Periyava Golden Quotes-594

கொஞ்சநாள் முந்தி [பத்திரிகைகளில்] பார்த்திருப்பீர்கள். ரஷ்யாக்காரன் கம்யூனிஸ்ட், நிரீச்வரவாதி. ஆனால் இங்கே நாம், “இதென்ன ஹோமம் என்று சொல்லிக் கொண்டு வீட்டையெல்லாம் புகையாக்கிக் கொண்டு, கண்ணும் கரிக்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?” என்றால், ரஷ்யா தேச ஸயன்டிஸ்ட்கள் வறட்டிப் புகையினால் அடாமிக் ரேடியேஷன் [அணுச் சிதைவின் கதிரியக்கம்] உள்படப் பலவித பொல்யூஷன்களைப் போக்கிக்கொண்டு விடலாமென்று சொல்லி, நம்முடைய ஹோமத்தைப் புகழ்ந்திருக்கிறார்கள். இதேபோல ஹோமத்தில் போடப்படும் பலவிதமான ஸமித்துக்களின் புகை பரவுவதும் க்ருமி நாசினியாக (antiseptic) உதவுகிறது என்று முன்னே டாக்டர்கள் சொன்னதுண்டு. தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis [அழுத்தமான அடிப்படை] இருக்கிறது என்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

You might have seen this matter in the Press recently. Russians are communists who deny the existence of God. But while in our country, we moan over the smoke and watering eyes when we perform a homam in our houses. The Russians have discovered the beneficial effects of the same. They have praised the effects of the smoke from the cow dung cakes which they state can counteract many pollutions including atomic radiation. Even earlier the doctors had stated that the smoke from the herbs used in the homam acts as an antiseptic. They state that there is a very sound medicinal and scientific basis for the herbs like dharbai, vilvam, and thulasi used in our poojas and rituals. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Out of ignorance about our sacred Vedas and puranas we tend to claim rationalists and progressive. It is pity.

  2. Please no apostrophe after pollution in the tenth line from top. It should be pollutions

Leave a Reply

%d bloggers like this: