Periyava Golden Quotes-617


கோவிலுக்குப் போகிறோம். வழியிலே பிரஸவ ஆஸ்பத்திரியில் ஸஹோதரிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பார்க்க ஆசையாய்த்தானிருக்கும். ஸஹோதரியும் ரொம்ப ஸந்தோஷப்படுவாள். ஸைகலாஜிகல் ஸாடிஸ்ஃபாக்ஷன், மநுஷ்யாபிமானம் இவற்றைக் கொண்டு பார்த்தால் பிரஸவ ஆஸ்பத்திரிக்குள் போகத்தான் வேண்டும். ஆனால் அங்கே போய்வந்தபின் ஸ்நானம் பண்ண முடிந்தால்தான் கோவிலுக்குப் போகலாம். ஸ்நானம் பண்ணாமல் பிரஸவத் தீட்டோடு கோவிலுக்குப் போகப்படாது. ‘கோவிலில் விசேஷமாச்சே, போகத்தான் வேணும்’ என்றால், இப்போது நமக்கு ஸ்நானம் பண்ண வசதி இல்லாவிட்டால், பிரஸவித்த ஸஹோதரியைப் பார்க்காமலேதான் போக வேண்டும். அந்தத் தியாகம் பண்ணத்தான் வேண்டும். சாஸ்திரம் மநுஷ்யாபிமானமில்லாதது என்று குற்றம் சொல்வது நியாயமில்லை. அப்படிச் சொன்னால் அந்த ஆஸ்பத்திரியில் அமலாகிற வைத்ய சாஸ்திரத்தையும் குறை சொல்லத்தான் வேண்டும். ஏன்? அங்கே ஆபரேஷன் தியேட்டரில் நம்மை உள்ளே விடுவார்களா? நமக்கு ரொம்பவும் பிரியமான பந்துவுக்குப் பிராணாபத்தான ஆபரேஷன், அப்போது பக்கத்திலிருக்க வேண்டும். இரண்டு மணி-மூன்று மணி பெரிய ஆபரேஷன் நடக்கிற வரை இன்னது நடக்கிறது என்று தெரியாமல் வெளியிலே திக்கு திக்கென்று உட்கார்ந்திருக்க முடியாது என்றால் டாக்டர் ஒப்புக் கொள்வாரா? உடலின் க்ஷேமத்தைக் குறித்து டாக்டர் சொல்வதை ஒப்புக்கொண்டு, அவர் சொல்வது கடுமையாக இருந்தாலும் அவருடைய நல்லெண்ணத்தை மதித்து, அவரைத் திட்டாமல் தியேட்டருக்குள் போகாமலிருக்கிறோமென்றால் (நம் ஸைகலாஜிகல் ஸாடிஸ்ஃபாக்ஷனை ஸாக்ரிஃபைஸ் பண்ணுகிறோமென்றால்) அதே ஆஸ்பத்திரிக்கு, பிற்பாடு ஸ்நானம் பண்ணும் வசதி இருந்தாலொழியப் போகக்கூடாது என்று உயிரின் க்ஷேமத்தைக் கருதி சாஸ்திரகாரர் சொல்வதையும் திட்டாமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

We are going to a temple. On the way is the maternity home where our sister has delivered a baby. We may want to see the child and the sister will also be overjoyed to see us. From the perspective of psychological satisfaction and on humanitarian grounds we should go to the maternity home. But if we visit the hospital, we should go to the temple only after having a bath. If something special is happening at the temple and we are not in a position to take a bath before visiting the temple, we have to sacrifice our desire to visit the sister. There is no point in accusing the sastras of being inhuman. In which case, we have to blame the hospital too. Will we be allowed inside the operation theater? If our close relative is being operated upon for a critical procedure and we are not able to wait outside the operation theater, gnawed by anxiety, will the doctor allow us inside the theater? Keeping the medical and health reasons in mind, we accept the doctor’s instructions recognizing his good intentions though they may be very strict in nature. Sacrificing our psychological satisfaction, we do not enter the operation theater and we do not scold the doctor. Similarly we should accept the rules of the scriptures which dictate that we should not visit the very same hospital without having a bath. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: