Periyava Golden Quotes-624

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

‘பார்ப்பான்’ என்றால் பிராம்மணன். ஞானதிருஷ்டியால் ஸத்யத்தை தரிசனம் பண்ணுவதால் அவன் “பார்க்கிறவன்”- “பார்ப்பான்”. ரிஷிகளை seer (see-r) என்று இங்கிலீஷில் சொல்வதும் இதே அர்த்தம்தான். “ஓத்து” என்று இங்கே சொல்லப்படுவது வேதம். ஓதப்படுவது – அத்யயனம் பண்ணப்படுவது – எதுவோ அது ஓத்து.

இந்த (இப்போது சொன்ன) குறளுக்கு என்ன அர்த்தமென்றால் ஒரு பிராம்மணன் வேதத்தை மறந்துபோய் விட்டால்கூடப் பரவாயில்லை; மறுபடியும் அத்யயனம் பண்ணிக் கற்றுக்கொண்டு விடலாம் – “பார்ப்பான் ஓத்து மறப்பினும் மறுபடியும் (‘மறுபடியும்’ என்பது ‘அண்டர்ஸ்டுட்’) கொளல் ஆகும்” என்று prose-order பண்ணிக் கொள்ள வேண்டும். அதாவது, வேதம் மறந்து போனாலும் மறுபடி கற்றுக் கொண்டு விடலாம்; கற்றுக் கொளலாகும். ஆனால் அவன் ஒழுக்கத்திலிருந்து, அதாவது ஆசாரத்திலிருந்து வழுவிவிட்டால் அவனது பிராம்மண ஜன்மாவே கெட்டுப் போய்விடும், அதாவது வீணாகிவிடும். “ஒழுக்கம் குன்றப் பிறப்பு (அதாவது ‘த்விஜன்ம விசேஷம்’ என்கிற பிராம்மண குடிப்பெருமை) கெடும்” என்பது prose-order நவீனர்கள், ‘ஆசாரமே இருக்க வேண்டியதில்லை; Vedas, Upanishads என்று லெக்சர் பண்ணிவிட்டால் போதும்; அப்படிப் பண்ணும் எல்லாரும் பிராம்மணர்தான்’ என்கிறார்களென்றால், திருவள்ளுவரோ, “பிராம்மணனுக்கு வேதமே மறந்து போய்விட்டால் கூட பாதகமில்லை; மறுபடி கற்றுகொண்டு விடலாம். ஆனால் அவன் மாத்திரம் ஆசாரஹீனனாக ஆனானோ, அதோடு அவனுடைய பிரம்மண்யமே போச்சு” என்கிறார். “ஆசார ஹீநம் ந புநந்தி வேதா:” என்ற சாஸ்திர அபிப்ராயத்தை அப்படியே echo பண்ணுகிறார். தமிழ்மறை என்ற குறளைக் கொடுத்த பெரியவர். எத்தனை வேதம் படித்திருந்தாலும் ஆசாரத்தை விட்டவன் வேதத்தினால் பலனடையமாட்டான். ஒரு பக்ஷிக் குஞ்சுக்கு இறக்கை முளைத்தவுடன் அது அந்த நிமிஷம் வரை இருந்த கூட்டைத் திரும்பிகூடப் பார்க்காமல் பறந்து விடுவதைப்போல, ஆசார ஹீனன் படித்த வேத வேதாந்தமெல்லாம் அவன் சாகிறபோது அவனைப் புண்ய லோகத்தில் சேர்க்காமல் அவனைத் திரும்பிகூடப் பார்க்காமல் போய்விடும் – என்றெல்லாம் தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைத்தான் திருவள்ளுவரும் ரத்னச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்கிறார். ஒழுக்கத்தால்தான் ஒருத்தனுக்கு உயர்வு என்று ஜெனரலாகச் சொல்லிவிட்டு, உடனேயே இப்படி பிராம்மணனின் ஒழுக்கத்தை ஸ்பெஷலாகச் சொன்னதால் அவர் நம் கால அபேதவாதிகளில் ஒருத்தரில்லை என்று காட்டிக் கொண்டு விடுகிறார். மற்ற எல்லாரையும் விடப் பிராம்மணனுக்கு ஆசாரம் விசேஷமானது என்பதை ஒப்புக் கொண்டுதான் இங்கே தனியாக அவனைப் பற்றி மட்டும் சொல்கிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

‘Marappinum….’ Kural Meaning: Paarppan refers to a Brahmin – one who has had a vision of the Ultimate – the Brahmam. It is the English equivalent of Seer. Oththu refers to the learning and chanting of the Vedas – Adhyayanam. The meaning of this Kural is that even if a Brahmin forgets Vedas he can learn them again. But if he gives up the code of conduct enjoined upon him, the very purpose of his birth as a Brahmin is negated. (The prose order of the Kural should be understood). The modernists declare that it is enough if one reads the Vedas and Upanishads and thus a person can become a Brahmin and there is no need to follow the rules of Aacharam. On the other hand, Thiruvalluvar categorically declares that even if a Brahmin forgets Vedas he can learn them again but if he gives up his Aacharam his very Brahminic nature is negated. Thiruvalluvar who gave the Tamizh Vedam called Thirukkural echoes the statement of Vedas here. The Vedas state that if a person well versed in Vedas fails to follow the Aacharam prescribed for him, all the Vedas and Vedantas he learnt will abandon him at the time of his death and fail to take him to the heavens, like the young one of a bird which flies away after its wings grow. This declaration is crisply summarized by Thiruvalluvar in his Kural. After having made a general declaration that virtues will exalt a person, he specially talks about the virtues of a Brahmin, thus making it clear that he is not one of the modernists who do not acknowledge these distinctions. Accepting that a code of conduct is very important for a Brahmin, he specifically talks about him. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d