Periyava Golden Quotes-555

ஸமீபத்தில் ஏற்பட்டிருக்கிற சீர்திருத்த மதங்களோடு இவற்றைச் சேர்த்து விடாமல், சீர்திருத்த மதங்கள் மாதிரியில்லாமல் ச்ருதி, ஸ்ம்ருதி, புராணம் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளும் ஸம்பிரதாயங்களில் பிறந்தவர்கள் அவற்றின் ஆசரணைகளை விடுவது விரும்பத்தக்கதல்ல. அவற்றுக்கு அதிகமாக, ஆதி வைதிக மரபுக்கு ஸம்மதமானதாகத் தாங்கள் இஷ்டப்படுகின்றவைகளையும் சேர்த்துக் கொண்டு செய்ய வேண்டும். இதில் முடிந்த மட்டும் ஸொந்த இஷ்டத்தை விட்டுக் கொடுத்து, தியாகம் பண்ணி, அந்தந்த ஸமயாசாரத்தையே பின்பற்ற வேண்டும். இந்தத் தியாக பலனாகவே ஈஸ்வரன் நாம் விரும்புகிற நிறைவை அநுக்ரஹித்து விடுவான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The persons who have been born in those families with traditions which believe in Sruti, Smruti, and Puranas should not equate these sects (which made some changes to the ancient traditions) with the modern reformist movements and should not give up following its dictates. In addition to these, they should follow that which is dear to their heart and should not violate the Vedic tradition. As far as possible, one should sacrifice one’s personal likes and dislikes and follow what has been traditionally handed over. If we do so, Eswara will grant us the fulfillment we seek, as a fruit of this sacrifice on our part.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: