Periyava Golden Quotes-587

‘ப்ராத: ஸ்நானம் ப்ரசம்ஸந்தி த்ருஷ்டாத்ருஷ்ட பலம் ஹி தத்’ என்று சாஸ்திர வசனம். இங்கே இரண்டுவிதமான பலன்களும் ப்ராத ஸ்நானத்தினால் விளைவதாகச் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. “த்ருஷ்டபலன், அத்ருஷ்டபலன் இரண்டையும் ப்ராத ஸ்நானம் கொடுக்கிறது என்று அதைப் புகழ்கிறார்கள்” என்று அர்த்தம்.ஸுர்யோதயத்துக்கு முந்தைய மூன்றே முக்கால் நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 மினிட்) க்குப் பிராதக்காலம் என்று பேர். அருணோதயம் என்றும் சொல்வதுண்டு. அந்தக் காலத்தில் பச்சை ஜலத்தில் குளிப்பதற்கு பிராதஸ்நானம் என்று பெயர். ஆற்றில், குளத்தில் செய்தாலும் சரி, அகத்தில் மொண்டுவிட்டுக் கொண்டு செய்தாலும் சரி, தலைக்கும் ஜலம் விட்டுக் கொள்ள வேண்டும். (தலைக்கு தினமும் ஜலம் விட்டுக் கொள்வது ஸ்திரீகளுக்கு அவசியமில்லை. விரததினம், பித்ருதினம் தவிர மற்ற நாட்களில் அவர்கள் தலைக்கு மஞ்சள் ஜலம் புரோக்ஷித்துக் கொண்டாலே போதும்) பொதுவாகத் தலையோடு கால் பச்சை ஜலத்தில் காலங்கார்த்தாலேயே குளித்துவிட வேண்டும். இதன் த்ருஷ்ட பலன், அதாவது ப்ரத்யக்ஷ விளைவு முதலாவதாக தேஹ சுத்தி, உடம்பின் அழுக்கு போகிறதென்று நேரே தெரிகிறது. அதோடு அந்த வேளையில் குளித்து விடுவதால் தூங்குமூஞ்சித்தனம், சோம்பல் எல்லாம் போய், உத்ஸாஹமும் சுறுசுறுப்பும் உண்டாகின்றன. புத்தித் தெளிவும் ஏற்படுகிறது. இன்னம் மெடிகல் ஸயன்ஸ்படி சொல்லும்போது, இந்தப் பிராத ஸ்நானத்தினால் நரம்பு மண்டலமே உறுதியடைந்து, இப்போது ‘நெர்வஸ் டிஸீஸ்’ என்று பல ரூபத்தில் பரவி வருதெல்லாம் க்ஷீணித்துவிடும் என்கிறார்கள். அந்த வேளையில் ஸ்நானம் செய்வது உணர்ச்சிகளையும் குளிரப்பண்ணி சமனமாக்குகிறதென்பது இதன் ஸைகலாஜிகல் எஃபெக்ட். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

According to the scriptures, having a bath in the early morning is praised because it bestows two kinds of fruits – visible and invisible.   The period three and three quarters of a Nazhigai before sunrise (each Nazhigai is equivalent to 24 minutes) is ‘Praatha Kaalam’. It is also called ‘Arunodhayam’. Having a bath in cold water during this time is called ‘Praatha Snaanam’. Whether one bathes in the river or at home, water should be poured over one’s head. Women are not required to have a head bath daily. It is enough if they sprinkle turmeric water over their heads daily and have a head bath on days of fasting/festivals & ancestral rituals. Generally one should have a bath in cold water from head to toes. The visible effect is that the body gets cleansed, the dirt is washed away, laziness and sleepiness vanish, and one feels active and enthusiastic. The mind also becomes keen. If we use medical terminology, having an early morning bath strengthens the nervous system and weakens the possibility of nervous diseases. The psychological effect of such a bath is that the emotions are soothed and stabilized. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Sorry to say, most of our children would have never seen the Suryodayam, forget about Pratha Snanam. Parents are the culprits for this.

    Jaya jaya Shankara…… Hara Hara Shankara…..

Leave a Reply

%d bloggers like this: