Periyava Golden Quotes-588

இந்த ஹைஜீன், மெடிகல் வால்யூ ஸைகாலஜி எல்லாவற்றையும் விட முக்யம் இந்தப் பிராத ஸ்நானம் சாஸ்திரவத்தாக மந்திரடத்துடனோ, கோவிந்த நாம பூர்வமாகவோ பண்ணப்பட்டால் அது வெளி அழுக்கைப் போக்குவதோடு ஆத்மாவையும் சுத்தி செய்யப் பிரயோஜனப்படுகிறதென்பதுதான். சரீர அழுக்கு போகிறதும், மனஸிலே அப்போதைக்கு ஒரு குளிர்ச்சி ஏற்படுவதும் உடனே த்ருஷ்டமாகத் தெரிகிறது. ‘நெர்வஸ் ஸிஸ்டம் ஸ்ட்ரெங்க்தன்’ ஆவது போகப் போகத் தெரியும். ஆத்ம சுத்தி ரொம்ப நிதானமாகத்தான் தெரியும். பிராத ஸ்நானமே மந்திர பூர்வமாக, அல்லது பகவந் நாம பூர்வமாக விதிப்படி பண்ணப்படும்போது அதனால் நமக்கு ஏற்படுகிற புண்யத்தின் விளைவுகள், இதனால்தான் அது [பிராத ஸ்நானத்தின் புண்யத்தினால்தான் இந்த பலன் நமக்கு வாய்க்கிறது] என்று டைரக்டாகத் தெரியாமல் என்றைக்கோதான் உண்டாகும். இந்த ஜன்மாவிலோ இந்த லோகத்திலோகூட இல்லாமல் அது உண்டாகலாம். அந்த அத்ருஷ்ட பலன்தான் ஆசாரங்களின் லக்ஷ்யம். த்ருஷ்டத்தில் எத்தனை நன்மைகள் உண்டானாலும் அதெல்லாம் இரண்டாம் பக்ஷந்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
What is of more importance than the hygiene, medicinal effect, and psychological value of an early morning bath (Praatha Kaalam) in cold water is that when it is performed according to the sastras, accompanied by the requisite Vedic chant or Govinda Nama, it cleanses not only the body but also the soul. The disappearance of dirt and calmness of mind are immediately perceivable. The strengthening of the nervous system will be experienced gradually. The cleansing of the soul will be felt only slowly. But if this bath is performed according to the scriptures with the Vedic Mantras or Govinda Nama, the result thus accrued as Punya may not be immediately perceived (as a direct result of the bath) but will be bestowed on us in the future. It may be realized in some other birth or even some other world. This invisible fruit is the ultimate aim of Aacharam.  Even if the visible gains from observing Aacharam are numerous, they are only secondary. Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: