Periyava Golden Quotes-593

ஸமீப காலமாக நம் ஆசாரங்களைப் பற்றி இதற்கு முந்திய தலைமுறைக்கு இருந்ததைவிடக் கொஞ்சம் கௌரவ புத்தி உண்டாயிருப்பதைப் பார்க்கிறேன். முன்னே இங்கிலீஷ் படித்தவர்களென்றால் நம் ஆசாரம் அவ்வளவுமே பேத்தல் என்று நினைப்பவர்களாயிருந்தார்கள். ஆனால் நான் கொஞ்ச நாளாக ஒரு வேடிக்கை பார்க்கிறேன் – ஸயன்ஸும் ஸ்பிரிசுவாலிடியும் [ஆத்மிகமும்] ஒன்றுக்கொன்று விரோதமானதுபோல் தோன்றினாலும் ஸயனஸ் அபிவிருத்தியாகிக் கொண்டு வருவதாலேயே, புதிசு புதிசாக டிஸ்கவரி செய்யும்போது, “இதென்னடா ஆச்சர்யமாயிருக்கிறது! நாம் ரொம்பவும் அறிவிலே பின் தள்ளி நின்றவர்கள் என்று நினைத்த ஆதிகால இந்தியர்கள் இந்த விஞ்ஞான உண்மைகளை, நமக்கு இருக்கிற லாபரட்டரியும் இன்ஸ்ட்ருமென்டுகளும் இல்லாமலே எப்படியோ கண்டுபிடித்து அவர்களுடைய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறதே!” என்று அதிசயப்படுகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

I find that in recent days, the current generation seems to accord more respect to our Aacharam than the earlier generation. Those who had been educated in the Western system used to think that our traditions were absurd. But I am noticing something peculiar these days. As more and more discoveries are made with the development of Science, people are surprised to find that people of ancient India had discovered these scientific facts and incorporated them in our scriptures without the facilities of laboratory and the instruments that we possess. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. HE once cleared doubts on astronomy to a batch of foreign students citing Veda slogam who were surprised and understood the depth of details in the text treasure of The Hindu knowledge.

Leave a Reply

%d bloggers like this: