Jaya Jaya Sankara Hara Hara Sankara – This newsletter has been loaded with Periyava miracles end to end 🙂 What a grace for Shri Balachandar! Enjoy…..
Many Jaya Jaya Sankara to Shri B.Narayanan mama for the translation and Smt. Savitha Narayan for the Tamizh typing. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (24-9-2009)
தாபம் தீர்த்த தயாநிதி
அந்த சர்வேஸ்வரரே உலகோர் அனைவரிடத்திலும் கொண்டுள்ள அபரிமிதமான அன்பினால் நம் எல்லோருக்கும் புலப்படும் தன்மையோடு எளிய திருஉருவாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவளான திருஅவதாரத்தில் பரப்பிரம்மரிஷியாம் சுகமுனிவரின் நேர்த்தியோடு நமக்கெல்லாம் அருளாசி பொழிகிறார்.
அப்பேற்பட்ட மாமுனிவராய்க் காட்சிதரும் அந்த காருண்ய தெய்வம் கேட்பவர்க்குக் கேட்டதை அருளும் அதிசிய சம்பவங்கள் ஏராளம்.
“மகா பெரியவாளே! உம்மை பரம அனுக்ரஹ தெய்வமாக அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்களே! ஆனால் எனக்கு மட்டும் நடமாடும் கடவுளான உம்மைத் தரிசிக்கும் பாக்யம் வெகு நாட்களாக கிட்டவே இல்லையே. பல வருடங்களுக்கு முன் என் பால்யத்தில் எங்கள் ஊருக்கு விஜயம் செய்தபோது தரிசித்ததற்குப் பின்பு இது நாள் வரை அந்த பெரும்பாக்யம் கிட்டாதவனாய் எங்கோ வடக்கில் அருளாசி புரியும் உம்மை வந்து கண்குளிரத் தரிசிக்க இயலாத வறுமை நிலையில் உள்ளேனே……” இப்படி அந்த எளிய பக்தராம் பாலசந்தர் என்பவர் அன்று சாயங்காலம் நினைத்து நினைத்து உருகியதில் அவர் கண்கள் குளமாகி தாரைதாரையாய்க் கண்ணீர் பெருகியது.
எங்கோ ஊரில் இருந்த தன் பெற்றோர் மற்றும் கூடப் பிறந்த சகோதரிகளுக்காக ஒருவேளை சாப்பாட்டிற்கு வழி செய்யும் மிகமிக சொற்ப வருமானத்தில், திருவான்மியூரில் தனது உறவினர் வீட்டில் அண்டிக்கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருந்த பாலசந்தருக்கு சென்னையைத் தாண்டி பயணம் செல்லும் அளவிற்கு பண வசதியில்லை.
ஆபீஸ்விட்டு வந்து அந்த சாயங்காலம் ஏதோ ஒரு வார இதழில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைப் பற்றி வந்த கட்டுரையைப் படித்தபோதுதான் அந்த மகானை பல வருடங்களாகத் தரிசிக்க இயலாத தன் தரித்திர நிலைமையை எண்ணி இப்படிக் கண்ணீராய் பெருகி மனமும் பாரமாகியது.
இந்த தாபத்தோடு உறக்கமும் வந்தது. உறவுக்கார மாமி எத்தனை வற்புறுத்தியும் அந்த இரவில் ஆகாரம் ஏற்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அழுத கண்களோடு தூங்கியே போனார்.
காலை புலர்ந்தது.
“பாலசந்திரா! அழுதாயா என்ன?” என்று அந்த உறவுக்காரர்கள் கேட்குமளவிற்கு முன்நாள் இரவில் பெரியவா தரிசன ஏக்கத்தால் விளைந்த துக்கம் இந்த பக்தரின் மனதை மீறிமுகத்தில் அழுத சுவடுகள் பிரதிபலித்தது.
ஆபீஸ் சென்றால், அங்கேயும் இதே விசாரிப்புதான்.
“என்ன ஸார்? முகம் ஒரு மாதிரி கலங்கி இருக்கு? அழுதீங்களா என்ன?”
தன் ஆத்ம நண்பரிடம் மட்டும் தன் ஆதங்கத்தை சொல்லிவிட்டு பாலசந்தர் அலுவலக பணிகளைத் தொடங்க உட்காரப்போனார்.
அப்போது கம்பெனி முதலாளி உள்ளே நுழைந்தார். விடுவிடுவென தன் அறையை நோக்கி நடந்த முதலாளி இவருடைய இருக்கைக்கு பக்கம் வந்தபோது “பாலசந்தர்! கொஞ்சம் உள்ளே வா” என்றபடி போய்விட்டார்.
ஏதோ அலுவலக அவசர விவகாரம் எதையோ சொல்லத்தான் அழைக்கிறாரோ என்று பாலசந்தர் உள்ளே போனார்.
“பெரியவா எங்கே இருக்கார்ன்னு உனக்குத் தெரியுமா?” எடுத்த எடுப்பிலேயே முதலாளியிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்பதை எதிர்ப் பார்க்காத நிலையில் பக்தருக்கு ஆச்சர்யம் மேலிடலானது.
“மகாகான் பக்கத்திலே எங்கேயோ இருக்கா போலிருக்கு. நான் தரிசனம் பண்ணலாம்னு நினைத்து ரயில்வே ரிசர்வேஷன் பண்ணினேன். ஆனா எனக்கு ஆபீஸ்லே அவசரமான மீட்டிங் இருக்கு . அதனாலே போக முடியாது. இந்த ஃபஸ்ட்கிளாஸ் டிக்கட்டை கேன்ஸல் பண்றதுக்கு பதில் யாரையாவது போக சொல்லலாமேன்னு தோணறது. உன் ஞாபகம் வந்தது. நீ கட்டாயம் போகணும்….. என் சார்பா நீ போய் பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு வா….உன் பேருக்கு டிக்கட்டை மாத்தித் தர ஏற்பாடு செய்யறேன். நீ ரெடி பண்ணிண்டு கிளம்பு.”
இப்படி அதிரடியாக கம்பெனி முதலாளி ரூபத்தில் கருணை தெய்வமாம் காஞ்சி மகான் தன் தாபத்தைத் தீர்ப்பதுபோல் கட்டளையிட பாலசந்தர் திக்குமுக்காடி சொல்வதறியாது நின்றார்.
ஒப்புதலாக தலையாட்டிவிட்டு வெளியே வந்தவருக்கு மற்றொரு கவலை கவ்விக்கொண்டது.
‘அது சரி! இப்படி தரிசனம் செய்ய முதல் வகுப்பிலேயே டிக்கெட் கிடைத்துவிட்டது. அதற்காக தன்னிடமிருந்து கம்பெனி பாஸ் பணம் வாங்க நினைக்கமாட்டாரென்பதும் உறுதிதான்: இருந்தாலும் மகாகானிலிருந்து பெரியவா இருக்கும் இடத்திற்கு போவதற்கும், தரிசித்த பிறகு சென்னை திரும்பவும் மேல் கொண்டு வழிநடை செலவிற்கெல்லாம் பணம் வேண்டாமா” இப்படி தன் ஏழ்மை எழுப்பிய எண்ண ஓட்டங்களோடு பாலசந்தர் தன் இருக்கைக்கு வந்து தன் ஆத்ம நண்பரிடம் நடந்ததைக் கூறினார்.
“ஏன் கவலைபடறே! நீ நினைச்சது போலவே பெரியவா இப்படி ஒரு கருணையை பொழிஞ்சிருக்காளே……நீ பயப்படாம அவசியம் கிளம்பு.. உனக்கு நான் நூறு ரூபாய் தர்றேன்… திரும்பி வர சார்ஜ் அதுக்குள்ளேதான் இருக்கும்.”
தயங்கியபடி அந்த நூறுரூபாயை பெற்றுக்கொண்ட பாலசந்தருக்கு அந்தக் கடனை முழுசாய் அப்படியே திருப்ப முடியாத நிலையினால் “நான் உனக்கு இதை மாசம் பத்துரூபாயாய் பத்து மாதத்துக்கு திருப்பித் தந்துடறேன்” என்ற ஒரு பாதுகாப்பான ஒப்பந்தம் செய்து கொண்டார்.
தன் வாழ்நாளில் சென்னை எல்லையைத் தாண்டாதவராய் அந்த ரயில் பயணத்தில் பாஷை தெரியாததால் மகாகான் வந்து இறங்கும்வரை பக்தருக்கு லேசான பயம் இருந்தது.
மகாகானிலிருந்து, ஸ்ரீ பெரியவாளெனும் மகான் இருக்கும் இடத்தை யாரிடம் கேட்பது என்று செய்வதறியாமல் அந்த நெடுஞ்சாலையில் நின்றபோது, கரும்பு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இவர் கையை அசைத்து நிற்கச் சொன்னதில் நின்றது.
தட்டுதடுமாறி தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் பாலசந்தர் சங்கராச்சாரியார் எங்கே இருக்கிறார் என்று கேட்க, லாரி ஓட்டுநர் மிகவும் பரிச்சியமானவன்போல இவரை ஏற்றிக்கொண்டு சில மைல்களுக்கு அப்பால் ஸ்ரீ பெரியவா அருளிக் கொண்டிருந்த இடத்தில் இறக்கிவிட்டான். தன் நூறு ரூபாயில் இந்த லாரி டிரைவர் எத்தனை கேட்பானோ என்று பயந்த பக்தருக்கு அப்போதும் ஆச்சர்யம். இவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்கு விடுவதே சந்தோஷம் என்று எண்ணியவன்போல ஒரு பைசா வாங்கவும் அவன் மறுத்துவிட்டான்.
இப்படி தன் கோரிக்கையை அபார கருணையால் ஆட்கொண்டு நிறைவேற்றியருளும் மகானை நினைத்து உருகிய பாலசந்தர் அப்பேற்பட்ட பெரும் தெய்வத்தை தரிசிக்கும் பேராவலோடு காருண்யர் உறைவிடம் நோக்கி ஓடினார்.
தடுத்தாட்கொண்ட தெய்வத்தின் தரிசனத்தை கண்கொண்ட மட்டும் அனுபவித்தார். வாழ்வில் பெரும்பேறாக அதனை ஏற்றார். ஸ்ரீ பெரியவா திருவாய் மலர்ந்து ஒன்றும் பேசாவிடினும், எளிய தனக்கு இப்படி பிரத்யோகமாக அருளியதை உணர்ந்த பூர்ண நிறைவோடு பாலசந்தர் மனம் குதூகலித்தது.
தான் ஏங்கித் தவித்த பரமேஸ்வர தரிசனம் கிடைத்திட்ட மகிழ்ச்சியோடு மகாபிரபுவிற்கு மனதில் நன்றி தெரிவித்து அங்கிருந்து சென்னை திரும்ப ரயிலடி வந்தார்.
அங்கே சென்னை செல்லும் ரயில் வர இருந்தது. அந்த ரயிலுக்கு டிக்கட் வாங்க க்யூ நின்றது. இவரும் நின்றார். பையில் கடனாய் வாங்கிவந்த நூறு ரூபாய் அப்படியே இருந்தது. டிக்கட் போக மீதியை உடனே நண்பரிடம் திருப்பிவிட்டால் பிறகு மாதாமாதம் பத்து பத்தாய் அடைத்துவிடலாம் என்று நினைத்தவராய் க்யூவில் நிற்க, அந்த பாஷை தெரியாத இடத்தில் தமிழில் இருவர் பேசியது தேனாய் விழுந்தது. அவர்களும் க்யூவில் இவருக்கு பின்னால் வந்து நின்றனர்.
தமிழ் பேசுபவர்களை பார்த்த மகிழ்ச்சியில் இவர் இருக்க, அவர்கள் இவரைப்பார்த்து “நீங்க மெட்ராஸ் போறீங்க போலிருக்கே” என்று வலிய கேட்டனர். இவர் ஆம் என்றார். உடனே இவரை க்யூவிலிருந்து விலக்கி அழைத்துச் சென்றனர்.
“ நாங்க மூணு பேராய் ஸ்ரீ பெரியவா தரிசனத்துக்கு வந்தோம்… திரும்பிப்போக மூணு ஃப்ஸ்ட் கிளாஸ் டிக்கட் ரிசர்வ் பண்ணியிருந்தோம். எங்கள்லே ஒருத்தர் இப்படியே பாம்பே போறதாலே இந்த ஒரு டிக்கட்டை கேன்ஸல் பண்ணலாம்னு வந்தோம். எதுக்கு வீணா கேன்ஸல் பண்ணி பணத்தை வேஸ்ட் பண்ணுவானேன். நீங்க இந்த டிக்கட்லே வந்துடுங்கோ…”
இப்படி மேலும் மேலும் சற்றும் எதிர்பார்க்காமல் நடப்பவற்றை ஜீரணிக்க முடியாதவராய் “ இதற்கு ஒப்புக் கொண்டால் அந்த முதல்வகுப்பு டிக்கெட் சார்ஜை இவர்கள் கேட்டால் என்ன செய்வது” என்று தயங்கி பாலசந்தர் நின்றார்.
“ஏன் யோசனை பண்றீங்க? உங்ககளை மாதிரி பெரியவா பக்தரை அழைச்சுண்டு போறதே திருப்தி….. நீங்க எங்களோடு வெறுமே வந்தாபோதும் டிக்கட்டுக்கு காசெல்லாம் வேண்டாம்” ராமன் என்ற அந்த பெரியவா பக்தர் இப்படிக் கூறி வியக்க வைத்தார்.
பாலசந்தருக்கு அன்று ஒருநாள் தரிசனம் கிட்டவில்லையே என்று நினைத்து அழுததுபோல இப்பேற்பட்ட அபார கருணையை தாங்கமுடியாத ஆனந்தத்தால் திரும்பவும் கண்ணீர் பெருகியது. மகான் இருந்த திசையை நோக்கி கை கூப்பி மனம் உருகினார்.
தன் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற ஒரு பைசாவும் செலவு வைக்காமல் கடன் வாங்கிக் சென்ற நூறு ரூபாயையும் முழுசாக அப்படியே திருப்பும் வண்ணம் இத்தனை பாங்கோடு ஒரு தெய்வம் அருளமுடியுமா என்று எண்ண எண்ண அந்த எளிய பக்தருக்கு என்றென்றும் வியப்பு நிலைக்கிறது.!
இதே பக்தருக்கு இன்னொரு நெகிழ்ச்சிதரும் சம்பவம். தன் தங்கையின் கல்யாணம் நிச்சியமாகிவிட்டது. எதிர்ப்பார்ப்புகள் இல்லை என்றாலும் குறைந்த பட்ச செலவான முப்பதாயிரம் ரூபாய்க்கே முழி பிதுங்கியது. வழியே தெரியவில்லை. ஒரே வழி ஸ்ரீ பெரியவாளெனும் அன்புத் தெய்வத்தின் சரணாகதம் மட்டுமே என்று பெரியவாளிடம் விரைந்தார்.
அங்கே பக்தர்கள் பெருங்கூட்டம். தன் குறையை சொல்லக்கூட நெருங்க முடியாதவராய் எங்கோ நின்றார். ஸ்ரீ பெரியவா அருகே ஆந்திராவை சேர்ந்த ஒரு செல்வந்தர். ஒவ்வொரு வருடமும் தன் நிலத்தில் அறுவடையான பின் பணத்தை கொண்டுவந்து ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பிப்பார். அதை வருடாவருடம் ஒவ்வொரு வேத பாடசாலைக்கு அதை கொடுக்க வேதநாயகரான பெரியவா கட்டளையிடுவார்.
“இந்த தரம் வேத பாடசாலைக்கு பதிலா அதைவிட முக்கியமான ஒரு உபகாரத்துக்கு இந்த பணத்தை சேர்த்துடுங்கோ” என்று அந்த தனவந்தரிடம் ஸ்ரீ பெரியவா கட்டளையிட்டபடி எங்கோ கோடியில் நின்ற பாலசந்தரை சைகைக்காட்டி அழைக்கிறார். இவரோ வேறு யாரையோ மகான் அழைப்பதாக நிற்க “உங்களைத்தான் பெரியவா கூப்பிடறார்” என்று பக்தர்கள் இவரை அனுப்பினார்கள்.
“இவன் தங்கைக்குக் கல்யாணம் பண்றான். அந்த பணத்தை இவன்கிட்டே கொடு” என்கிறார் ஸ்ரீ பெரியவா. பாலசந்தருக்கு நம்பவே முடியாத மலைப்பு! எப்படி யாரும் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லையே….எப்பேற்பட்ட கருணை!
தனவந்தர் அருள்கட்டளையை ஏற்று இவரிடம் தந்த தொகை என்னவாயிருக்கும்? வேறென்ன அதே முப்பதாயிரம்தான் என்பது முக்காலமும் உணர்ந்த மாமுனிவருக்கு தெரிந்திராமலா போகும்!
வலிய அருளும் இத்தகைய மாபெரும் தெய்வம் யாரையும் கைவிடாமல் காத்து சகல நன்மைகளையும் சகல மங்களங்களையும் அருளும் என்பது உறுதியல்லவா!
— கருணை தொடர்ந்து பெருகும்.
ஒரு துளி தெய்வாமிருதம்
வார்த்தைகளை உபயோகிக்கும்போது ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாகக் கணக்காகப் பேசவேண்டும். அதனால் நமக்கும் சரி, பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது மிச்சமாகும். வழவழவென்று பேசாமல் சுருக்கமாகவே சொல்ல வேண்டும் என்று பழகிக் கொண்டாலே புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
________________________________________________________________________________
(VAyinAl unnaipparavidum adiyEn paduthuyar kalaivAy PAsupathA ParanjudarE)
GREATNESS OF SRI SRI SRI MAHAPERIAVA. (24—09—2009).
THE TREASURE OF COMPASSION WHO QUENCHED THE BURNING HEAT.
SAksAt ParamEswaran Himself is showering His blessings on us in His simple AvatAr as Sri Sri Sri MahAPeriavA with the greatness of SukaBrahma Rishi.
There are many incidents where the Epitome of compassion had fulfilled the requests of many devotees.
Balachandar, a simple devotee was thinking about PeriavA and was in great mental anguish. “ MahAPeriavA! People eulogize you as the Epitome of compassion ! But I did not have the good fortune of having your Dharsan for many days. After I had your Dharsan in my childhood many years ago when you visited our village, I have not been able to have your Dharsan till today because of my poverty, as you are camping somewhere in the North.”—tears swelled up in his eyes and were rolling down his cheeks.
Balachandar was working for a small income in Thiruvanmiyur, to take care of his parents and sisters who were living in some other place, and he himself was staying with his relatives. His financial condition was so tight, that he had not been able to go anywhere beyond Chennai.
When he returned from the office one evening, he was reading an article on Sri MahAPeriavA in a weekly magazine and that was when he thought about his poverty stricken state which made it impossible for him to have His Dharsan and resulted in a heavy heart. He felt sleepy; in spite of repeated persuasion by the lady of the house, he refused to take dinner and slept off.
Came the morning.
His face showed signs of his crying in the night due to his craving for PeriavA’s Darsan and the relatives asked him whether he cried. When he went to the office, same question was asked by his colleagues also.
“Sir ! Did you cry? You are looking highly perturbed and agitated !”
Balachander confided in his close friend about his mental agony and started with his office work.
The company proprietor entered the office just then and on his way to his room, stopped at Balachandar’s place and told him, “Balachandar ! Come to my room!”
Balachandar went inside his room thinking that he had called him to talk about some office matter.
He was surprised when the proprietor asked him, “Do you know where Periava is camping now?”.
He himself answered, “I think He is somewhere near Mahagoan. I had made reservation in the train to go there; but I cannot go as there is an important meeting here for me. I do not want to cancel the ticket. Please take this ticket, go there on my behalf and have PeriavA’s Dharsan. I shall arrange to convert this ticket in your name. Get ready and start”.
Balachander was stunned at this sudden development; it looked that Sri Periava had given this order in the proprietor’s ‘RoopA’.
He nodded his agreement and came out of the room. But another worry caught hold of him.
“I got a first class ticket to go and have dharsan, alright. Boss may not ask me money for this ticket. But where is the money for the travel from Mahgoan to the place where Periava is camping and other expenses on the way and return ticket to Chennai after the Dharsan?”—his thoughts ran thus. He came back to his seat and told his close friend what happened.
“Why do you worry ? PeriavA has showered His Grace on you as per your wish. Start immediately without any worry. I will give you hundred rupees. The return ticket charge will be within that only”—-said the friend.
Balachandar accepted the money with hesitation. As he would not be able to return that sum in one lot, he made an agreement with his friend that he would return the amount in ten months at the rate of ten rupees per month.
As he had never crossed the border of Chennai in his lifetime and he could not speak any other language, he was feeling anxious and scared till he reached Mahagoan.
When he was standing on the road thinking whom to ask the way to where PeriavA was camping, a lorry laden with sugarcane came that way and he stopped it. He asked the driver in his half baked knowledge in Hindi, where Sankaracharyar was staying. The driver, as if he had known him well, took him in his lorry and left him in the place where Periava was camping. When he was worried as to how much money the driver would demand, the driver refused to accept even a paisa as if he was happy to be able to take him to Periava’s place.
Balachandar was overwhelmed by the compassion showered on him by Sri Periava. He ran inside to have His Dharsan. He had His Dharsan to his full satisfaction. Although Periava did not speak a word, he was happy that He fulfilled his desire and with that happiness, he started towards the railway station.
The train to Chennai was about to arrive. He stood in the queue; the hundred rupees which he got as loan was in his pocket. As he stood in the queue, he was thinking that he would return the balance money after paying for the ticket immediately after reaching Chennai and pay back the remaining outstanding at the rate of ten rupees per month. At that time, he heard two men talking in Tamil and coming and standing in the queue just behind him. They asked him if he was travelling to Chennai. When he replied in the affirmative, they took him away from the queue.
“Three of us came here for Periava Dharsan. One among us is proceeding to Bombay(Mumbai); we had reserved three first class tickets to Chennai. We came here to cancel one ticket. Now that you are also going to Chennai, you can travel in this ticket with us. Why cancel and waste the money?”
He was not able to digest the things happening one after the other this way; he hesitated thinking whether they would ask him to pay the ticket amount.
One of them, Sri Raman, said, “Why are you thinking? We are happy that we are able to take with us a Periava devotee like you. You need not pay us anything for the ticket. Do come with us.”
Tears swelled up in his eyes thinking about the abundant compassion showered on him now, the same way like on that day when he cried because of his inability to have His Dharsan. He turned in the direction where that MahAn was staying with folded hands.
When he thought whether a God could bless him this way by fulfilling his desire without having to spend a paisa, his amazement was never ending.
There was another incident connected with the same devotee. His sister’s marriage had been fixed. Even for the minimum expenditure of thirty thousand rupees, he could not find a way to arrange. There was only one solution and that was going and surrendering at the feet of PeriavA; and so he went to see Him.
There was a big crowd of devotees. Unable to go anywhere near Him, Balachandar stood some distance away. A rich man from Andhra, who comes to Sri Periava every year after the harvest, submits a big amount to Him. He was standing before Periava with his offerings. Sri Periava normally directs him to give the money to a Veda Patasalai.
“This time, give this money to another big requirement” saying this Sri Periava signaled to where Balachandar was standing. He thought Periava was calling someone else. When others told him that Periava was calling him only, he went near Him.
Sri Periava told the rich man, “This man is conducting his sister’s marriage. Give this money to him”. Balachandar could not believe what was happening as he had not told anybody about his predicament.
The amount was exactly thirty thousand rupees ! Sarvagnar knows everything!
COMPASSION WIL CONTINUE TO FLOW……..
A DROP OF NECTAR.
When we speak, not one word should be more than necessary. We should talk briefly and to the point. This will save time both for us and for those who are hearing. When we practice talking briefly, our mind will become sharper and what we speak will shine better.
(PAduvAr pasi theerppAi ParvuvAr pini kalaivAy)
DhEvAram by Sundaramurthy Swamigal.
Categories: Devotee Experiences
Maha Peryiavaa is none other than God in human form. I feel blessed to know our Peryiavaa blessing such a deserving soul.
Like every devotees I could not help tears running down my cheeks.
Maha Peryiavaa’s Karunnai can melt anyone and everything
Maha Peryiavaa is feel depressed that I can no more see you through my physical eyes but I’m blessed to feel him in my heart through numerous darshan I had during his avatar amoungst us in this planet.
Maha Peryiavaa Saranam
No words only Amanda kanneer rolling down my cheeks after reading the episode.Jaya Jays Sankar
No words. Only tears from my eyes. Periyava saranam
This incident made me surrender to His feet as I am at great distress at this moment due to other’s inconsistent promise.Jaya Jaya Shankara Hara Hara Shankara….