Periyava Golden Quotes-589



இந்தக் காரியத்துக்கு இந்த விளைவு என்று டைரக்டாக நாம் கண்டுகொள்ள முடியாமலிருப்பவை அத்ருஷ்ட பலன்கள். அவை ஸாக்ஷாத் பரமேஸ்வரனின் சித்தப்படி நடக்கிற விளைவுகள். அவன் எல்லாவற்றையும் மூடி மறைத்து ஆட்டம் போடுகிறவன். இப்படி மாயை பண்ணுவதுதான் அவன் தொழில். அந்த மாயாவியே மஹா கருணையோடு மஹான்களாக, ரிஷிகளாக இருக்கப்பட்டவர்களுக்குத் தன்னுடைய திவ்ய சித்தத்தைக் கொஞ்சம் திறந்து காட்டுகிறான். அதனால்தான் நமக்கு ரஹஸ்யமாக இருக்கிற உண்மைகள் அவர்களுக்குத் தெரிகின்றன. பரம கருணையோடு அவற்றை லோகமும் உஜ்ஜீவித்துவிட்டுப் போகட்டும் என்று அவர்கள் சாஸ்திரங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் அத்ருஷ்ட பலனைத் தருகிற ஸமாசாரங்களைப் பற்றி நமக்கு ஆசார விதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதில் நமக்குப் பிரத்யக்ஷ நிரூபணம் (practical proof) இல்லை, அல்லது இதற்கு scientific basis [விஞ்ஞான ரீதி அடிப்படை] இல்லை, அல்லது இது நம்முடைய social ideology -க்கு [ஸமூஹ வாழ்க்கைக் கொள்கைக்கு] ஒத்து வரவில்லை என்று சொல்லி அலக்ஷ்யம் செய்வது கொஞ்சங்கூட புத்திசாலித்தனமாகாது. நம் புத்தியின் நேர் proof -க்கு வராத விஷயங்களும் ஈஸ்வரனுடைய மஹா புத்தியில் இருக்க முடியும்; அவற்றை அவனோடு அவனாகக் கலந்திருந்த மஹான்கள் அறிந்து நமக்குச் சொல்ல முடியும் என்பதில் பக்தியும் சிரத்தையும் இருக்க வேண்டியது அவசியம். ஆசாரமென்பது மெகானிகலாக ஏதோ ஒரு ரொடீனை அநுஸரிப்பது மட்டுமில்லை. சரீர காரியத்தோடு இதில் மனஸின் பக்தி சிரத்தையும் கலக்க வேண்டியது ரொம்ப அவசியம். இல்லாது போனால் பலன் ஏற்படாது.ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

What is not immediately perceivable by us as the cause and effect of a particular action is its invisible result. These are the fruits of the Will of the Supreme Power, Parameswara. His Divine Play is hidden. His actions are all to this purpose. Out of His great compassion, He reveals a little of His divine will to great sages and holy men. Taking pity on the world, these great men have recorded these revelations in the sastras so that the former can benefit. Thus these great men have recorded the Aachara rules which bestow invisible fruits on us. It is not wise to ignore them saying that there is no practical proof or scientific basis for these rules or that they do not agree with our social ideology. What does not occur to our minds may find a place in the mind of the Universal Power, Eswara. It is necessary that we should believe with devotion that those great souls, who had merged with Him, can reveal those things to us. Aacharam is not mechanically following a routine. It is an absolute requirement that the physical effort is accompanied by the devoted concentration of the heart. Otherwise there will not be any effect at all.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: