Periyava Golden Quotes-558


வீட்டில் முருகன் உபாஸனை, உனக்கு அம்பாளிடம் பக்தி, அதனால் யாரோ பெரியவரை அழைத்து ஸ்ரீசக்ர பூஜை நடத்தவேண்டுமென்று ஆசையிருந்தால் முதலில் வீட்டிலே ஸுப்ரம்மண்யருக்கு ஷஷ்டி பூஜையோ கிருத்திகை விரதமோ மாவிளக்கோ காவடியோ என்ன செய்வார்களோ அதை செய்து விட்டு அப்புறம் ஸ்ரீசக்ர பூஜைக்கு ஏற்பாடு பண்ணு. நீ வைஷ்ணவன்; உனக்கு அத்வைதத்தில் பற்று இருக்கிறது; ஆசார்யாளுக்குக் கைங்கர்யம் பண்ண வேண்டுமென்றிருக்கிறது; அதனால் எனக்கு பிக்ஷை செய்து வைக்க வருகிறேனென்றால் வா. தாராளமாக வா. ஆனால் அத்வைத மடத்துக்கு பிக்ஷை பண்ணுவதற்கு முன்னாடி உனக்கென்று ஜன்மாப்படி ஏற்பட்டிருக்கிற ஜீயர் யாரோ அவருக்கு பிக்ஷை நடத்திவிட்டு அப்புறம் இங்கே வா. குலாசாரத்தை ‘மாக்ஸிமம்’ அநுஸரி. அதற்கு அதிகமாக உன் ஸொந்த உள்ளநுபவத்துக்கும் மனப்பான்மைக்கும் அநுகூலமாக உள்ளதைச் செய். இப்படி அதிகமாகச் செய்வது குலாசாரத்தையும்விட, மூல வைதிக ஆசாரத்துக்கு ஸம்மதமானதாயிருக்க வேண்டுமேயன்றி குலாசாரத்தை விடவும் ஆதிவழியிலிருந்து விலகிப்போய் விட்ட ஸமீபகாலச் சீர்திருத்தங்களைச் சேர்ந்ததாயிருக்கக் கூடாது என்பது முக்கியம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Your family may have a tradition of worshipping Muruga. But you may be devoted to Ambal, the Mother Goddess. If you desire to invite some respected elder to perform Sri Chakra Pooja at home do so; but after performing Kavadi, Maavilakku, Sashti Pooja, or Karthigai Vratham – whatever may be the tradition at home to worship Lord Subramanya. You may be a Vaishnavite who may be attached to the Adwaitic philosophy. So you may want to perform some service to the Aacharya. You may want to come to the matam to offer Biksha to me. Do so – but only after offering Biksha to the Jeeyar who is your Aacharya according to birth. Follow the family traditions to the maximum. Then do whatever is conducive to your attitude and inner experience. But what is important is what you thus perform additionally should be closer to the ancient Vedic tradition and not to the modern reforms which are more deviated from the ancient traditions than your family traditions.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading