Periyava Golden Quotes-580


சௌச விதிகளோடு கூடவே ஸத்யம், தயை, தியாகம், லோப குணமில்லாமை, அஹிம்ஸை முதலானவற்றையும் நேரடியகாவே ஆசார நூல்கள் சிறப்பித்துப் பேசுகிற இடங்களுண்டு இன்னம் அநேக இடங்களில், ‘இன்ன ஆசாரத்தை அநுஷ்டிக்காதவன் வாக்குப் பிரமாணம் தவறினால் என்ன பாபமோ, ஆயிரம் பொய் சொன்னால் என்ன பாபமோ, ஜீவஹிம்ஸை பண்ணினால் என்ன பாபமோ, ஸ்வர்ணஸ்தேயம் [பொன்னைத் திருடுவது] பண்ணினால் என்ன பாபமோ, பரதார கமனம் பண்ணினால் என்ன பாபமோ அப்பேர்ப்பட்ட பாபத்தை அநுபவிப்பான்’ என்று சொல்லியிருக்கும். இங்கே சொன்ன பாப லிஸ்டைப் பார்த்தால் சௌசத்தின் கீழ் வருவதாகவே பெரும்பாலும் தோன்றுகிற ஆசாரமானது அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய மற்ற நாலு ஸாமானிய தர்மங்களையும் அவலம்பித்து விடுகிறது (நிலைநாட்டி விடுகிறது) என்பது தெரிகிறது.ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
There are places in the texts on traditions where apart from the rules on external purity, qualities like Truth, Compassion, Sacrifice, lack of miserliness, and Non-violence are directly glorified. In many places in these texts detailed statements are made about what is the punishment for not following a particular Aacharam – it will declare that such a person who has not followed a particular Aacharam will have committed the same sin as a person who has broken a promise, a person who has told a thousand lies, a person who has harmed a living being, a person who has stolen gold, or a person who has possessed the wife of another person. When we study this list of sins it is clear that Aacharam which seems to pertain to external purity also establishes the other four common virtues like Non-violence, Truth, Honesty, and Control of the Senses. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: