“நடுவாந்தரத்தில் ஏற்பட்ட குலாசாரங்களைவிட இன்னும் க்ளோஸாக மூலமான ஸ்ம்ருதிகளின்படிச் செய்யத்தானே நாங்கள் ஆசைப்படுகிறோம்? இது எப்படித் தப்பு?” என்கிற வாதத்தில் ஒரு குறை இருக்கிறது. மூலமான ஸ்ம்ருதியிலேயேதான் “சிகாம் புண்ட்ரம் ச ஸூத்ரம் ச ஸமயாசாரமேவ ச | பூர்வை: ஆசரிதம் குர்யாத் அந்யதா பதிதோ பவேத் ||” என்றும் சொல்லியிருக்கிறது. அதாவது அந்த மூல ஸ்ம்ருதிகளே, “நாங்கள் ஜெனரலாகத்தான் ரூல்களைக் கொடுத்திருக்கிறோம். இந்த அமைப்புக்குள்ளே அவரவரும் பர்டிகுலராக அவர்களுடைய குலாசாரப்படியுள்ள ரூல்களைத்தான் சிகை, ஸூத்ரம், நெற்றிக்கிடுவது, மதத்தின் மற்ற ஆசரணை ஆகியவற்றில் பின்பற்றவேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தமாகிறது. எனவே குலாசாரத்துக்கு வித்யாஸமாகப் போயும் மூல ஸ்ம்ருதிக்கு க்ளோஸாகப் போவது என்பதை ஸ்ம்ருதியே ஒப்புக் கொள்வதாகத் தோன்றவில்லை. ஸ்ம்ருதி வாழ்க்கையே பூர்ணமாகப் புத்துயிர் தந்து நிலைப்படுத்திய பகவத்பாதாளும், ‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகாவி’ல் “உயிரைவிடப் பிரியமானதாக எதை ரக்ஷிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு, “குல தர்மத்தை” என்றே பதில் சொல்லியிருக்கிறார். வேத தர்மம், ஸ்ம்ருதி வழியான ஸ்மார்த்த தர்மம் என்காமல் அவரவருடைய குலதர்மத்தையே சொல்லியிருக்கிறார்: “ப்ராணாத் அபி கோ ரம்ய? – குல தர்ம”. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
There is one basic flaw in the argument that what is wrong in trying to adhere to the ancient traditions rather than the family traditions which came later in the day. The Smrutis, the basic texts, seem to give only a basic guideline (Sikaam…..). The particulars, the Sloka seems to indicate, have been left to the different traditions of different sects and these have to be followed in the matters of tufts, holy marks, and other ritualistic practices. So the Smruti itself does not seem to agree to adherence to its instructions in defiance of the traditions of a particular sect/family. Sri Adi Sankara himself who rejuvenated Smruti has dealt with this matter in “Prachnothara Rathna Maalikaa”. To a question as to what should be protected more than one’s life, he answers that it is the Kula Dharma – the code of conduct or traditions of the family or sect in which one was born. He does not mention Veda dharmam or the Smaarta dharmam in the path of the Smruti. “Praanaat Api Ko Ramya? – Kula dharma”. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply