Jaya Jaya Sankara Hara Hara Sankara – Great incidents!! What an anugraham for Gurjathi lady and Smt. Jayalakshmi Mami…..
Many Jaya Jaya Sankara to Shri B.Narayanan mama for the translation and Smt. Savitha Narayan for the Tamizh typing. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (28-8-2009)
எங்கோ எங்கிருந்தோ பொழியும் அருள்
சுகப்பிரம்மரிஷி போன்ற மேன்மையுடன் திகழ்ந்து, நம்மிடையே பரம காருண்யம் பொழியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் எனும் நடமாடும் தெய்வம் சாட்சாத் சர்வேஸ்வரரே என்பது பலரின் அனுபவமான உண்மையாகும். எங்கும் வியாபித்தருளும் பரப்பிரம்மமாய் அந்தக் கருணைத் தெய்வம் சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் தன் அருளைப் பொழிந்த அற்புத சம்பவங்கள் பலவாகும்.
அது ஒரு குஜாராத்திக்குடும்பம். குஜாரத்திலேயே வாழும் வடகத்தியர்கள். தென்னாடுடைய சிவனான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைப் பற்றி அறியாதவர்கள்.
ஒரு நாள் காலை அந்த குஜாரத்திப் பெண்மணி தன் கணவரிடம் ஒரு குறிப்பிட்ட குஜாராத்தி தினசரி பத்திரிக்கையை உடனே வாங்கி வரும்படி கேட்கிறாள்.
கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவியோ தினமும் பேப்பர் படிப்பவள் அல்ல. அந்த வீட்டிலும் தினமும் பேப்பர் வாங்கிச் செய்திகளை அறியும் வழக்கமில்லாதிருந்தது. அப்படியிருக்க காலை நேரத்தில் அந்த மாது இப்படி, குறிப்பிட்ட தினசரியைக் கேட்பது புரியாத புதிராக இருக்கவே அதை கணவன் வித்யாசமாக நினைத்தாலும் அத்தனை அக்கறைக் காட்ட நினைக்கவில்லை.
“நீ என்ன தினமும் பேப்பரை படிக்கிறவளாக்கும்? முதல்லே காலையிலே டீ போடு. குடிக்கணும்” என்றார் கணவர் அலட்சிய பாவத்துடன்.
“முதல்லே போய் அந்த பேப்பரை வாங்கிட்டு வாங்க….. அப்புறம்தான் உங்களுக்கு டீ போடுவேன்” தீர்மானமாக மனைவி கூறி நிற்கிறாள்.
மனைவியை புரிந்துக் கொள்ள முடியாதவராய் இவர் கடைக்குச் சென்று அந்த தினசரியை வாங்கித் திரும்புகிறார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவி அதை ஆவலோடு பிடுங்காத குறையாக வாங்கி புரட்டிப் பார்க்கிறாள்.
தினசரியின் கடைசிப் பக்கத்தில் ஒரு பக்கம் முழுவதுமாக அந்த விளம்பரம். ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கரையில் ஸ்ரீ பகவத் பாதாளான ஆதி சங்கரருக்கு மண்டபம் எழுப்பி பாதுகை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடப்பதற்கான முழு பக்க விளம்பரம் அது. அதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தண்டத்தோடு அருள்காட்சி தரும் முழு நீள திருவுருவப் படம் கண்கொள்ளாக் காட்சியாக அச்சாகி மகிழ்வித்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் குஜராத்தி அம்மையாருக்கு மெய்சிலிர்ப்பது போலானது.
“இவர்தான்… இவரே தான்” என்று ஸ்ரீ பெரியவாளை தினசரியில் பார்த்த மாது குதூகலத்துடன் திரும்பத் திரும்ப அதிசியப்பட்டவளாய் குரலெழுப்பினாள்.
கணவருக்கு குழப்பம் பன்மடங்கானது.
“நீ என்ன சொல்றே? ஏதோ பேப்பரை வாங்கிட்டு வரச் சொன்னே, வாங்கிட்டு வந்ததும் அதைப் பிரித்து ‘இவர்தான் இவர்தான்” னு கூச்சல் போடறே, உனக்கென்ன ஆச்சு” என்று சற்றே சினம் கொண்டவராகக் கேட்டார்.
“இவர்தான் என் கனவில் வந்த மகான்” என்று மனைவி கூறியபோது ஓகோ ஏதோ கனவு கண்டிருக்கிறாள் போலும் என்று அவருக்கு சற்றே தெளிவாகத் தொடங்கியது.
“சரி! கனவு கண்டயாக்கும்? ஆமாம் இவர்தான் உன் கனவிலே வந்தவர்னு எப்படி சொல்றே” தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் முனைப்போடு இவர் கேட்டார்.
அப்போதுதான் அந்த அதிசயத்தை குஜராத்தி மாது எடுத்தியம்பினாள்.
“எனக்கு ஒரு சொப்பனம் வந்தது. விடியற்காலையில் நான் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு சந்யாசி என் முன் தோன்றுகிறார். அவரை ஒரு சாதாரண சாமியாராய் நான் காணவில்லை. தேஜோமயமாக அவர் ஜொலிப்பதைக் காணும்போது என் உடலெங்கும் சிலிர்க்கிறது. அப்பேற்பட்ட ஜோதி சொரூபரை நம் கிரஹத்திற்குள் வரும்படி அழைக்கத் தோன்றுகிறது. ‘உள்ளே வந்தருளுங்கள்’ என்கிறேன். மகான் உள்ளே வந்து அமர்கிறார். நமஸ்கரித்து எழுகிறேன். “நீ என்னைப் பார்க்க வரலைன்னாலும் நான் வந்துட்டேன்” எங்கிறார் அவர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “சுவாமி! நீங்க யாருன்னு எனக்குத் தெரியலையே…. நீங்க எங்கே இருக்கீங்கன்னும் தெரியாதே! இதெல்லாம் தெரியாத போது தங்களை நான் எப்படி வந்து தரிசிப்பது…. ஆமாம் நீங்க யாரு?”ன்னு வெளிப்படையாகவே கேட்டு விடுகிறேன். அப்பத்தான் இந்த குஜராத்தி பேப்பரை சொல்லி, அதை வாங்கிப் பாரு தெரியும்”னு சொல்கிறார். அப்போ சொப்பனம் கலைஞ்சு நான் எழுந்து விட்டேன்…. அதனாலேதான் இந்த பேப்பரை காலையில் எழுந்ததும் வாங்கிட்டு வரச் சொன்னேன். இதிலே பிரகாசமா காட்சித் தருகிறாரே இதே மகான்தான் என் கனவிலே வந்துக் காட்சி தந்தவர்… …. இந்த மகானை எங்கிருந்தாலும் நாம போய் தரிசிச்சாகணும்”.
என ஒரு வியத்தகு சொப்பனத்தைப் பற்றி தன் மனைவி விவரித்தபோது, கணவருக்கும் பெரும் அதிசயமாக இது தோன்றியது.
ஏதோ தெய்வ கட்டளைதான் இது என உணர்ந்தார். உடனே மகான் இருக்கும் இடத்தை அறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
விளம்பரத்தில் காஞ்சி காமகோடிபீடம் என்று கண்டிருக்க , குஜாத்தியார் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டு வருகிறார்கள்.
அங்கே வந்து விசாரித்தபோது ஸ்ரீ பெரியவா, அங்கில்லை என்றும், இளையாதங்குடி எனும் ஊரில் அருளிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. குஜராத்தி தம்பதியினர் அசரவில்லை. உடனே இளையாத்தங்குடி புறப்பட்டு விடுகிறார்கள்.
அங்கே சென்று தங்களைப் பற்றிக் கூறி, தாங்கள் மகானை தரிசிக்க வந்த நோக்கத்தையும் கூறி நின்றனர்.
மடத்து சிப்பந்திகள் மிகவும் களைத்துக் காணப்படும் இவர்களைப் பார்த்து “வெகு தூரத்திலிருந்து சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள். முதலில் ஸ்நானம் செய்து சாப்பிடுங்கள். அப்புறம் மகானை தரிசிக்கலாம்.” என்று பரிவோடு கூற, இவர்களோ அதற்கு மறுத்துவிட்டனர்.
“மகானை தரிசித்த பின்தான் எல்லாம்” என்று அவர்கள் உறுதியாய் சொல்லிவிட, இந்த விபரத்தை உள்ளே சென்று சிப்பந்திகள் ஸ்ரீ பெரியவாளிடம் கூறினார்கள்.
உடனே காருண்ய தெய்வமான ஸ்ரீ பெரியவா வெளியே வர, அந்த பெண்மணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு “நீ தான் ஈஸ்வரன், உன்னை விட்டுப் போகமாட்டேன்” என்று உருகி உருகி அழுகிறாள்.
கொஞ்சம் ஆசுவாசப்பட்டபின்னால் எல்லாம்வல்ல, எல்லாமும் அறிந்த தெய்வமாம் ஸ்ரீ பெரியவா,
“யாரு நீ? எங்கேர்ந்து வரே? என்னை எப்படி உனக்குத் தெரியும்?” என்று தனக்கும் தான் ஆட்கொண்ட பக்தைக்கும் இடையே இருந்த தெய்வ ரகசியத்தைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு காட்ட விரும்பாததுபோல கேட்டு நாடகமாடுகிறார்.
“மகானை சொப்பனத்திலே தரிசிச்சேன்” என்று அந்த மாது விவரிக்கிறாள். மகானின் சந்திரவதனத்தில் லேசான குறுநகை கீற்று!
“என்னிக்கு சொப்பனம் கண்டே?” என்று ஸ்ரீ பெரியவா கேட்கிறார்.
“ஒரு வாரம் முன்னால்” எங்கிறாள் பக்தை.
“ஒரு வாரம் முன்னாடின்னா….. பத்து நாளுக்கு முன்னாலே அன்னிக்கு பௌர்ணமியா இருக்குமோ?” என்று தான் பக்தைக்கு வலியப்போய் தரிசனம் கொடுத்ததை ஊர்ஜிதமாக்குவதுபோல் அன்றைய தினம் பௌர்ணமி என்பதை அங்கிருந்தோரெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் பெருங்கருணை தெய்வம் கேட்டு அனுக்ரஹம் செய்கிறது.
இப்பேற்பட்ட பாக்யம் பெற்ற குஜராத்தி மாதுவிற்கு உடலெங்கும் சிலிர்க்கிறது. தெய்வத்தை சாட்சாத் நேரிலே தரிசித்துவிட்டு பூர்ண ஆனந்தமயத்தோடு, பக்திப் பெருக்கில் மகானை வணங்கி எழும்போது, கண்களில் ஆனந்தப் பெருக்கு!
“இனிமே கவலைப்படாதே! நீ இருக்கிற இடத்திலேயே நான் இருப்பேன்” என்றுக் கனிவாக ஆசிர்வதித்து தன் அபார கருணையைக் காட்டி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அந்த குஜராத்தி தம்பதிகளுக்கு உத்தரவு அருளி அனுப்பினார்.
நிகரில்லா பாக்யமல்லவா?
தானாக நடந்தேறும்
இதைப்போல இன்னொரு சொப்பன தரிசன சம்பவத்தை பொள்ளாச்சி ஜெயலட்சுமி அம்மாள் அனுபவித்திருக்கிறார்.
அவர்கள் தஞ்சாவூரில் இருந்த சமயம், ஒரு நாள் விடியற்காலையில் ஜெயலட்சுமி அம்மாள் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவா காட்சி அருள்கிறார்.
“எனக்கு பாதாம் பருப்பு வாங்கித் தருகிறாயா?” என்று ஸ்ரீ பெரியவா கனவில் வந்து கேட்கிறார்.
அடுத்த சந்தர்ப்பத்திலேயே ஜெயலட்சுமி அம்மாள் பாதாம் பருப்பு வாங்கிக் கொண்டு காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அருளிக் கொண்டிருந்த மகானை தரிசிக்கச் சென்றார்.
அப்போது தவசீலர் அன்னபிட்சையை விட்டுவிட்டு வெறும் நெல்பொரியை மாத்திரம் சாப்பிட ஆரம்பித்திருந்த சமயம். இதை எப்படியாவது ஸ்ரீ பெரியவாளிடம் சேர்ப்பித்துவிட வேண்டுமென்ற பக்தை ஆசைப்பட்டாள்.
அங்கிருந்த ஒரு அம்மாள் “உக்ராணம் கோபாலய்யரை கேட்டுப் பாருங்கள்….. இதை அவர் எப்படியாவது பெரியவாளிடம் சேர்த்து விடுவார்” என்று வழி சொல்ல, ஜெயலட்சுமி அம்மாளும் சமையலறைக்குச் சென்றார்.
அங்கே கோபாலய்யர் பெரும் பரபரப்போடு காணப்பட்டார். யாரையும் ஏறெடுத்துப் பார்க்க சிந்தனை இல்லாதவராய் “இப்போது என்னை தொந்திரவு செய்யாதீங்க…….. பெரியவாளுக்கு பிட்சைக்கு நேரமாகிவிட்டது” என்று முகம் பார்த்துக்கூட பேசாமல் எதையோ தேடுவதிலேயே அவர் கவனமாய் இருப்பது இந்த பக்தைக்குத் தெரிந்தது.
“என்ன தேடிக்கொண்டிருக்கீங்க? ஏதாவது வாங்கி வரணுமா?” என்று ஆவலாக பக்தை கேட்டாள்.
“இங்கே எங்கே கிடைக்கும்? எல்லா பாதாம்பருப்பையும் ஒரே ராத்திரியிலே எறும்பு தின்னுடுத்து….தெரிஞ்சா மேனேஜர் கோபித்துக் கொள்வார். காஞ்சிபுரம் போனால்தான் கிடைக்கும்….. அதுக்குள்ளே பெரியவா பிட்சை முடிந்துவிடும்” என்று கவலையும் அலுப்புமாக கூறியபோது ஜெயலட்சுமி அம்மாளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
ஸ்ரீ பெரியவா சம்பந்தப்பட்ட காரியங்கள் யாவும் அந்த மகானின் அருளால் தானாகவேயல்லவா நடக்கிறது…….. காரியங்களை செய்பவர்கள் கேவலம் கருவிகள்தானே என்று பக்தை அனுபவித்துக் கூறுகிறாள்.
இப்படிப்பட்ட பேரனுக்ரஹ தெய்வத்திடம் நாம் கொண்டுள்ள பக்தியே பெரும்பாக்யமல்லவா? அதுவே நமக்கெல்லாம் சகல நன்மைகளையும் தந்து காத்தருளும் என்பது சத்யமல்லவா..
ஒரு துளி தெய்வாமிருதம்
நாம் ஒரு விவாஹம் செய்கிறோம், உபநயனம் செய்கிறோம். சீமந்தம் செய்கிறோமென்றால் அதற்கு இரண்டு நாள் முந்தியே, வேத பண்டிதரை அழைத்து அதிலே பிரயோகமாகிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம், சடங்குகளுக்கு என்ன தாத்பரியம் என்பவைகளை கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் செய்யும்பொது அதில் மனதார ஒரு பிடிப்பு ஏற்படும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
___________________________________________________________________________________
(VAyinAl unnaipparavidum adiyEn paduthuyar kalaivAy PAsupathA ParanjudarE)
GREATNESS OF SRI SRI SRI MAHAPERIAVA. (28—08—2009).
COMPASSION SHOWERED FROM SOMEWHERE
It is a truth experienced by many that the ‘walking God’ Sri Sri Sri MahAPeriavA, who shines with the greatness of SukaBrahma Rishi, and blesses all of us, is SAksAt SarwEswaran ony. There are many amazing incidents where The omnipresent Epitome of compassion, had blessed even unknown persons.
There lived a family in Gujarat. Those who live in the North like Gujarat, do not know much about Sri MahAPeriavA.
On one morning, the Gujarathi lady asked her husband to get her a particular newspaper immediately.
The husband did not understand. The wife was not used to reading newspaper everyday. The household itself never used to buy newspapers and read. That being the case, it was a puzzle for the husband but he did not give much importance to his wife’s request.
“Do you read newspaper daily? Let me first have a cup of tea!”—he replied ignoring her request.
“Please go and get me the newspaper first; after that only I will prepare tea!”—–replied the wife decisively.
Unable to understand his wife, he went to the shop and got the particular newspaper. No sooner did he enter the house than she plucked the paper from his hand and opened it.
There was a full page advertisement on the last page. It was for the ‘KumbAbishEkam’ of the ‘Mantap’ for Sri AdhiSankarar with His PAdhukAs, constructed near the ‘Agni Theertham’ in Rameswaram, There was an image of Sri MahAPeriavA with His ‘Dhandam’.
The Gujarathi lady was thrilled at seeing His image.
“Yes ! It is Him ! Him only !”—-she repeatedly started shouting excitedly.
The husband got more confused.
“What are you saying ? You asked me to get this newspaper, and after seeing it, you are shouting ‘It is Him ! It is Him only’! What happened to you ?”—asked the husband, a little irritated.
When the wife replied, “He is the MahAn who came in my dreams”, he understood that she must have had some dream.
“Alright ! You had a dream! How do you know that This was the person who appeared in your dreams?”—asked the husband to clear his doubts.
The Gujarathi lady narrated the amazing dream.
“I had a dream. I was doing a rangoli in the early morning in front of our house. A sage appeared before me then. To me He did not seem to be an ordinary ‘SAmiyAr’. My whole being was thrilled at seeing Him radiating light. I wanted to invite Him to come into our home. I told Him ‘Will you not come inside?’. MahAn came inside and sat down. I prostrated before Him. He said, ‘Although you did not come to see me, I have come to see you’. I did not understand anything. I said, ‘SwAmi ! I do not know who you are. Nor do I know where do you live. How do I, then, come and have your Dharsan?’ Then only He mentioned about this Gujarathi newspaper and asked me to have a look. The dream ended then and I woke up. That is why I asked you to get me this newspaper. The Sage who is giving Dharsan here is the same MahAn who came in my dreams. We must go and have His Dharsan wherever He is.”
The husband was also amazed on hearing this narration from his wife. He felt that this must be God’s behest. He started his efforts to find out the place where this MahAn would be.
As they found the name ‘Kanchi Kamakoti Peetam’ in the advertisement, they started for Kanchipuram.
When they reached Kanchipuram and enquired, they were told that the MahAn was in IlaiyAthankudi then. They did not give up but proceeded to IlaiyAthAnkudi. They reached the place and narrated their experience and informed them of the purpose of their visit.
The attendants took pity on them as they have travelled such a long distance and looked very tired. They told them to first have their bath, and eat some food, and then they could have His Dharsan.
But the couple refused and insisted that they wanted to have His Dharsan first and all else could be later. The attendants went inside and informed Sri Periava.
Sri PeriavA came out. The lady saw Him and started crying, “You are my God; I will always be with you”.
After she became calm, the omniscient MahAn Sri PeriavA asked her who she was, where was she coming from and how did she come to know of Him.
“I had your Dharsan in my dream.”—-she continued to narrate the whole episode. There was a smile on Sri PeriavA’s face.
“When did you have the dream?”
“A week back”.
“Would that be a full moon day?”—He was confirming to all those around, that He went and gave Dharsan to that lady on that day.
The lady prostrated before the MahAn with the blissful experience of having had the Dharsan of God Himself, tears of joy swelling up in her eyes.
“Do not worry. I will be there wherever you are”—-Sri PeriavA blessed the couple and sent them off.
What a blessing for them!
IT WILL HAPPEN BY ITSELF.
Smt.Jayalakshmi from Pollachi had a similar experience of ‘Swapna Dharsanam’.
They were living in Thanjavoor at that time. One early morning, Sri Periava appeared in Smt. Jayalakshmi’s dream. Sri PeriavA was asking her, ”Will you get me BAdhAm paruppu?”.
Smt. Jayalakshmi bought BAdhAm, and took it to Orirukkai where Sri PeriavA was camping. Sri PeriavA had by then given up eating rice and was consuming only ‘Nel pori’ (puffed paddy). The devotee wanted to ensure that it reached the hands of PeriavA somehow.
A lady who was there told her to contact ‘Kitchen store’ Gopalaiyer and give it to him and he would somehow see that it reached Periava. Smt.Jayalakshmi went to the store.
But Gopalaiyer was in great anxiety. He was not in a mood to listen to anybody and told her, “Please do not disturb me now. It is already time for PeriavA’s Bikshai.”—he said and was searching for something there.
She asked him, “What are you searching for? Do you want me to get something?”
“It will not be available here. The ants have eaten up all the BAdhAm ‘paruppu’ overnight. Manager will scold me if he comes to know of it. It will be available only in Kanchipuram. By that time, PeriavA’s Bikshai will be over.”
When he said this with frustration, there was no limit for Smt.Jayalakshmi’s joy!
The devotee says, “Everything connected with PeriavA is getting fulfilled by themselves. Those who do the job are mere instruments.”
Is not our devotion towards this ‘Prathyaksha Dheyvam’ a big boon ? That It will give us all good things and protect us is ‘Satyam’ (absolute truth)
A DROP OF NECTAR.
When we conduct a marriage or Upanayanam or ‘Seemantham’, we should invite the Pundit two days before the function and understand from him the purported meanings of the various ‘MantrAs’ and the intentions of the rituals. Only then, we will get a hold on them while performing the rituals and chanting the MantrAs.
(PAduvAr pasi theerppAi ParvuvAr pini kalaivAy) – DhEvAram by Sundaramurthy Swamigal.
Categories: Devotee Experiences
Leave a Reply