கோவிந்த நாமாவே புண்ய தீர்த்தம் என்றதால் ஸ்நானமே பண்ணாமல் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிவிட்டு, விழுப்போடேயே சாப்பிட்டுவிடலாம் என்று குதர்க்கம் பண்ணிக் கொள்ளக்கூடாது. வாஸ்தவத்தில் ஒரு ஜீவன் பண்ணியிருக்கிற ஏகப்பட்ட கர்மாக்களிலிருந்து அவன் தப்பித்து, தன் பாப மூட்டை பூராவையும் கரைக்க வேண்டுமானால் அதற்கு சரீரத்தை சக்கையாகப் பிழிந்து ஸத்காரியங்களை ஏராளமாகப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதனால்தான் சாஸ்திரங்களில் நூறாயிரம் காரியங்களை, விதிகளைக் கொடுத்து இவனைக் கட்டிப் போட்டிருக்கிறது. இருந்தாலும் அதே பகவான் ஒரு ஜட்ஜாக மட்டும் ஸ்ட்ரிக்டாக இல்லாமல், நமக்கு அம்மையும் அப்பனுமாக உள்ள காருணிகன் ஆனதால், நாம் சாஸ்திரப்படியே செய்ய மனப்பூர்வமாக ஸர்வப் பிரயத்தனமும் பண்ணி அப்படியே கண்டிப்போடு ஆசார அநுஷ்டானங்களை விதி வழுவாமல் அப்யாஸம் செய்து வரும்போது, எங்கேயாவது நம்மால் கொஞ்சம் முடியாமல் போய்விட்டால் அப்போது – அப்போது மட்டுந்தான் – இத்தனை கண்டிப்பான விதிமுறையோ கடினமான காரியமோ இல்லாமல், மனஸார அவனை ஸ்மரித்தாலே போதும், அவன் நாமாவைச் சொன்னாலே போதும், அவன் இவ்வளவு தூரம் பண்ணின குழந்தைகளை மன்னித்து விடுவான் என்று ஆசார, அநுஷ்டானங்களையும் தளர்த்தி அநுக்ரஹம் பண்ணுகிறான் என்று வழிகாட்டியிருக்கிறார்கள். இதை ஒரு சாக்காகக் காட்டி, “எந்த ஆசாரமும் இல்லாமலிருப்பேன். ‘ஹரே ராமா’ என்று பஜனை பண்ணினால் போதும்” என்று இருந்தால் அப்படிப்பட்ட கட்டுப்படாத சோம்பேறிக்கு பகவான் ஏமாந்து போய் அநுக்ரஹம் பண்ணிவிட மாட்டான். நிஜமாகவே “ஹரே ராமா” என்று அவனிடமே ஹ்ருதயத்தை அர்ப்பணம் பண்ணி, உருகத் தெரிந்து விட்டால் அப்படிப்பட்டவனுக்கு எந்த ஆசாரமும், எந்த சாஸ்திரமும் வேண்டாந்தான். அப்படிப்பட்டவர்கள் ஒரு நாமாவைச் சொல்லியே எத்தனையோ அற்புதங்களைப் பண்ணியிருப்பதும் வாஸ்தவம். ஆனால் அந்த ஸ்திதியில் நாம் இருக்கிறோமா என்பது நமக்கே தெரியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
One should not indulge in crooked arguments that just because Govinda Nama is equivalent to a holy bath, one need not have a daily bath, but utter Govinda Nama and sit down for the daily meal. In reality, if a soul has to get rid of its Karmic burden and wash away its sins, it has to sweat it out by performing numerous good actions. This is the reason sastras have bound him with a number of rules and regulations. But since the Divine Eswara is not only a strict judge but also a compassionate Father and Mother to us, it has been stated that if a person who strictly follows the scriptures and accordingly performs his actions wholeheartedly is unable to do so at any particular time due to some valid reason, then the chanting of the Divine name is itself enough and Eswara will forgive His child who has strived so hard till then. The exemption is valid only in such a case. But this should not be taken as an excuse for non-observance of any Aacharam. He will not bless that lazy being who thinks it is enough to chant the Divine Name ‘Hare Rama’, without observing the rules of Aacharam. Of course, it is true that a person who is truly able to surrender himself to Eswara, uttering the Divine ‘Hare Rama’ wholeheartedly, is not required to follow any any Aacharam or Sastras. Such persons have performed miracles by uttering just one Divine name. But we ourselves know whether we have reached this stage or not. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply