‘வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது’ என்பார்கள். இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை என்று இருபது, முப்பது வருஷம் முந்தி சொல்லி வந்தார்கள். இப்போதோ, ‘மநுஷ்ய சரீரத்தில் எலெக்ட்ரோ-மாக்னடிஸ் வேவ்’களுக்கு மூலஸ்தானம் brain (மூளை) தான். உலகத்தை எடுத்துக் கொண்டால் அதன் ‘மாக்னடிக் ஃபீல்டி’ன் மூலஸ்தானம் North Pole [வட துருவம்]. ஆகையால் நம் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுத்துக் கொண்டால் மூளையின் சின்ன காந்த சக்தியும் பெரிய காந்த சக்தியும் ஒன்றுக்கொன்று ‘க்ளாஷ்’ஆகி, மூளை பாதிப்புக்கு ஆளாகிவிடும் என்று ஸயன்டிஸ்ட்கள் சொல்கிறார்கள். அதே ஸமயம் ஜபம், தியானம் பண்ண வடக்குப் பார்த்து உட்காருவது நல்லதென்று சொல்லியிருக்கிறது. தூக்கத்தில் புத்தியும் மனஸும் நமக்கு வசப்படாமல், தன்னையும் மீறித் தூக்கம் நம்மை வசப்படுத்தி ஓய்ச்சலில் அடித்துப் போடுகிறது; அப்போது புத்தி களைத்துக் கிடக்கிறது; அல்லது நம் வசத்திலில்லாததால் கன்னா பின்னா என்று கனவுகளைக் கல்பித்துக் கொள்கிறது. இம்மாதிரி ஸமயத்தில் இந்தச் சின்ன மாக்னட்டை, லோகத்தின் பெரிய மாக்னட்டுக்கு நேரே பிடித்தால் தாறுமாறாய்விடும். ஆனால், ஜப, த்யான காலத்தில் நாம் மனஸை அப்படியே அடக்கி வசப்படுத்த முடியாதவர்களாயிருந்தாலுங்கூட, அப்படிப் பண்ண வேண்டும் என்ற லக்ஷ்யமாவது நமக்கு இருக்கிறது. ஈஸ்வரன் விஞ்ஞானக் கருவிகளுக்கு த்ருஷ்டமாயுள்ள மின்ஸார காந்த சக்தியாய் மட்டுமில்லாமல், நம் லக்ஷ்யத்தைத் தெரிந்து கொண்டு அதற்கு அருள் செய்கிறவனாயும் இருப்பதால் த்யான காலத்தில் அதே காந்த சக்தி நமக்கு நல்ல ‘பவரை’க் கொடுக்கும்படிப் பண்ணுகிறான். ஷாக் அடிக்கிற எலெக்ட்ரிஸிடியைக் கொண்டே நாம் எத்தனையோ நல்லதைப் பெறவில்லையா? அந்த மாதிரி பிராணசக்தி நம் தேஹத்திலுள்ள சக்கரங்கள் வழியே போகிறதிலும் சயனநிலை, த்யானத்தில் உட்காரும் நிலை ஆகியவற்றுக்குள் ரொம்ப வித்யாஸமுண்டு. அதுவும் தவிர, வடக்கே மேருவில் இருக்கிற யோகிகள், ஞானிகள் ஆகியோரின் அநுக்ரஹ Wave -ஐயும் அந்தப் பக்கம் பார்த்து ஜபம் பண்ணும்போது சற்று ஸுலபமாக கிரஹிக்கலாம். இப்படி ஒருத்தரின் உள்தன்மை, அன்பு முதலானவை வெளியே பரவுவது, தந்தியும், ஃபோனும் இல்லாமலே மனஸுக்கு மனஸ் தொடர்பு கொள்கிற ‘டெலிபதி’ இவற்றையும் விஞ்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்குப் பார்த்து ஒன்றைப் பண்ணுவது, இன்னொன்றைப் பண்ணாததற்கு இத்தனை அர்த்தமிருக்கிறது! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
There is an ancient saying that one should not lie down with the head towards the North. Twenty or thirty years ago, people used to call this a superstition. But now the scientists declare that since the brain is the core of the electric magnetic waves in the human body and North Pole is the core of the electro magnetic waves of this earth, lying with one’s head to the North may lead to clash between the small and the big magnets and result in disturbances of the brain. On the other hand, during meditation one is advised to sit facing the North. While we are asleep, the brain and heart are not under our control and in fact, sleep overcomes us without our being aware of it. During this time, our mind is exhausted or in other words, since it is not in our control, it becomes the source of meaningless dreams. In such a state, if the small magnet in our body is aligned with the big magnet of this universe, the results may be disastrous. But during meditation, even if we are not able to control our mind, at least one is striving to do so. Eswara is not only the magnetic power behind all scientific instruments but He is also aware of our spiritual ambitions and blesses us to achieve the same. So he ensures that during meditation this magnetic power infuses us with positive energy. The very same electricity which can give us a shock can also be used positively. There is a difference in the way this electro magnetic force courses through the chakras of our body (the power centers in our spine) while we are sitting and while we are lying down. Moreover, it is easier to absorb the waves of blessings from the sages and the great souls who are sitting on the Meru to the North. Thus the facts of telepathic communication and the spread of love and inner nature are being scientifically acknowledged. There is so much behind the logic of doing and not doing certain things facing the North. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Facing north while sitting and not while sleeping is to obtain maximum benefit from electro magnetic force.