Jaya Jaya Sankara Hara Hara Sankara – Two amazing incidents, the first one I have heard in Shri Ganesa Sarma Mama’s upanyasam.
Many Jaya Jaya Sankara to Shri B.Naryananan Mama for the translation and Smt. Savitha Narayan for the Tamizh typing. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (7-6-2009)
(சர்வக்ஞருக்கே சாத்யம்)
நன்றி: தரிசன அனுபவங்கள்
நம்மிடையயே சுகப்பிரம்மரிஷி அவர்களின் மகிமைக்கு ஒரு உதாரணம் காட்டும் உத்தம புருஷராய் திகழும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் மாமுனிவர் சாட்சாத் ஈஸ்வரரின் திரு அவதாரமேயாகும்.
நடமாடும் தெய்வமாகத் தன் அற்புதங்களையெல்லாம் வெளிக்காட்டாமல் திரு நாடகமாடினாலும் பலசமயங்களில் தன் அவதார ரகசியங்களை வெளிப்படுத்தி பக்தர்களைப் பரவசப்படுத்தும் மகா காருண்யமும் ஸ்ரீ பெரியவா அருளியுள்ளார்.
‘லோகநாதராய்த் திகழும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்குத் தெரியாதவைகள் என்பது ஏதேனும் உண்டோ?’ என ஈச்சங்குடி கணேசய்யர் என்ற அன்பர் வியக்கும் ஒரு சம்பவம்.
இவர் இஞ்சினியராக இருந்து ஒய்வு பெற்றவர். தன் மனைவியுடன் ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்கு வந்தார்.
“எவ்வளவு தொகை செலவானாலும் பரவாயில்லை. எனக்கு ஏதேனும் ஒரு கைங்கர்யம் செய்வதற்குப் பெரியவா உத்தரவிட்டால் தேவலை”.
இப்படி கணேசய்யர் பிரார்த்தித்துக் கொண்டார். ஸ்ரீ பெரியவா மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு இவரிடம் சொன்னார்.
“கும்பகோணத்தில் நிறைய பிள்ளையார் கோயில் இருக்கு. அரசமரத்தடி, ஆற்றங்கரை இங்கெல்லாம் மேற்கூரை இல்லாத பிள்ளையார்கள் அதிகம். கும்பகோணம் டவுனைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரையில் உள்ள எல்லா பிள்ளையார்களுக்கும் – கோவிலில் இருந்தாலும், குளத்தங்கரையில் இருந்தாலும், எண்ணெய் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனப் பொட்டு வைச்சு, ஊதுவத்தி ஏத்தி வைச்சு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, நைவேத்யம் செய்து விடு, அது போதும்”.
கணேசய்யர் என்ற பெயர் கொண்ட பக்தருக்கு கும்பகோணதிலுள்ள அத்தனை கணேசருக்கும் பூஜை செய்விக்க உத்தரவானதில் பேரானந்தம்தான்.
இருந்தாலும் “எனக்கு இந்த பூஜை புனஸ்காரமெல்லாம் பழக்கமில்லை. இருப்பத்திநாலு வருஷமா வடக்கே போய் செட்டில் ஆயிட்டேன். அதனாலே உள்ளூரிலே யாரிடமும் பரிச்சியம் கிடையாது” என்று தன் இயலாமையை முறையிட்டார்.
ஸ்ரீ பெரியவா, ஸ்ரீ பாலு அவர்களை அழைத்து “கும்பகோணம் பழக்கடைத் தியாகுவுக்கு ஒரு லெட்டர் எழுதிப்போடு. அவன் எல்லா உதவியையும் செய்வான்” என்று அனுப்பினார்.
கூடவே இந்தக் கைங்கர்யம் நிறைவேறியவுடன் அவரையும் கணேசய்யரோடு வரச் சொல்லியும் எழுதச்சொன்னார்.
அதன்படிப் பழக்கடைத் தியாகு என்ற அன்பர் தன் மனைவியோடு கணேசய்யர் இல்லத்திற்கு வந்தார். உடனடியாக ஸ்ரீ பெரியவாளின் உத்தரவை ஆரம்பித்தார்கள். மூன்று நாட்களுக்கு ராஜா வேதபாடசாலையின் வேன் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஸ்ரீ மடம் வாசற்புறம் அமைந்திருந்த கருங்கல் தூணிலுள்ள பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து எங்கெல்லாம் பிள்ளையார் தென்படுகிறாரோ அங்கெல்லாம் தேடித் தேடி ஒரு பிள்ளையாரையும் விட்டு விடக் கூடாதென்ற சிரத்தையோடு கிட்டத்தட்ட நூற்று அறுபத்தெட்டுப் பிள்ளையார்களைக் கண்டுபிடித்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்துவிட்டனர். கிட்டத்தட்ட ஐந்து டின் நல்லெண்ணெய், அரைக்கிலோ சந்தனம், ஒரு கிலோ கற்பூரம், ஐம்பது பாக்கெட் ஊதுபத்தி இவைகளைக் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு அந்தந்த சிவாசார்யார்களிடம் கொடுத்தும், வெளியே இருந்த பிள்ளையார்களுக்கு அவர்களாகவே தெரிந்த மட்டும் அபிஷேகம் பூஜைகளையும் செய்தனர்.
கை, கால் உடைந்து பின்னமாக இருக்கும் சில பிள்ளையார்களை விட்டு விடலாமா என்று சந்தேகம் வந்தது. அது பற்றி ஸ்ரீ மடத்தில் கூறி ஸ்ரீ பெரியவாளிடம் கேட்டப்போது “ஏன் கை, கால் உடைந்த மனிதர்கள் உலகில் உயிர் வாழ்வதில்லையா? அதுபோல் தான் இதுவும்” என்று ஸ்ரீ பெரியவா அருளியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே பின்னமான பிள்ளையார்களும் விடுபடாமல் பூஜைகளை ஏற்றுக் கொண்டனர்.
இப்படி ஒரு பிள்ளையாரையும் விடவில்லை என்ற உறுதியோடுதான் இவர்கள் ஸ்ரீ பெரியவாளின் உத்தரவை நிறைவேற்றிவிட்டதாகக் கருதி இதை ஸ்ரீ மகானை தரிசித்து அவரிடம் தெரிவிக்கச் சென்றனர்.
அப்போது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கர்நூல் அருகே ஒரு கிராமத்தில் அருளிக்கொண்டிருக்க, தியாகுவும், கணேசய்யர் குடும்பமும் அங்கு தரிசிக்கச் சென்று இதை சமர்ப்பித்து நின்றனர். அத்தனை விபரங்களையும் கேட்டுக்கொண்ட அந்த நடமாடும் தெய்வம் இவர்களை திகைக்க வைக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“இன்னும் ஆறு பிள்ளையார்கள் இருக்கே? எப்படி விட்டுப்போச்சு?”என்று ஸ்ரீ பெரியவா கேட்டபோது இவர்கள் வியப்பில் ஒன்றும் கூற இயலாமல் நின்றனர். இப்படித் தேடித் தேடி மூலை முடுக்கிலெல்லாம் இருந்த பிள்ளையார்களுக்கு அபிஷேக ஆராதனை முடித்துவிட்டு வந்ததாக எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, இங்கிருந்தபடியே சரியாக ஆறு பிள்ளையார்கள் விட்டுப்போனதாக ஸ்ரீ பெரியவா கூறுவது மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது.
ஸ்ரீபெரியவா தானே அதற்கும் விடை சொல்லும் வகையில் “சாக்கோட்டை பக்கம் ஒரு பிள்ளையார், சுவாமிமலை போகும் சாலையில் ஒரு வினாயகர், குடியானவர்கள் தெருவில் அவர்கள் கோலாகலமாகக் கொண்டாடும் ஒரு பிள்ளையார், அரசலாற்றங்கரைப் பிள்ளையார், மரத்தடிப் பிள்ளையார்” என்று சரியாக ஆறு பிள்ளையார்களை ஸ்ரீ பெரியவா கூற அவைகள் அவர்கள் கண்ணுக்கு விடுப்பட்டிருப்பது அப்போது புரிந்தது..
“அதனாலே பரவாயில்லே. ஊருக்குப் போனதும் இந்த ஆறு பிள்ளையாருக்கும் அபிஷேக ஆராதனை பண்ணிடு” என்று தன்னுடைய அபூர்வ மகிமையை மறைத்து ஸ்ரீ பெரியவா இவர்களைத் திசைத் திருப்பினார்.
கும்பகோணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து எல்லா இடங்களையும் தெரிந்தவராக இருந்தாலும், நூற்று அறுபத்தெட்டுப் பிள்ளையார்களுக்கும் மேல் ஆறு பிள்ளையார்கள் விடுபட்டதைக் கூறுவதென்பது சாத்யமாகுமா என்ன?
சர்வக்ஞராக ஈஸ்வர பெரியவாளுக்கு மட்டுமே இது சாத்யமான ஒன்று. இதனை பரிபூர்ணமாக அன்று கணேசய்யரும், தியாகுவும் உணர்ந்த ஆனந்தத்தோடு பரமேஸ்வரரை நமஸ்கரித்துச் சென்றனர்.
ஆபத்பாந்தவன்
ஸ்ரீநிவாசன் என்கிற ஸ்ரீபெரியவாளின் பக்தர் கூறும் ஆபூர்வ தகவல் அவருடைய நான்கு வயது மகன் விசாகன் மூன்றாம் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தப்போதுத் தவறி விழுந்துவிட்டான். மூர்ச்சையடைந்த பாலகனை எந்த நம்பிக்கையுமின்றி இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.
வெளியில் எங்கும் காயமில்லை. இருந்தாலும் உள்ளே ஏதாவது அடிப்பட்டிருக்க வேண்டுமென்ற உறுதியோடு தலையிலும் மற்ற பாகங்களையும் எக்ஸ்ரே எடுத்தனர். ஆனால் உள்ளேயும் எந்தவித பாதிப்பும் இல்லாதது தெரிந்தது. எலும்பு முறிவும் இல்லவே இல்லை என ஊர்ஜிதமானது. எல்லோருக்கும் இது புதிராகவே இருந்தது.
பக்கத்திலிருந்த மரங்களில் உரசி விழுந்ததால் உடலில் அங்கங்கே சில சிராய்ப்புகள்தான் இருந்தன. டாக்டர்களுக்கே பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
மூர்ச்சையான சிறுவன் ஆறு மணிக்கு மெள்ள நினைவு பெற்றுக் கண் திறந்து பார்த்தான். பிறகு தட்டு தடுமாறிப் பேச ஆரம்பித்தான்.
“அப்பா! மாடிலேர்ந்து எட்டிப் பார்த்தபோது கால் தவறி விழுந்துட்டேன். அப்போ நீ பூஜை செய்யும் போட்டோவில் இருக்கிற பெரியவா என்னை ரெண்டு கையாலேயும் தாங்கிப் பிடித்தார். நெத்திலே வீபூதி குங்குமமிட்டார்”.
இப்படி ஒரு அதிசியத்தைக் குழந்தை கூற கூடியிருந்தவர்கள் வியந்தனர். அதே சமயத்தில் காஞ்சி சென்றிருந்த இவர்கள் வீட்டின் பக்கத்தில் இருந்த ஹரிஹர ஐயர் ஸ்ரீ பெரியவாளின் பிரசாதத்தோடு அங்கு வந்து மகானின் மேன்மையை உறுதிச் செய்தார்.
ஸ்ரீநிவாசன் தரிசிக்கப் போகும்போதெல்லாம் ஸ்ரீ பெரியவா “மூன்றாம் மாடிலேர்ந்து விழுந்த விசாகன் என்ன படிக்கிறான்? எப்படி இருக்கிறான்? என்று கேட்டபடி அருளுவாராம்.
இப்படி எங்கிருந்தாலும் காத்திடும் மகா காருண்யரை நாம் பற்றிக் கொண்டு சகல நன்மைகளையும் பெறுவோமாக!
கருணை தொடர்ந்து பெருகும்
ஒரு துளி தெய்வாமிருதம்
“வாழ்க்கைத்தரம்” என்பது மிகவும் உயர்ந்த விஷயம். நல்ல குணங்களோடு, ஈஸ்வர பக்தியுடன் வாழ்கிற வாழ்வே தரமான வாழ்வு. பொருளாதாரத் தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போவதைத்தான் வாழ்க்கைத்தரம் என்கிறார்கள். இதைவிட மனசினாலே உயர்ந்து, வாஸ்தவமாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதைத் தான் பெரிதாக எண்ணவேண்டும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
(VAyinAl unnaipparavidum adiyEn paduthuyar kalaivAy PAsupathA ParanjudarE)
THE GREATNESS OF SRI SRI SRI MAHAPERIAVA. (07—06—2009)
IT IS POSSIBLE ONLY FOR THE ‘ALL—KNOWING’.
(Thanks to ‘Dharsana Anubavangal’)
The Yoga Murthy, Sri Sri Sri MahaperiavA, who shines amongst us as an example to the high status of Suka Brahma Rishi is none other than the incarnation of SAksAt Lord Parameswaran.
Although He enacts a drama, not revealing His miracles, at times He has revealed the secrets of His AvatAr to His devotees and blessed them.
Echangudi Ganesa Iyer is amazed at a particular incident and wonders if there was anything at all that was not known to Sri Sri MahaPeriavA !
He is a retired engineer. He came for PeriavA Dharsan with his wife.
“I will be happy if PeriavA assigns some service to me, whatever be the expenses”—said he to Sri PeriavA. Sri PeriavA, after giving PrasAdhams to all other devotees, and sending them off, told him.
“There are plenty of PillaiyAr temples in Kumbakonam. PillaiyArs without a roof on top are plenty under the Banyan trees and on the banks of rivers. You do AbhishEkam with (gingiley) oil, decorate them with sandal paste , light up incense sticks, and perform NeyvEdhyam with coconut, fruit, betel nut and leaves, to all the PillaiyArs whether they are inside the temples or near ponds, within one kilometer radius of the town. That will do.!”
Ganesa Iyer was very happy on being asked to perform PoojA to all the PillaiyAr temples in Kumbakonam. But he expressed his difficulty, “ I am not familiar with all these Pooja practices. I had settled in the North for the past 24 years, and so I do know anybody in my neighbourhood.”
Sri PeriavA called Sri Balu and told him “ write to Kumbakonam Pazhakkadai Thyagu. He will render all the help. Also, ask him to come here along with Ganesa Iyer after the ‘Kainkaryam’ (task) is completed.”
Pazhakkadai Thyagu came to Ganesa Iyer’s house with his wife. They started with their assignment immediately. The van belonging to Raja Veda PAtasAlai was given for their use for three days.
Starting from the PillaiyAr on the granite pillar at the entrance of Sri Matam, they located 168 PillaiyAr idols, by meticulously searching everywhere and arranged for the PoojA for all of them.
Nearly five tins of Til oil, half a kilogram of sandal paste, one kilogram of camphor, and fifty packets of incense sticks were either given to the SivAchAriyArs of the temples where PillaiyAr idols were there or they themselves did the PoojA for the PillaiyArs on the outside.
They had some doubt about performing PoojA to some PillaiyAr statues in which some limbs were broken; when they contacted PeriavA through SriMatam officials, they came to know that Sri PeriavA said, “Are not humans with legs and hands broken, living in this world? Ask them to do PoojA for them also !”. Therefore even those mutilated idols also received the PoojA and AbhishEkam.
They returned to Kanchipuram with the conviction that they have not left out any PillaiyAr in Kumbakonam. Sri PeriavA was in Kurnool at that time and so both families went there to have His Dharsan and also to inform Him that they have fulfilled the task. After hearing all that they had to say, Sri PeriavA surprised them with a question.
“Six more PillaiyArs are still there. How were they left out?”. They were surprised that when they had gone about searching each and every PillaiyAr idol and performed the AbhishEkam and PoojA, how could Sri PeriavA identify six more, sitting here.
Sri PeriavA answered His question Himself, “One PillaiyAr near Chakkottai, one on the road leading to Swamimalai, one in the peasant street, one on the bank of river ‘ArasalAru’ and another under the tree.” They then realized that they have missed out these six.
“That is alright ! When you return to Kumbakonam, perform the AbhishEkam and PoojA to these six PillaiyArs also.”—saying this, Sri PeriavA diverted their mind.
Even if one is born and brought up in Kumbakonam and knows every place there, is it possible to say that there are six more left, over and above the 168 PillaiyAr idols there?
It is possible only to the ‘All—Knowing’ Sri PeriavA. Ganesa Iyer and Thyagu realized this that day and prostrated before Sri PeriavA.
SAVIOUR.
Srinivasan, a devotee of Sri PeriavA, narrates this rare incident.
His four-year old son, Visakan, while looking down from the third floor of the house, fell down from there and swooned. They took him to Royapetta hospital, without any hope what so ever .
There was no external wound. They x—rayed his head and other parts in order to confirm that there is no internal injury; they did not find any. It was also confirmed that there was no fracture. Everyone was puzzled at this.
As his body, when he fell down, rubbed with some branches of a tree nearby, there were a few bruises. The doctors were amazed at this.
The boy came out of his swoon, around six o’clock and slowly opening eyes, spoke in broken words.
“Father, I fell down while looking down from the third floor. The ‘PeriyavA’ in the photo to whom you are doing PoojA, held me with his two hands and even applied sacred ash and Kumkum on my forehead.”
Those who were around were surprised on hearing this. At that time Sri Harihara Iyer, his neighbor, who had been to Kanchi, returned there and gave them the PrasAdham, confirming the greatness of Sri PeriavA
Whenever Srinivasan goes for His Dharsan, Sri PeriavA would enquire, “How is Visakan who fell down from the third floor? Which class he is studying in?”
Let us hold on to this great epitome of compassion, who protects us wherever we are, and get all the benefits.
COMPASSION WILL CONTINUE TO FLOW………
A DROP OF THE DIVINE NECTAR.
Quality of life is an important matter. The life we lead with all good qualities and devotion to Eswaran, is the one of highest quality. People say that a good life is one where we keep on increasing our financial needs. But, our aim should be to raise our mind and quality of life to a higher level.
(PAduvAr pasi theerppAi ParvuvAr pini kalaivAy) DhEvAram by Sundaramurthy Swamigal.
Categories: Devotee Experiences
Sage of Kanchi wrote: > a:hover { color: red; } a { text-decoration: none; color: #0088cc; } a.primaryactionlink:link, a.primaryactionlink:visited { background-color: #2585B2; color: #fff; } a.primaryactionlink:hover, a.primaryactionlink:active { background-color: #11729E !important; color: #fff !important; } /* @media only screen and (max-device-width: 480px) { .post { min-width: 700px !important; } } */ WordPress.com Sai Srinivasan posted: ” Jaya Jaya Sankara Hara Hara Sankara – Two amazing incidents, the first one I have heard in Shri Ganesa Sarma Mama’s upanyasam. Many Jaya Jaya Sankara to Shri B.Naryananan Mama for the translation and Smt. Savitha Narayan for the Tamizh typing. Rama”
We are fortunate to be born during his era. Hara Hara Shankara. Jaya Jaya Shankara.
Harahara Sankara jaya jaya Sankara