Periyava Golden Quotes-565


வைதிகாசாரங்களையே விட்டு மதாந்தரங்களுக்கு மாறினால்தான் தப்பு என்றும், வைதிகாசாரங்களிலேயே ஒரு ஸம்பிரதாயத்திலிருந்து இன்னொன்றுக்குப் போனால் தப்பில்லை என்றும் நினைக்காமல், முடிந்த மட்டும் அவரவரும் குலாசாரப்படியே நடக்கத்தான் பாடுபடவேண்டும். ‘[பிறப்பால் ஏற்பட்ட மதத்தை] விட்டவன் பதிதனாகிறான் என்பது இவனுக்குப் பொருந்துமா, விட்டதோடு நாஸ்திகனாகவோ இதர மதமொன்றுக்கோ போகாமல் வைதிகாசாரத்திலேயே இன்னொன்றுக்குத்தானே போகிறான்?’ என்றால், இவனளவில் ஒன்றை விட்டு விட்டு நல்ல வழியில் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கிறானென்றாலும், இந்த ஸ்வதந்திர யுகத்திலே மற்றவர்கள் இவனைப் பார்த்து [குலாசாரத்தை] விடுவதில் மட்டும் துணிச்சலடைந்து, இன்னொரு ஆசாரத்தில் போகாமல், தப்பு வழியிலல்லவா போவார்கள்? அதாவது இவன் மற்றவர்கள் பதிதர்களாகப் போகத் தூண்டுதல் கொடுத்து விடுகிறானல்லவா? இப்படிப் பண்ணினவனை மட்டும் பதிதனாகிற தோஷம் விடுமா? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

One should not be under the impression that there is nothing wrong in switching over from one set of traditions to another within the folds of Vedic religion itself and that it is wrong only to switch from one religion to another. Everyone should strive to follow the traditions of the family in which he was born. One cannot argue how the accusation of being the ‘fallen one’ can apply to a person who goes from one branch of the religion to another without becoming an agnostic or getting converted to another religion. As far as he is concerned, he may be still holding on to something good but he will be sending a wrong signal to others in this age of freedom and they may choose to follow a wrong path, giving up traditions altogether. In other words, he may be inducing others to follow the wrong direction and thus fall from the traditional path. The sin of having ‘fallen’ will attach to him too for having induced the others to follow the wrong path. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: