Jaya Jaya Sankara Hara Hara Sankara – Starting today I will start posting golden quotes from the next section of Deivathin Kural Vol-3-Aachara Vishayangal.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. C.P.Vijayalakshmi for the great work in translating these treasures. Pl. share as much as you can. Rama Rama
ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும்
“ஆசாரம்” என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற ‘மடி’ அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம். மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்; சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் [நெற்றிக்கிடுதல்] பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு [ஹோட்டலுக்கு]ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
When ‘Samayacharam’ or ‘Madacharam’ is mentioned it refers to all the rules of a religion. But generally it has come to refer to ‘Madi’ (being clean as per the saastras) as in ‘Madi and ‘Vizhuppu’. (All these discourses are to ensure that this ‘Madi’ should not be entirely forgotten though it remains only in the realm of words today). Aacharam distinguishes between ‘Madi’ and ‘Vizhuppu’. We call those persons orthodox who as prescribed by the scriptures, grows a tuft (kudumi) on the head, wears the Dhoti with Kachcham, sports the holy mark on the forehead, does things after consulting the almanac (panchangam), does not eat in hotels and does not eat from Eversilver vessels. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply