Periyava Golden Quotes-578

குற்றம் இரண்டு தினுஸு – ஸிவில், கிரிமினல் என்று. ஸிவில் வியாஜ்யங்கள் என்பவை அநேகமாக ஏமாற்று, மோசடி முதலானவற்றைச் சேர்ந்தவைதான். அதாவது அஸத்யத்துக்காத்தான் ஸிவில் வியாஜ்யங்களின் பேரில் ஒருத்தன் ஜெயிலுக்குப் போவது. இதனாலேயே, ஒருத்தன் ஆசார சாஸ்திரப்படி ஜெயிலுக்குப் போகாமலிருக்க வேண்டுமென்றால் அவன் ஸாமானிய தர்மங்களில் இன்னொன்றான ஸத்யத்தைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். அநேகமாக இப்படி அஸத்யமாக ஏமாற்றுப் பண்ணுவது இன்னொருத்தனுடைய சொத்தை ஏப்பம் விடுவதற்காகத்தானிருக்கும். வாங்கின கடனைத் திருப்பித் தரமாலிருப்பது, பொய் பத்திரம் எழுதி இன்னொருத்தன் பணத்துக்கு பாத்யதை கொண்டாடுவது, குத்தகைப் பணம் கட்டாமலிருப்பது ஆகிய இதெல்லாம் ஸாமானிய தர்மங்களில் மூன்றாவதாயிருக்கிற அஸ்தேயத்தின் கீழ் வந்து விடுகின்றன.ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Offences are of two types – Civil and Criminal. Most of the civil cases pertain to cheating and fraud. In other words, persons are imprisoned in civil cases for not following the path of Truth. Hence if a person should not go to prison as dictated by the rules of Aacharam, he should follow the other common virtue of Truth (Sathiyam). Generally such untruthful cheating will be to rob someone of his property. Non repayment of loans, claiming someone’s property through forged documents, non-payment of lease amount are all dealt with by the third common virtue Astheyam (theft). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Sathyame jayathe; if one who does not follow the rule has to suffer.

Leave a Reply to ManisahCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading