எல்லாருக்கும் எல்லா ஸயன்ஸையும் சொல்லிக் கொடுத்துவிட்டால் ஒவ்வொருத்தனும் ‘ஆடம் பாம்(ப்)’ பண்ணி வைத்துக் கொள்வதில்தான் முடியும் என்றுதான், கெடுதல் வராமலிருப்பதற்கு நாம் பண்ணவேண்டியதை மட்டும் சொல்லி, அதன் காரணத்தை, “ராஹுப் பாம்பு ஸுர்யனை முழுங்கிற்று” என்பது போலக் கதா ரூபமாகப் பாமர ஜனங்களுக்குச் சொன்னார்கள் என்று ஒரு கட்சி. இதைக்கூட நான் முழுக்க ஸரி என்று சொல்லமாட்டேன். எல்லாருக்கும் விஞ்ஞான மர்மம் தெரிந்துவிட்டால் அனர்த்தமாகும் என்று நினைத்தது வாஸ்தவம். ஆனால் அதற்காகத்தான் விஞ்ஞான உண்மைகளுக்குப் பதில் கதைகளை இட்டுக்கட்டிச் சொன்னார்களென்பது ஸரியில்லை. இம்மாதிரிக் கதைகளும் நிஜம் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பகவானின் லீலையில், நமக்கு ஸாத்யமாகத் தோன்றாத என்னென்னவெல்லாம் நடக்குமோ? நமக்கு எப்படித் தெரியும்? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Some people opine that our ancestors did not want to reveal the scientific facts to all and sundry. This can have dangerous results like making of atom bombs and hence they gave us directions to act in a way to prevent any harm and gave us the reasons in the form of stories like that of Rahu swallowing the Sun. I will not agree with this completely. It is true that it was thought that revealing the mysteries of Science to all and sundry would have dangerous effects. But we cannot say that these stories were mere inventions which were put in the place of these scientific facts. We should accept these stories to be true too. What we consider to be impossible may be possible when God wills so. How do we know about it? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Maha Periyava Tiruvadi saranam.