Periyava Golden Quotes-557


பழைய வழிக்கு ரொம்பவும் விரோதமில்லாமலே நடுவில் உண்டான குல ஸம்பிரதாயங்களுக்கு மாறாக பக்தி பண்ண விரும்புகிறவர்கள் இஷ்ட தெய்வக் கொள்கைக்கு வைதிகாசாரம் இடம் தருகிறது என்பதோடு, தெய்வ பேதமில்லாத ஸமரஸ மனப்பான்மையே நம் ஸநாதன மதத்தின் தாத்பரியம் என்பதையும் நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். இப்படிச் செய்துவிட்டால் சிவ பக்தியுள்ள ஒரு வைஷ்ணவனுக்குத் திருமண்ணுக்குப் பதில் விபூதி இட்டுக் கொள்ளத் தோன்றாது. அந்தச் சாம்பலிலே வருகிற பரமேஸ்வரன் இந்த மண்ணிலும் வருவான் என்ற பக்குவம் வந்துவிடும். “கேசவ நாராயண” என்று நாமத்தைப் போட்டுக் கொள்ளும்போது சிவ நாமாவைச் சொல்வதில் இவனுக்கு உண்டாகக் கூடிய ஆனந்தம் இல்லாவிட்டாலுங்கூட, இந்த நாமங்களைச் சொல்வதிலும் வெறுப்பு இருக்காது. வைஷ்ணவனாகப் பண்ணவேண்டியதையெல்லாம் பண்ணிக்கொண்டே அதிலேயே ஓரளவுக்குத் தன் ஈஸ்வரனை பாவித்துக்கொண்டு, அதற்கு அதிகமாகவும் தனியாக சிவனை பக்தி செய்வான். இவன் இப்படி விசால மனஸோடு இருந்தாலே குடும்பத்தாரும் பூஜையில் ஸாளக்ராமத்தோடு இவன் ஒரு சிவலிங்கத்தையும் சேர்த்துக் கொண்டால் ஆக்ஷேபிக்காமல் இருப்பார்கள். ஆக்ஷேபிக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களுடைய நம்பிக்கையை எதிர்த்து சண்டை போட வேண்டாம். பாவம், அவர்களுக்கு சிவனையும், தெரியாது, விஷ்ணுவையும் தெரியாது. அதனால் சிவனிடம் விரோத பாவம் என்றால்கூட அது தானாக இவர்கள் ஏற்படுத்திக் கொண்டதல்ல. இதுதான் நம் குலாசாரம் என்று நினைத்து (அது தப்போ, ரைட்டோ, அது வேறே விஷயம்; இப்படி நினைத்து) அந்த மரபுக்கு வித்யாஸமாகப் போகக்கூடாது என்ற பயபக்தியில்தான் விரோதம் கொண்டாடுகிறார்கள். அதை நாம் குலைக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு நல்லபடியாக வேண்டுமானால் எடுத்துச் சொல்லிப் பார்ப்போம். அந்த ஈஸ்வரனிடமே இதற்காகப் பிரார்த்தனை செய்வோம். நாம் சொல்லி அவர்கள் கன்வின்ஸ் ஆனபின்னுங்கூட, “ஆனாலும் நம் அகத்தில், நம் ஜாதியில் இப்படி லிங்க பூஜை பண்ணுவதில்லையே” என்றால், இந்த ஸமூஹக் கட்டுப்பாட்டுணர்ச்சியை நாம் மதித்து ஒப்புக் கொள்வோம். வீட்டுப் பூஜையில், இல்லாததைச் சேர்க்கக்கூட வேண்டாம். மானஸிகமாக சிவ ஸ்தோத்ரங்களைச் சொல்லிக்கொண்டு உபாஸனை செய்வோம்; சிவன் கோவிலுக்குப் போவோம்; அங்கு மனஸார சிவ தர்சனம் பண்ணி நமஸ்காரம் செய்வோம்; சிவ ஸம்பந்தமான உபந்யாஸம், பாராயணம் இவற்றில் மனஸைக் கொடுத்து ஈடுபடுவோம். இதுவுங்கூடக் கூடாது என்று அகத்துப் பெரியவர்கள், ஜாதிப் பெரியவர்கள் சொன்னால் கேட்க வேண்டுமென்பதில்லை. ஆனால் சண்டையும் போட வேண்டாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Those who want to act in accordance with the ancient Vedic traditions and seek to go against the family traditions which are a later development should realize that our ancient traditions make provision for worship of a deity close to one’s heart (Ishta Devatha) and the true meaning of our Divine Religion is an universal outlook with lack of distinction among the various forms of the Divine. If this realization takes place, everything becomes easier. A Vaishnavite who believes in Siva will have no difficulty in applying Thiruman on his forehead. He will know that the Siva who appears in the Vibhuthi will appear in this Thiruman also. When he utters the Divine Names- “Kesava and Narayana” – of Vishnu, he may not hate them even though he may not derive the same happiness he will experience while uttering the name of Siva. He will do whatever is required of a Vaishnavite while all the time seeing Eswara in all his activities. He will separately worship Siva even more. Seeing his broad mindedness his family members may not object if he worships a Sivalinga along with the Saligrama. Even if they object, there is no need to fight against their convictions. They know neither Vishnu nor Siva. They are trying to defend what they think is their family tradition (whether it is right or wrong is another issue). One need not question their beliefs. One can try to convince them. One can pray to Eswara for this purpose. Even if they are convinced they may express their reservation by stating that the worship of Sivalinga is not part of the family tradition. One should accept and respect this social discipline. That which is not traditional to the family need not be included now. Siva Stotras can be recited quietly in one’s mind. One can go to a Siva Temple, perform worship and pay obeisance there, contentedly.  One can listen to discourses and read the texts on Siva. If the elders object to even this thing they need not be obeyed. But one should not fight with them.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: