Periyava Golden Quotes-553

விஷ்ணுதான் நிஜமான ஸ்வாமி என்று ஒருத்தர் ஸித்தாந்தம் செய்தாரென்றால், அந்தக் காலத்தில் வேறே யாரோ விஷ்ணுவை ரொம்ப மட்டந்தட்டியிருக்கலாம். அப்பைய தீக்ஷிதர் இருக்கிறார். பரம அத்வைதி, அதாவது அத்வைத லெக்சர் மட்டும் பண்ணுபவரில்லை, அநுபூதிமான். ஈஸ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு ஒவ்வொருவருமே ஸாக்ஷாத் பரமாத்ம ஸ்வரூபம்தான் – இவர்கள் ரத்ன த்ரயம் – மும்மணிகள் -என்று எழுதியிருப்பவர். அப்படிப்பட்டவரே பரமேஸ்வரனைப் பற்றி மற்ற தெய்வங்களைவிட ரொம்ப அதிகமாக எழுதி, சிவ மஹிமையையே விசேஷமாக நிலைநாட்டியிருக்கிறார். காரணம் என்னவென்றால் அந்தக் காலத்தில் வீர வைஷ்ணவர்களின் செல்வாக்கு மித மிஞ்சிப் போயிருந்தது. Counteract பண்ணுவதற்காகவே இவர் சிவபரமாக அதிகம் செய்ய வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு ஆசாரியரின் காலத்தில் பூர்வாசாரத்துக்கு ரொம்பவும் விரோதமாக ஒரு போக்கு ஏற்பட்டிருந்தது என்பதாலேயே அதற்கு Opposite direction-ல் இவர்களும் அதற்கு கொஞ்சம் வித்யாஸமாகப் போகும்படி ஏற்பட்டிருக்கலாம். தன் தெய்வம் உசந்தது என்பதனால் அவர்கள் இன்னொன்றை மட்டம் தட்டினார்கள், நிந்தித்தார்கள் என்பதற்காக நீ அப்படிப் பண்ணாதே. நிந்திக்கிறார்களே என்று அவர்களையும் நிந்திக்காதேயப்பா! பயமோ விநயமோ இல்லாமல் சாஸ்திரக் கட்டுப்பாடுகளை மீறுகிற நம் காலத்தவரைப் போலில்லாமல், பழைய ஏற்பாடுகளில் நிரம்ப ச்ரத்தா பக்திகளுடன் ஜனங்கள் அடங்கியேயிருந்த அந்த நாளிலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் சற்று வித்யாஸமாகப் போன இந்த ஆசார்ய புருஷர்களை அநுஸரித்துப் போயிருக்கிறார்களென்பதிலிருந்தே அவர்களிடத்தலே ஒரு ஸத்தியத்தின் சக்தி இருந்திருக்கிறதென்று தெரிகிறது. இப்போதைய ரிஃபார்மர்களைவிட நிச்சயமாக ஸொந்த வாழ்க்கையில் அவர்கள் ரொம்பப் பெரியவர்களாகவும் சீலமுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லை. இப்போது சில ரிஃபார்ம்களின் காரண புருஷர்கள் சீலமுள்ளவர்களாயிருந்தாலும், அப்புறம் அந்த மூவ்மெண்டில் அப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If somebody declares that Vishnu is the only God, it may be due to the fact that some persons might have talked derogatorily about Vishnu. Appaiya Dikshitar was a great Adwaithi. He had not merely talked about Adwaita; he had actually experienced this non dualistic state. He had stated that Sivan, Ambal, and Vishnu are all the forms of the Divine Supreme and declared them to be the Rathna Trayam – the Three Gems. Such a person has written more about Parameswara (Siva) than the other Gods and has eulogized His greatness to a large extent. This is due to the fact that in those days the influence of Veera Vaishnavas (fanatic devotees of Vishnu) was strong and Dikshitar had to counteract this influence. Likewise, during the period of each Aacharya there might have been some people who had strongly deviated from the ancient traditions and so the Aacharyas were forced to take an equally strong counter measure. They might have spoken derogatorily of one God to establish the superiority of their own. But you do not do so. Do not criticize them because they did so. Even in those days when people lived with devotion in obedience to the ancient traditions (unlike our times when traditions are broken) thousands of people followed these Acharyas. This shows that they had the some kind of Power based on the Truth – Sathyam.  Unlike the reformers of today, they had been virtuous and honorable in their private lives. Moreover, nowadays, even if some reformist leaders are virtuous, it is rare to find such persons among their followers. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: