Epitome of Compassion….


Jaya Jaya Sankara Hara Hara Sankara – A great incident from Sri Periyava Mahimai Apr 2009 newsletter that display our Periyava’s immense Karunyam.

Many Jaya Jaya Sankara to Smt. Savitha Narayan for the Tamizh typing and Shri. B. Narayanan Mama for the translation. Rama Ram

தானே ஏற்றுக் கொள்ளும் தயாளம்

ஸ்ரீ பெரியவாளுக்கு சேர்க்கணும்னு நினைச்ச பணம் காணாம போச்சே” என்று பெரியவா பக்தையான சீதா மாமி கவலையாய் சொல்லிக் கொண்டு சதாராவிலிருந்து சென்னைக்கு கூட வந்திருந்த பெண்மணிகளோடு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.

பூனா சென்று சில க்ஷேத்ர தரிசனங்களை முடித்துக் கொண்டு ஸ்ரீபெரியவாளால் தோற்றுவிக்கப்பட்ட சதாரா கோயிலில் மாசிமகத்தன்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்ட பாக்யம் அடைந்ததோடல்லாமல், சீதா மாமிக்கு அன்றைய தினம் ஜென்ம நட்சத்திரமாகவும் விசேஷமாக அமைந்தது.

இதை அப்போது மாமியின் தங்கை மூலமாக தெரிந்துக் கொண்ட அங்கிருந்தவர்கள் சீதா மாமியிடம் அவரவர்கள் நூறு, ஐம்பது என்று பணமாக சேர்த்து வாழ்த்துக் கூறியும், ஆசிர்வாதம் பெற்றும் மகிழ்வுற்றனர்.  கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் அளவில் சேர்ந்திருந்த பணத்தை ஒரு பாலிதின் பையில் போட்ட சீதா மாமி அதை பத்திரமாகத்தான் தங்கையின் பையில் வைத்தார்.

அபிஷேகம் முடிந்து கிளம்பும்போது பெண்மணிகள் கொண்டு வந்திருந்த திரவியங்கள் மற்றும் மங்களப் பொருள்கள் மீதானவைகளைச் சேகரித்து அடுத்த நாள் பூனா சங்கர மடத்தில் நடக்கும் விளக்கு பூஜைக்கு சேர்ப்பித்து விடும்படி சதாரா பொறுப்பாளரிடம் கூறி ஊருக்குத் திரும்பினார்.

இப்படித் திரும்பும் வழியில் ரயில் பயணத்தில்தான், சீதா மாமி தன் தங்கையின் பையில் தான் வைத்த பணத்தைக் காணாமல் இப்படி வேதனைப்பட்டது நடந்தது.
ஆனால் ஸ்ரீ பெரியவா தன் அன்பு பக்தை நினைத்ததை தாமாகவே நிறைவேற்றிக் கொண்டார்.

இங்கே பூனா சங்கரமடத்தில் விளக்கு பூஜை நடந்த சமயம் சென்னையிலிருந்து ஸ்ரீ பெரியவாளிடம் கைங்கைர்யம் செய்யும்  பாக்யம் பெற்ற பிரம்மஸ்ரீ மாமா பூனாவிற்கு தன் பெண் வீட்டிற்குச் சென்றவர், பூஜையின்போது அங்கு மடத்துக்குச் சென்றிருக்கிறார்.

ஸ்ரீ பெரியவாளின் பிரதிநிதியாகவே அவரை பாவித்தவர்கள் அவருக்கு தக்க மரியாதை செய்ய அங்கிருந்த திரவிய பொருட்களைத் தேடியுள்ளனர். அப்போது இரண்டு ரவிக்கைத் துணிகளோடு சீதாமாமியின் பணம் வைத்த கவரும் காணப்பட, விளக்கு பூஜைக்காகத்தான் சதாரா வந்திருந்த பெண்கள் இந்த பணத்தை விட்டுச் சென்றுள்ளதாக பொறுப்பாளர் நினைத்து அந்த பணத்தை அப்படியே ஸ்ரீபெரியவாளின் தூதராக வந்திருப்பதாக எண்ணிய பிரம்மஸ்ரீ மாமாவிடம் கொடுத்து கௌரவம் செய்து அனுப்பினார்.

இங்கே பயணம் ஏற்பாடு செய்திருந்த மாது, சீதாமாமியின் பணம் காணாமல் போய்விட்டதை சதாரா பொறுப்பாளரிடம் போன் செய்துச் சொன்னபோது அப்பணம் ஸ்ரீபெரியவாளிடமே இப்படிப் போய் சேர்ந்துவிட்டது தெரிந்தது. இதைக்கேட்ட சீதாமாமிக்கு பெருமகிழ்ச்சி!  நாம் மனமார ஸ்ரீபெரியவாளுக்கு பக்தி சிரத்தையுடன் சேர்ப்பிக்கும் அத்தனையும் ஸ்ரீபெரியவா ஏற்று பன்மடங்காக திரும்பவும் அருளுவது சத்தியம்.

                                                         ஒரு துளி தெய்வாமிருதம்

உண்ணாவிரதம், கொடும்பாவி கொளுத்துதல், கிளர்ச்சி இதையெல்லாம் தங்களுடைய சக்தியில் நம்பிக்கையில்லாதவர்களே செய்கிறார்கள்.  பெரும்பான்மை பலம் படைத்தவர்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது அதைக்கண்டு பயப்படுவதும், தங்கள் பலத்தினால் பலவீனர்களை பயமுறுத்துவதும் தேசத்திற்கு நல்லதல்ல . நாம் இந்த தேசத்தில் பயமில்லாத பிரஜையாக தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமானால், தனிமனிதன் உறுதியும் ஆத்ம பலமும் கொண்டிருப்பது, ஒன்று கூடி தர்மத்திற்காக உழைப்பது, தீமையையும் அடக்குமுறையையும் கண்டு அஞ்சாத உறுதியுடன் போராடுவது போன்ற க்ஷத்ர தர்மத்தை விருத்தி செய்து கொள்ளவேண்டும். இப்படி நடத்திக் காட்டினால் நாட்டின் ஒழுக்கம் உயர்நிலை அடையும்.   (பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் –  சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

THE  EPITOME  OF  COMPASSION  WHO  TOOK  THE   DEVOTEE’S  OFFERING  HIMSELF.

A  devotee  of  PeriavA,  SitA  mAmi,  was  returning  to  Chennai  from  SatArA  by  train  along  with  others  who  had  accompanied  her.  She  was  telling  others  that  money  that  she  had  kept  as  an  offering  to    PeriavA  had  been  lost.

SitA  mAmi  had  gone  to  Pune,  visited  a  few  temples  and  had  the  boon  of  participating  in  the  AbhishEkam  and  other  prayers  of  MAsi  Makam  at  SatArA  temple  constructed  as  per  PerivA’s  wishes  and  directions.  That  day  happened  to  be  the  birth  star  of  SitA  MAmi.

Others  who  were  present  there  came  to  know  of  this  from  her  sister  and  presented  her  with  various  amounts,  totaling  to  about  one  thousand  rupees.  She  had  kept  the  money  inside  a  plastic  cover  and  put  it  in  her  sister’s  bag.

When  they  left  after  the  AbhishEkam  etc.  were  over,  they  collected  together  all  the  items  brought  for  the  Pooja  and  gave  it  to  the  administrator  of  SatArA  temple  requesting  him  to  give  it  to  the  ‘JyOthi  Pooja’  to  be  performed  in  Pune  Sankar  Mutt,  the  next  day.

While  returning  in  the  train  only,  she  detected  the  loss  of  the  money  kept  in  her  sister’s  bag.

But  Sri  PeriavA  answered   the  devotee’s  prayer  Himself.

When  the  ‘JyOthi  PoojA’  was  being  performed  in  Pune  Sankar  Mutt,  Brahmasree  MAMA  who  had  the  ‘BAgyam’  of  serving   Sri  PeriavA  ,  had  gone  to  his  daughter’s  house  in  Pune  from  Chennai  and  visited  Sankar  Matam    at  that  time.

The  people  of  the  Mutt,   considering  him  as  Sri  PeriavA’s  representative,  wanted  to  honour  him  suitably  and  were  looking  into  the  Pooja  items  kept  there.  They  found  the  cover  containing  the  money  kept  by  SitA  Mami  along  with  two  blouse  pieces.  The  administrator  thought  that  the  ladies  who  came to  SatArA  have  left  this  for  the  ‘JyOthi  Pooja’  only,  and  gave  the  entire  amount  to  Brahmasri  MAMA  who  they  thought,  had  come  as  Sri  PeriavA’s  representative,  and  honoured  him.

When  the lady  who  had  organized  their  trip  to  SatArA  telephoned  the  administrator  of  the  temple  and  told  him  about  money  loss,  she  came  to  know  that  the  money  had  already  gone  to  Sri  PeriavA.  SitA  Mami  was  extremely  happy  on  hearing  this.

That  ‘whatever  we  offer  to  Sri  PeriavA  whole heartedly  and  with  total  devotion,  will  be  accepted  by  Him  and  it  will  be  returned  to  us  multifold’  is  ‘Satyam’.

A  DROP  OF  THE  DIVINE  NECTAR.

Those who  do  not  believe  in  their  powers  only   undertake  fasting,  effigy  burning  and  demonstration.   Getting  scared  when  those  with  majority  strength   misuse  their  powers  and  such  people  threatening  the  weaker  sections  with  their  powers  does  not  auger  well  for  the  nation.  If  we  have  to  walk  on  this  earth  as  fearless  citizens,  then  each   individual  should  develop    self  assurance,  self  confidence,  and   ‘Atma  Balam’;  we  should  come  together  and  strive   to  establish  DharmA;  we  should  fight  against  evils  and  oppressions  with  total   resolve  which  are  the  qualities  of  a  ‘KshatriyA’.  When  we  make  these  things  happen,  the  nation’s  discipline  will  reach higher  levels.

(PAduvAr  pasi  theerppAi  ParvuvAr  pini  kalaivAy) – DhEvAram  by  Sundaramurthy  Swamigal.



Categories: Devotee Experiences

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: