Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava continues to lash at Brahmins for their lust for money. He states they were never satisfied even after getting jobs in places like Chennai that enabled them to meet their ends thereby categorically dismissing justifications for all their actions; further states whatever he told the previous generation he is repeating the same to the present generation. HH delivers the ultimate judgement by quoting Bhagawad Gita, “It is better to die than leaving one’s own dharma and running after money.” That pretty much sums it all right?
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri S. Ravisankar for the translation. Rama Rama.
Click HERE for Part 3 of this chapter.
பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? (Part 4)
கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன?
மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா? அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.
நான் இதற்கு மேலேயே ஒருபடி போகிறேன். இங்கிலீஷ்காரர்களுடன் புது ஸயன்ஸுகள், இயந்திர யுகம் எல்லாம் வந்ததால், நம்மவர்களில் மற்ற ஜாதிக்காரர்களுக்குத் தானாகப் பழைய தர்மங்களில் பிடிப்புப் போய் விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இங்கிலீஷ்காரர்கள் கிளப்பிவிட்ட ஆரிய திராவிட பேத உணர்ச்சியால் மற்ற சமூகத்தார் பிராமணர்களை ரக்ஷிக்கக்கூடாது என்ற முடிவுகட்டியதாகவே வைத்துக் கொள்வோம். (இதெல்லாம் யதார்த்தம் – fact – இல்லை. ஒரு பேச்சுக்காகத்தான் assume பண்ணிக் கொள்ளச்சொல்கிறேன்.) வீட்டைவிட்டு ஓடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராமணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால்கூட அவர்களை, “செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும்” என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விடாமலிருந்திருக்க வேண்டும் என்கிறேன்.
ஆனால், முன் தலைமுறைக்காரர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது சொல்லிப் பிரயோஜனமில்லை. அவர்கள் லோகத்தைவிட்டே போய் விட்டார்கள். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறேனோ, அதையேதான் இன்றைக்கு உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.
அதாவது, செத்தாலும் ஸ்வதர்மத்தை விடக்கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகிறோமோ என்ன? பணத்தை நிறையச் சேர்த்துக் கொண்டு, ஆனால் அதைவிட நிறைய அவமானத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அசூயைக்குக் காரணமாக இருந்துகொண்டு, நமக்கான தர்மத்தை விட்டுவிட்ட பிரஷ்டர்களாகச் சாகப்போகிறோம். இதைவிட சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும், நம் கடமையைச் செய்தோம் என்று மூச்சு இருக்கிற மட்டும் பட்டினி கிடந்தாவது வேத ரக்ஷணத்தைச் செய்து சாவது பெருமைதானே! இப்படிச் செய்வதால் மற்றவர்கள் நம்மை பூஷிக்கட்டும் அல்லது தூஷிக்கட்டும். அதைப் பற்றி நமக்கு என்ன வந்தது—யாருக்கும் போட்டியாக இல்லாதவரை நம்மைக் கண்டு நிச்சயம் யாரும் அசூயை, பொறாமை, வயிற்றெரிச்சல் படமாட்டார்கள் அல்லவா? காலத்துக்கு ஒவ்வாத அசட்டுப் பிச்சுக்கள் என்று கேலி வேண்டுமானால் செய்வார்கள். அதாவது பரிகசிப்பார்கள். பண்ணிவிட்டுப் போகட்டுமே. இப்போது மட்டும் குறைச்சலாகவா பரிகாசத்துக்கு ஆளாகி வருகிறோம்? நம் தர்மத்தை விட்டு ஊர் சிரிக்கிற நிலையில் வயிறு வளர்ப்பதைவிட தர்மத்தைச் செய்து கொண்டு ஊர் சிரித்தாலும் சிரிக்கட்டும் என்றுதான் இருக்கலாமே! அல்லது சாகலாமே! ஒவ்வொருத்தன், “என் தேசம்” என்கிறான், “என் பாஷை” என்கிறான். அதற்காகச் சண்டை போட்டு உயிரை வேண்டுமானாலும் விடுகிறான். சுதந்திரப் போராட்டம் மாதிரி பெரிய விஷயங்கள்தான் என்றில்லை; ஏதோ ஒரு ஜில்லாவின் பகுதி இன்னொரு ஜில்லாவுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகப் பிராணனை விடுவதற்கு சித்தமாக தானே தன் மேல் மண்ணெண்ணையைக் கொட்டிக் கொண்டு தீக்குளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். கொள்கைக்காக இதை இவர்கள் செய்கிற மாதிரி இங்கிலீஷ்காரர்களின் புது மோஸ்தர் வாழ்க்கை வந்தபோது பிராமணர்கள் பிராணனும் துச்சம் என்று பரமத் தியாகமாகத் தங்கள் தர்மத்தை ஏன் ரக்ஷித்திருக்கக்கூடாது? பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (நிதனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். முஸ்லீம் ஆட்சியில் பிராமணர்கள் மாறாததற்கும் வெள்ளைக்காரன் ஆட்சியில் மாறி விட்டதற்கும் என்ன காரணம் சொல்கிறார்கள்? வெள்ளைக்காரனோடுதான் புது ஸயன்ஸ், யந்திர சாதனங்கள் வந்தன. மோட்டார்கார், எலெக்ரிஸிடி மாதிரி வெகு சுருக்கக் காரியத்தைச் செய்து கொள்வதற்கான சாதனங்கள் வந்தன. அதுவரை நினைத்தும் பார்த்திராத இத்தனை சௌகரியங்கள், சுக சாதனங்கள் வெள்ளைக்காரனோடு வந்ததால்தான் அவற்றின் கவர்ச்சியால் இவன் இழுக்கப்பட்டு அவர்களுக்குரிய வழிகளிலேயே மோகித்து விட்டான் என்கிறார்கள். இது ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய சமாதானமாகவோ நியாயமாகவோ ஆகாது.
______________________________________________________________________________
Who is responsible? What is the Remedy? (Part 4)
When there was absolutely no facility for eating in the village, don’t you think he should have got satisfied when some porridge was available to fill his stomach in towns like Madras? The above statement is correct if he was satisfied with this. Practically what we see? Even if he gets Rs.1000 in Madras, he runs to Delhi if they give Rs. 2000. Whatever little dharmic life he led here, that is relinquished there. After this if he gets US$ 4000 in New York, he has no hesitation to fly from one continent to other and lives whatever way he is dragged! “Do the military pay more”? Yes, also ready to join there. Even if the alcohol is to be consumed, food with meat to be taken, he says “no problem” for the sake of money. This is what we see. Hence any reason told for the brahmins leaving Swadharma is not acceptable.
I will go one step further. Let us assume that the arrival of new science and machines along with English people had changed the mind set of other caste people with respect to old dharmas. Let us also consider that other caste people decided not to protect brahmins because of the rumor spread by English man about Arya -Dravida division. (These are not facts. I am asking you only to assume.) Let us even consider, brahmins had to run from their homes, get educated and work for the sake of one morsel of food. Even in such situation, I want them to staunchly believe and carry out their vedha adhyayanam, karmanushtanams and say “even if I die, I will not leave these dharmas. Let my soul depart performing these karmas.”
There is no point in telling now what our ancestors should have done. They have left this world. What they should have done I am telling now to the present generation.
Even if we die, we should not leave our Swadharma. Are we not going to die otherwise anyway? After amassing lot of money, but earning more indignity and wrath of others, living with the jealousy of others, leaving all dharmas we are going to die as an out law. Is it not better to die without food, but with the pride and satisfaction of having chanted and protected Vedhas with dignity? Let others praise or blame because we have done like this. Why are we to worry about this– As far as we are not competitors to any, others will not be jealous or have heart burns on us. Is it not? They may sarcastically laugh at us saying “these persons are not suitable for this moder age and time”. That means mocking at us. Let them do it. Even now don’t you feel there is no dearth in others seeing us as laughing stock? Instead of leaving dharmas to fill our stomach with others mocking at us, it is better to stay with performing our dharmic duties or die! Many people say “It’s my country. It’s my language”. They fight for this and even die. Don’t consider, it is some big event like freedom struggle. Even if a small portion of a district is likely to be attached to other, some are ready to pour kerosene on them and die. For the sake of principle, when they are ready to this, why Brahmins had not strictly followed and protected their dharma sacrificing their soul considering life as secondary when the British fashion and life invaded the country? It’s better to die protecting our dharma rather than getting the comforts from others. NIDHANAM SREYA:- death is better is than abandoning one’s Swadharma is what Lord has preached in Bhagawad Gita). What is reason told for Brahmins not changing during Muslim rule, but changing during British rule? New science and machines had arrived only with whites. With motor car and electricity like gadgets works could be done faster. It is said because of these attractive unimaginable gadgets, he was dragged by the comforts and fallen to their way of life. This can be one of the reasons, but cannot be justified or taken as reason.
Categories: Deivathin Kural
Leave a Reply