ஸித்தாந்தம் பண்ணி வாதித்து ஜயிக்கத் தெரியாதவர்களும் இப்படி அதீத அநுபவத்தின்மேல் குலாசாரத்துக்கு வித்யாஸமாக பண்ணினதுண்டு. ரண சண்டிகையை உபாஸிக்கிற ராஜபுத்ரர்களில் இப்படித்தான் மீராபாய் கிருஷ்ணபக்தி என்று, அதுவும் பாதிவ்ரயத்துக்குக்கூட வித்யாஸம் மாதிரித் தெரியும். நாயிகா பாவத்தில் பண்ணிக் கொண்டிருந்தாள். இவள் பண்ணினது பக்தி வழியிலேயும் குலாசாரத்துக்கு வித்யாஸம்; பொது ஸமூஹத்தின் ஸ்திரீதர்மத்துக்கும் வித்யாஸம். பாரத தேசம் பூராவுக்குமே பாதிவ்ரத்யம் முக்யமென்றாலும், ராஜபுத்ர ஸ்திரீகள் அதிலே ரொம்பத் தீவிரமாகப் போனவர்கள். துருக்கர்களோடு யுத்தம் பண்ணி ராஜபுத்ர வீரர்கள் ரணபூமியில் மரணமடைந்த ஸமயங்களில் அவர்களுடைய பத்னிமார் கூட்டங் கூட்டமாக அப்படியே நெருப்பை மூட்டிக் கொண்டு அக்னிப் பிரவேசம் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தேசத்தில்தான் மீராபாய் புருஷன் அபிப்ராயத்துக்கு வித்யாஸமாகப் போனது மட்டுமில்லாமல், கிரிதரகோபாலனுக்கே தான் பத்னி என்ற பாவத்தில் பரவசமாகப் பாடியிருக்கிறாள். அவளை விஷங்கூட ஒன்றும் பண்ணவில்லை; அவள் பாட்டுக்கு அதையும் சிரித்துக் கொண்டே சாப்பிட்டாள் என்று கேட்கிறோம். அப்படி நாமும் விஷத்தைச் சாப்பிட்டு அது நம்மையும் ஒன்றும் செய்யாது என்றால் நாமும் அவள் மாதிரிப் பண்ணலாம்! ‘விஷங்கூட என்னை ஒன்றும் செய்யாதக்கும்’என்று சாலெஞ்சாக அவள் அதைப் பானம் பண்ணவுமில்லை! தன்னை அது பாதிக்காமல் கிரிதரகோபாலன் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்கவுமில்லை! தனக்கே தெரியாத ஒரு ஆவேசத்தின் மேலே இப்படி மீராபாயைப்போல ஆசாரத்துக்கு வேறேயாகப் போனவர்கள் நமக்கு மாடல் இல்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Those who could not successfully argue on the basis of their philosophical convictions also used to break the traditions based on their ‘out of the way’ experiences. Let us take the case of Meerabhai who was born in the Rajaputra family who worship the Ranachandikai. She was soaked in such a Krishna Bhakti which may appear to negate even the Pathivratha Dharmam (the worship of one’s husband ) due to the Naayika Bhavam in which she worshipped Krishna-considering Him to be her beloved. Her actions were contrary not only to her family traditions but also to the social code of conduct for ladies. Though Pathivratha dharmam is common to the entire Bharata Desam, it was intensely followed among the Rajput ladies. When Rajput warriors used to get defeated in their war with Turks, these ladies used to immolate themselves in groups. In such a social set up, Meerabhai not only chose to strike a different path but she also sang in ecstasy that she was the consort of Giridhara Gopalan. We come to know that even poison did not harm her and she consumed it laughingly. We can choose to do like her if we are also able to consume poison like her without any harmful effects! She did not consume the poison in a spirit of challenge. Nor did she pray to Giridhara Gopalan to save her from its fatal effects. She was lost in an impassioned state and such persons are not role models for us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply