Jaya Jaya Sankara Hara Hara Sankara – A key quote to note…..Rama Rama
இப்போது எவர்ஸில்வர் என்று ஒன்று ரொம்ப நடமாடுகிறது. ஸ்வாமி தீபம் உள்பட கலசமாக வைக்கிற குடம் உள்பட எல்லாம் அதில் வந்தவிட்டது. இத்தனை காலம், இரும்புப் பாத்திரம் உதவாது என்ற சாஸ்திர விதியை அநுஸரித்து வந்தவர்களும் இப்போது எவர்ஸில்வரை உபயோகிக்கிறார்கள். “இரும்பு கூடாது என்றதற்குக் காரணம் அது துரு பிடிக்கக்கூடும் என்பதுதான்; அதனால் அதில் ஆரோக்கிய ஹானி உண்டாக்குகிற ஹேது உள்ளது என்கிறதுதான். ஆனால் அந்த இரும்பை இப்படி எவர்ஸில்வராக ‘ப்ராஸஸ்’பண்ணிவிட்டபின், அதில் துரு பிடிப்பதற்கேயில்லை. அது health hazard ஆகாது. இரும்பின் தோஷத்திற்குப் பரிஹாரம் பண்ணிவிட்டதால் அதை உபயோகிக்கலாம்” என்று சொல்கிறார்கள். துருவுக்காகத்தான் இரும்பு கூடாது என்று இவர்களாகவே அநுமானம் பண்ணிக்கொண்டு இப்படி எவர்ஸில்வரை சாஸ்திரோக்தமானதாக ஆக்கிவிட நினைக்கிறார்கள். ஆனால் சாஸ்திரம் இரும்பு கூடாது என்றது துருவுக்காக அல்ல; அல்லது துருவுக்காக மாத்திரம் அல்ல. அது பாபகரமானது, ஆஸுர [அசுரத்தனமான] சக்திகளையும், சனைச்சரன் மாதிரி உக்ர க்ரஹங்களின் சக்தியையும் நம்மிடம் இழுத்து வரும் என்பதால்தான் கூடாது என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. எவர்ஸில்வரிலும் இந்த தோஷம் போய்விடாது. ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Nowadays, Ever-silver has come to be widely used. The lamp used for worship and the pot for keeping the kalasam are being manufactured in this metal. Even persons who used to observe the scriptural rule that iron vessels should not be used for worship have started using Ever-silver. Their argument is that use of iron vessels was prohibited for the reason that iron could get rusted and thus was a health hazard and in the process of making Ever-silver this factor is removed and hence the hazard to health is also removed. They declare that the Ever-silver can be used after performing the necessary expiation for the use of iron. They assume that iron was prohibited only on account of the formation of rust and thus Ever-silver can be made scripturally admissible. But sastras had prohibited use of iron not merely for reasons of rust. Iron is sinful. It can absorb demonic powers and the powers of virulent planets like Saturn and bring them to us. This negative factor is present in Ever-silver also. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply