Sri Sankara Jayanthi Special Poem by Guruji Gopalavallidasar

சங்கரா !

சங்கரா !
உள்ளபடி நீ யார் ?!?
ஜீவனான ப்ரும்மமா !?!
ப்ரும்மமான ஜீவனா !?!

சங்கரா !
மத மாற்றத்தை அன்றே எதிர்த்து நன்றாய் ஜெயித்தவன் நீ !

சங்கரா !
உலகிற்காக உன்னைப் பெற்ற அன்னையை துறந்தவன் நீ !

சங்கரா !
சூனியத்தில் காணாமல் போன,
இந்து தர்மத்தை மீட்டவன் நீ !

சங்கரா !
ப்ரும்மம் சத்தியம் என்று
அன்றே சத்தியம் செய்தவன் நீ !

சங்கரா !
அன்பு நெல்லிக்கனிக்கு
தங்க நெல்லிக்கனி தந்தவன் நீ !

சங்கரா !
இளவயதில் இமயம் ஏறி
தளராத தவமிருந்தவன் நீ !

சங்கரா !
பதரிநாதனை பக்குவமாய்
பிரதிஷ்டை செய்தவன் நீ !

சங்கரா !
காபாலிகனுக்கு உன்னைத் தந்து,
சிஷ்யனுக்கு நரசிம்மனைத் தந்தவன் நீ !

சங்கரா !
காமத்தை உணர கூடு விட்டு கூடு பாய்ந்தும் சிக்காதவன் நீ !

சங்கரா !
அசடனையும், ஆச்சரியமாய்
தோடகம் பாடவைத்தவன் நீ !

சங்கரா !
பாரதத்தின் நான்கு எல்லையிலும்,
அரணாய் மடம் நிறுவியவன் நீ !

சங்கரா !
மாயையைப் புரியவைத்தவன் நீ !
ஜீவனை உணர்த்தியவன் நீ !

சங்கரா !
காலடியில் வந்தவன் நீ !
காலடியால் உலகை வென்றவன் நீ !

சங்கரா !
கோவிந்த பாதம் பிடித்தவன் நீ !
கோவிந்த பஜனை சொன்னவன் நீ !

சங்கரா !
உன் ஞானம் உள்ளபடி
உணர்ந்தவர் யாரிங்கே ?!?
உன்னைத்தான் உள்ளபடி
அறிந்தவர் யாரிங்கே ?!?
உன் வார்த்தை உள்ளபடி
புரிந்தவர் யாரிங்கே ?!?

சங்கரா !
உள்ளபடி நீ
என்றும் புரியாத புதிர் !!!

சங்கரா !
இன்று உன் பிறந்தநாள் !!!
வருவாயா ?!?
சொல்வாயா ?!?
அருள்வாயா ?!?
தருவாயா ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்



Categories: Krithis

Tags:

2 replies

  1. Good piece of poetry. Janakiraman. Nagapattinam

  2. Pramaaatham!!!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading