99. Gems from Deivathin Kural-Vedic Religion-Vaidhigam & Tamizh

Jaya Jaya Sankara Hara Hara Sankara – One thing that stands out in this chapter is how our religion (dharma) does division of one’s wealth into five parts. Per Sastras, one gets to keep only one part of his earnings giving the remaining parts towards respective chairities. We see these doctrines followed in religions like Islam and theories like Socialism and Communism but little we know that it has been imbibed in our dharma seamlessly, of course if one decides to live per our sastras. Apart from individual division of wealth we also saw how division of labor across society happened through Varnashrma Dharma.

In this chapter Sri Periyava explains the close relationship between Vedam and Tamizh Nadu. Goes on to explain how the kings of yesteryear’s nurtured Vedic Dharma quoting many authentic references including Thirukkural, aka Tamizh Vedam. In the previous chapters we read Periyava telling that Tamizh Nadu is the home of Manu, the first human on this earth. Concludes by saying Brahmins should mend their ways so Veda dharma can glow as before.

People who keep hankering after Socialism, Tamizh, and Tamizhnadu should read these chapters. Will they ? 🙂

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri.S. Venkataraman for the translation. Rama Rama

வைதிகமும் தமிழும்

கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.

பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம் |

ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம் ||

கரிகாலன் இதில் தன்னை ‘அரிகாலனாகிய கரிகாலன்’ என்கிறான். ‘அரி’ என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன்தான் ‘அரிகாலன்’. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்? வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும்தான் அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.

பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வளர்த்தார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. ‘வழுதி’ என்றால் பாண்டியராஜா. பிற்காலத்திலும் கல்வெட்டுகளில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத ‘இறையிலி’ யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் ‘சதுர் வேதி மங்கலம்’ என்ற பெயரில் உள்ளன.

வெளிதேசத்து விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் பாஷையில் வார்த்தையிருப்பதில்லை. வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.

வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிறமாதிரி தமிழ் நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வந்தவை என்றால், யாகம், வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே ‘வேதம்’ என்பது ‘மறை’ என்றும், ‘யாகம்’ என்பது ‘வேள்வி’ என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை சமஸ்கிருத பண்டிதர்கள் – தமிழ் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொள்வார்கள். வேட்டலிலிருந்து ‘வேள்வி’ வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம், வேரைப் போலவே வெளியில் தெரியாமல், அதாவது எல்லாரிடமும், புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்துஇருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தைதான்மறை. வைதிகப் பண்பாடும், யக்ஞ அநுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப் போயிருந்தாலொழிய, அந்த நாகரிகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாக்கியிருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறைத் தத்துவமாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே கற்க வேண்டும் என்பதால் தமிழில் ‘எழுதாக் கிளவி’ என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியிலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்கு ஸம்ஸ்கிருதத்திலும் “ச்ருதி” என்று பேர். ‘மறை’ என்பதைப் போல் வேத ரக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கிற நேர் வார்த்தை ஸம்ஸ்கிருதத்திலேயே இல்லை.

வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு ‘ஷடங்கங்கள்’ என்று பெயர். அதிலிருந்துதான் மத சம்பந்தமான எந்தக் காரியத்தையும் ‘சடங்கு’ என்று சொல்கிற வழக்கம் வந்திருக்கிறது, வைதிக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே, மூதாதைகளைத் ‘தென்புலத்தார்’ என்கிறார்.

இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞையாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்குதான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போகும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்குதான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான்.

திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தாலும், ‘வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பௌழியன் காண்’ என்றெல்லாம் வேதங்களையும் அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவானைத் துதிக்கிறார்கள். க்ஷேத்திர வர்ணனைகளிலெல்லாம், ஊர் முழுக்க ஹோமப் புகை சூழ்ந்திருந்தது. வேத சப்தம் ஒரே கோஷமாகப் பரவியிருந்தது என்று அவர்கள் சொல்லாமலிருப்பதில்லை.

இந்தத் தமிழ் நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்ச நஞ்சமில்லை. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.

இப்போதும்கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்ராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவேயில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். அவர்களுடைய அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அநுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரக்ஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.

________________________________________________________________________
Vaidhigam & Tamizh

There is a royal decree by Karikala Chozan in chaste Sanskrit.

“Paathraakalitha Vedhaanam Saasthra Maargaa Nusaarinaam
Thadhethu Arikaalasya Karikaalasya Saasanam”

Here Karikalan refers to himself as ‘Arikaalanaagiya Karikalan’. ‘Ari’ means enemy. One who is the bravest among the brave and who is Yama for enemies is ‘Arikalan’. Who are the enemies of Karikalan? All those who do not follow Veda sastra maargam are his enemies. This decree of Karikalan is to protect those who follow Veda Sastra way (maargam).

This is an example to illustrate that several famous Tamil Kings whole heartedly nurtured Vaideega religion. One King from the Sanga Kalam (olden days) was called ‘Palyagasalai Mudhukudumi Peruvazhuthi’. ‘Vazhuthi’ means Pandya King. Several stone carvings from later periods show that Tamizh Kings supported Vedic scholars by granting them fertile land. Several villages which were gifted (to vedic scholars) to support and nurture Vedas are known by the name ‘Chathurvedi Mangalam’.

When a new object is imported from abroad, there will be no name for it in the local language. For example, radio, telephone, and bus which came to India from other countries had no name in the local language. Later, incomprehensible Tamizh names were coined for these objects. Still, these new names are not being fluently used in our conversations.

If, as some people claim, Vedas, Yagam, etc. were not part of ancient Tamil society and were included only later, there would be no appropriate Tamil words for them. But even ancient Tamil literature extols the Vedas as Marai and Yagam as Velvi. Scholars of both Tamizh and Sanskrit languages acknowledge that such words are rich in meaning. The word Velvi has come from Vettal (meaning ‘the process of performing a yagam’). Vedas which are the source of all Dharmas, are like the root of a plant; the root is never visible. The word ‘Marai’ means ‘hidden’ and it explains the revered concept that Vedas are not prevalent among common men and that they can be protected and preserved only by a selected few who adhere to strict discipline. Unless Vaideega practices and Yagna anushtanams were prevalent in Tamizh Nadu during the ancient times, such beautiful words which succinctly explain the culture would not have been part of the Tamizh language. Since Vedas are not written down and are taught orally, they are also referred to as ‘Ezhuda Kilavi”, meaning ‘that which is not written’. Veda is referred as ‘Sruthi’ in Sanskrit because it is learnt only by listening to it. Even Sanskrit language does not have a word like ‘Marai’ which is the most appropriate name for the Vedas.

The six parts of Vedas are called ‘Shadangangal’. The Tamizh word ‘Sadangu’ which refers to any religious ritual is derived from ‘Shadangangal’. These examples establish that rituals prescribed in Vedas were prevalent even in ancient times in Tamizh Nadu.

I am of the opinion that Thirukural which is called Tamil Marai is full of Vedic teachings. Vedas prescribe Pithru yagna as the first priority. Veda yagna comes only after Pithru Yagna. Only after we do tharpanam and divasam for Pithrus (ancestors) must we do the other poojas. Thiruvaalluvar has also prescribed the same –

‘Thenpulathaar, Deivam, Virundu, Okkal Thanenrangu Aimpulatharu Ombal Thalai’

He says we have to nurture in the following order – Pithrus, God, Guest, Relatives, and then self. He places Pithrus (Thenpulathaar) ahead of God. Since Vedas believe that Pithrus reside in South, which is the direction of Yama, Pithrus are referred to as Thenpulathaar which literally means those who reside in South.

We voluntarily do this five part division. Apart from this, one sixth of the agricultural produce was levied as tax by the king in the olden days. The income after payment of tax is divided into the five parts mentioned above. Only one part would be kept for personal use of the individual. One part was used for annadanam in memory of ancestors; one part was given to temples; one part was used for the guests; one part was given to support needy relatives. The fifth part alone was used for family expenses. There is no better socialism than what Vedas and Thiruvalluvar have prescribed. Rather than leading a selfish life, a selfless life in which one helps others is the foundation of the Vedic way of life. Thiruvalluvar too says the same thing. Thirukural and many other Tamil books which have encouraged the dharmic way of life have been written following the traditions prescribed in the Vedas.

Thiruvalluvar advocates a Vedic way of life. Avvayar’s famous teaching ‘Odhaamal Oru Naalum Irukka Vendaam’ means ‘Veda adhyayanam should not be missed even for a day’. In several places Azhvaars, Saiva Thirumuraikaarars pray to God saying ‘Vedhiyaa, Vedagita, Santhogan Kaan, Powzhiyan Kaan’, thereby worshipping God by referring to Vedas and its Saakaas. When they describe the kshetrams, they never fail to mention that such places are reverberating with Vedic chants and filled with smoke from Vedic rituals performed with Agni.

In Tamizh Nadu, several people, though not belonging to the Brahmin community, have played an important role in supporting Veda Paatasaalas. They have donated land and money on a large scale to support these initiatives.

In recent times though atheistic views which are against the Vedas in nature are being promoted for political reasons, I believe that all Tamizhians continue to have faith in Vedas along with bhakti and loyalty in the Sastras. I firmly believe that if only Brahmins earn the respect and affection of others by the practice aacharam and anushtaanam,  then, Veda rakshnam will take place in a grand manner.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

Trackbacks

  1. IMPORTANT-Respect for Tamizh-Sri Matam and Our Periyavas – Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: