Periyava Golden Quotes-563

குமாரிலபட்டர் இருந்தார். அவர் ஒரு ஸந்தர்ப்பத்தில் பௌத்தர்களோடேயே இருந்து அவர்கள் மாதிரியே வாழ வேண்டியிருந்தபோதுகூட அத்யாவசியமான (வைதிக) நித்ய கர்மாக்களை மட்டும் ரஹஸ்யமாகப் பண்ணிக் கொண்டிருந்தாராம். கூன் பாண்டியன் சமணனாகி விட்டபோது அவனுடைய பத்னி மங்கையர்க்கரசி ரஹஸ்யமாகவே வஸ்திரத்துக்குள்ளே விபூதி இட்டுக் கொள்வாளாம் முழுக்க நம்முடைய மதத்திலேயே அவர்கள் கன்விக்ஷன் உள்ளவர்களாயிருந்தாலும் force of circumstance-ல் [சூழ்நிலையின் நெரிசலில்] மதாந்தரத்தை அநுஸரிப்பவர்களைப்போல வெளியில் காட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் பிற்காலத்தில் இவர்களே ஹிந்து மதம் புது ஜீவனோடு எழும்புவதற்குக் காரணமாயிருந்திருக்கிறார்கள். நம் தேசத்தில் வடக்கே பௌத்தம் தலைசாய்வதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் குமாரிலப்பட்டர். அவர் குமார ஸ்வாமியின் அம்சம். அதேபோலத் தென்தேசத்தில் ஜைனம் நலிந்து வைதிக மதம் புத்துயிர் பெறக் காரணமாயிருந்த ஸுப்ரம்மண்ய அவதாரந்தான் ஞானஸம்பந்தரென்றால், அந்த ஞானஸம்பந்தர் இப்படிப்பட்ட பெருமையை கொள்வதற்குக் காரணமாக அவரை மதுரைக்கு வரவழைத்தது மங்கையர்க்கரசிதான். அவளை அறுபத்துமூன்று நாயன்மார்களிலேயே ஒன்றாகச் சேர்த்திருக்கிறது. அதாவது குமாரிலபட்டர், மங்கையர்க்கரசி ஆகியவர்களும் நம் லெவலுக்கு ரொம்பவும் மேலேயிருந்தவர்கள். ஆனாலும் குமாரிலபட்டர் குலாசாரத்தை விட்டு பௌத்தர்களின் ஆசாரத்தைக் கொஞ்சகாலம் அநுஸரித்தாரென்றால் அது அவர்களுடைய ஸித்தாந்தங்களை ஒன்றுவிடாமல் தெரிந்து கொண்டு, அப்புறம் அதற்குப் பதிலுக்குப் பதில் சொல்லி, ஹிந்து மதத்தை – அதாவது குலாசாரத்தை – இன்னும் நன்றாக நிலைநாட்ட வேண்டுமென்பதற்காகவே நல்ல உத்தேசத்தோடேயே இப்படிச் செய்ததுங்கூடப் பாபம் என்று நினைத்து, ஸுப்ரம்மண்ய அம்சமேயான அவ்வளவு பெரியவர் பிற்காலத்தில் பிராயச்சித்தமாக தம்மைச் சுற்றி உமியைக் கருக்கிக்கொண்டு அதிலேயே கொஞ்சங் கொஞ்சமாகப் பிராணத் தியாகம் செய்தார். குலாசாரத்தை விட்டதால் பதிதனாவதற்குப் பதில் இப்படி கோர மரணம் ஏற்படுத்திக் கொள்வதே மேல் என்று அவர் காட்டினது தான் நமக்குப் படிப்பினையே தவிர, நடுவிலே அதை விட்டது அல்ல. மங்கையர்க்கரசி புருஷன் வழியைப் பத்னி மீறவே கூடாது என்பதற்காகத்தான் அவன் ஜைனனாகி விட்டபோது, தானும் நம்முடைய குலாசாரத்தைத் தைரியமாக வெளிப்பட அநுஸரிக்காமலிருந்தது; தன் இஷ்டப்படி நடக்கவேண்டும் என்று அல்ல. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Kumarila Bhattar was forced to live among the Buddhists following their traditions due to the force of circumstances, but he used to practice his essential daily Vedic rituals secretly. When the King Koon Pandian got converted to Jainism, his wife Mangaiyarkarasi used to apply Vibhuti, the holy ash, inside her attire secretly. Though they had complete conviction in our Vedic religion they had to pretend allegiance to other religions, due to the force of circumstances. But these persons themselves were responsible for the rejuvenation of Hinduism. Kumarila Bhattar was greatly responsible for the decline of Buddhism in the North of our country. He had the Divine essence of Lord Kumara in him (Kumara Swamy or Lord Subramanya). Similarly Gnanasambandar, considered to be incarnation of Lord Muruga, was responsible for the decline of Jainism and rejuvenation of Saivism in the South. And it was Mangaiyarkkarasi who by inviting him to Madurai paved the way for him to perform this feat. She has been included among the 63 Naayanmaars – the select devotees of Lord Siva. Both Kumarila Bhattar and Mangayarkkarasi were way above our level. If Kumarila Bhattar lived as a Buddhist for some time, it was to study their tenets thoroughly so that they can be refuted and the superiority of the Hindu religion, the traditional way of life, can be established. Though this was undoubtedly a noble intention, he still felt he had committed a sin and expiated it by slowly burning himself inside a mound of husk. He showed that it was better to face such a gory death than to live as a ‘fallen’ one, who had broken the traditions. This is the lesson we have to learn and not his deviation from the tradition for some time. Mangaiyarkkarasi did not boldly and openly follow her traditions when her husband got converted to Jainism because tradition demanded that she should follow the path of her husband and not because she wanted to act according to her wishes. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Namaste. Sorry in the fourth line from the top it should be duevand not undue

Leave a Reply

%d bloggers like this: