.Very nicely written in FB…Applies to each and every one of us…Thank you sir….
பெரியவாவைப் போற்றிப் புகழ்வது மட்டுமே நமது பாக்கியம் என்று நாம் இருந்துவிடக்கூடாது… அவரது வாழ்க்கை ஒரு திறந்தப் புத்தகம்… இதில் எண்ணற்ற விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த பூவுலகில் மனிதராக பிறந்த நாம் அனைவரும் அந்த ”பெரியவா” என்னும் புத்தகத்தை படித்து பலனடையவேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர், நிர்வாக இயல் வல்லுனர்கள் போன்றவர்கள் பெரியவாடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகளவு உள்ளன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் ஒரு பதினாகு விஷயங்களைச் சொல்லலாம்… அவை:
கட்டுப்பாடு என்பது ஒருவர் சொல்லி வருவதல்ல. நமக்கு நாமே விதித்துக்கொண்டு, சற்றும் அதிலிருந்து பிறழாமல் இருப்பது…
எடுத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த காரியத்தை எடுக்காமல் இருப்பது…
இறுதிவரை, முதல்நிலை மாணவன் போல, எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடன் இருப்பது…
சிரித்தால் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சி பற்றிக்கொள்ளும் வண்ணம், ஒரு குழந்தைபோல் மனம்திறந்து சிரிப்பது…
பல மொழிகளைக் கற்றுக்கொள்வது…
தேசத்தை தெய்வம்போல் நேசிப்பது…
தர்மமே நமது தேசத்தின் உயிர்நாடி என்று கண்டு, தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை சிரத்தையுடன் கடைபிடிப்பது. அவரவர்க்கு அவ்வவருடைய தர்மத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது…
ஓயாமல் உழைப்பது…
மறைநூல்கள், சாத்திரங்கள் இவை மட்டுமல்லாமல், இலக்கியம், தினசரிச் செய்திகள் என்று ஒன்று விடாமல் படிப்பது…
காலையிலே எழுவதால் எதற்கும் நேரம் இருக்கும் என்று உணர்த்தியது…
குறைவாகவே உண்ணுவதன் மூலமே, எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பது…
வாழ்ந்து காட்டி, பிறகே வாயைத் திறந்து உபதேசிப்பது…
மற்றவர் நலமே தனது நலம் என்று வாழ்வது…
தன்னை ஒரு பொருட்டாகவே கருதாதது…
Of course the list goes on…We can’t practice everything He said but we should try to do as much as possible…
Categories: Devotee Experiences, Photos
Jaya Jaya Sankara Hara Hara Sankara, Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam
well said>>I am blessed to go through>>Very much needed for the present generation>