periyava – Shri Swaminathan Mama

Today (1 July 2017) I went to Orikkai, Sri Kamakshi Temple in Kanchipuram and after darshan, I went to Sri Sankara Matam.

I went to Maha Periyava Brindavanam for darshan and then proceeded in the opposite direction for having darshan of Sri Pudhu Periyava.

After prostrating to Sri Pudhu Periyava, I stood in front of him with folded hands.  He smiled at me and gave me prasadam.

Sri Pudhu Periyava’s assistant Sri Satya said “He gives talks in TV Periyava”.  Sri Periyava nodded in agreement and started searching for something in the small cabinet that was placed on his right side.

My darshan time was over.  As I thought of leaving, I had an intuition which said to me “wait for sometime”.

I had taken the prasadam.  Pudhu Periyava was searching for something and many devotees were waiting for darshan.  Still I did not leave.  I did not know why, but I was standing there.

Two minutes would have gone.  Pudhu Periyava had a bunch of paper cuttings that had come in many papers.  He looked at me and I felt as though I was called.  I went and stood near him.  He turned to left side and saw me.  Again he turned to his right side where the paper cuttings were kept.  He moved the paper cutting one by one and was searching for something seriously.   I did not understand anything but was standing there quietly.

Suddenly, there was a smile in Pudhu Periyava’s face.  He kept all the paper cuttings in the cabinet and showed me one paper cutting.  He pointed to my photo that was in the paper and laughed like a child.    I totally forgot myself.  Very nicely He expressed his happiness by showing my article and my photo that was in the paper cutting.

In this ocean like world, He remembered me and the moment He saw me, He searched for this article and showed to me.  How blessed and lucky I am!

Anathakoti Namaskaram.

The paper cutting had the article about Mylapore Karpagambal which was published on Maha Periyava Jayanthi day in the Tamil Daily “Dhinathanthi”.

 

 



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

%d