A Fascinating Experience…

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Few days back Adiyen posted about an immensely blessed flower vendor who got Velvet Padhukas from Maha Periyava, how Periyava helped conduct her daughter’s marriage, she calling Periyava as Appa, Periyva showering her with his immense grace, etc. Recently, one of our blog devotees Smt. Savitha Narayan had the surprise experience of meeting the flower vendor’s daughter at the Kanchipuram bus stand. Her experience is below.

Many Jaya Jaya Sankara to Shri B.Narayanan Mama for sharing the incident and translation.

மெய்சிலிர்க்கும்  அனுபவம்

மஹாபெரியயவாளின்  கருணைமிகு  அனுக்ரஹத்தையும்  அதனுடன்  அவருடைய  பாதுகைகளையும்  பெற்ற  புண்ணியாத்மாவான  ஒரு  பூக்காரப்  பெண்மணியின் அனுபவம்  உங்களுக்கெல்லாம்  ஞாபகம்  இருக்கிறதா? (Read  it  in  this  link: https://mahaperiyavaa.blog/2017/04/11/anugraham-for-flower-vendor/)

காஞ்சீபுரம்  சங்கரமடம்  சென்று  அதிஷ்டானத்தில்  மஹாபெரியவாளைத்  தரிசனம்  செய்வதற்காக  சென்ற  வாரம் அங்கே  சென்றிருந்தேன்.  அங்கு  தரிசனம்,  ப்ரதக்ஷிணம்  எல்லாம்  முடிந்து,  ஸ்ரீ  காமாக்ஷி  அம்மன்  கோவிலுக்குக்  கிளம்பினோம்.  பூவும்  வெற்றிலையும்  வாங்குதற்குப்  பேருந்து  நிலையத்தின்  முன்புள்ள  கடைகளில்  ஒன்றுக்குச்  சென்றேன்.  பூ  விற்றுக்கொண்டிருந்த  ஒரு  பெண்மணியிடம்  பூ  வாங்கிக்கொண்டேன்.  மனசில்  தோன்றிய  ஒரு  திடீர்  எண்ணத்துடன்,  அவளிடம்  அந்தப்  புண்ணியாத்மா  பூக்காரப்  பெண்மணியைப்  பற்றி  விசாரித்தேன்,  “அந்த  அம்மா  இப்போ  இங்கே  இருக்காங்களா?”

“எங்க  அம்மாதாம்மா  அது !  இப்போ  நானும்  அதயேதான்  பண்ணிக்கிட்டிருக்கேன்.”  என்றவுடன்  எனக்கு  ஏற்பட்ட  வியப்பு,  சந்தோஷம்,  முதலிய  பல  உணர்ச்சிகளின்  கலவையில்  திகைத்து  நின்றுவிட்டேன்.  அந்தப்பெண்ணை  சந்திப்போம்  என்று  கனவிலும்  கருதாத  நிலையில்,  இப்படி  ஒரு  பாக்கியமா?  என்னே  பெரியவாளின்  கருணை!

அவள் அம்மாவிடமும்  அவளிடமும்  பெரியவா  காட்டிய  கருணையையும்  அன்பையும்  பற்றி  விளக்கமாகச்  சொன்னாள்  அப்பெண்மணி.  மேலும்  அவள்  கூறியது,  “எங்கம்மா  உத்தரவு  போட்டுருக்காங்க.  வெளியுர்லேந்து  யாராச்சும்  காமாச்சி  அம்மன்  கோயிலுக்கோ  மடத்துக்கோ  பூக்கைங்கர்யம்  செய்யணும்னா,  எனக்குப்  பணத்தை  அனுப்சிட்டாங்கன்னா,  நானே  அதை மனசார  செஞ்சுடுவேன். (கீழே  அவள்  கொடுத்த  தொலைபேசி  எண் விவரங்கள்  கொடுத்திருக்கிறேன்).  எந்த  ஊரிலிருந்து  தெரிவித்தாலும்  அப்பிரார்த்தனையை  முழு  மனத்துடன்  செய்துவிடுவதாகச்  சொன்னாள்.   இது  அவளுடைய  தாய்க்குச்  செய்து  கொடுத்த  சத்தியம்  என்பதாகக்  கூறினாள்.  அவளுடைய  தாய்,  மஹாபெரியவாளின் (velvet) பாதுகைகளை  அவரிடமிருந்தே  நேரில்  பெற்ற  பாக்கியசாலி.  அவளுடைய  பூக்கைங்கர்யத்திற்கு  அவள்  எந்த  பிரதி  உபகாரமும்  எதிர்பார்த்ததில்லை.  அவளுடைய  குடும்பம்  மிகவும்  சாதாரண  நிலையில்  உள்ளது.  அவளுக்குச்  செய்யும்  எந்த  உபகாரமும்,  மஹாபெரியவாளுக்கு  நாம்  செய்யும்  பூஜைக்கு  ஒப்பானது.  அந்த  மஹானின்  அருளும்  அனுக்ரஹமும்  நிச்சயமாக  உண்டு.

அகஸ்மாத்தாக (?)  நிகழ்ந்த  இந்த  சந்திப்பு,  எனக்கு  மஹாபெரியவா  அனுக்ரஹித்தது  என்றால்  அது  மிகையே  இல்லை.  அதை  நினைக்க  நினைக்க  மனம்  நெகிழ்கிறது.

தொலைபேசி  எண்——09629220548

ஜய  ஜய  சங்கர!  ஹர  ஹர  சங்கர!
_______________________________________________________________________________

A Fascinating Experience…

(As  narrated  by  Smt. Savitha  Narayan)

Do  you  remember  the  incident  where  a  poor  flower  vendor  received  the  blessings  of  PeriavA   along  with  His  ‘PAdukA’s ? (read  this  incident  from  the  link  https://mahaperiyavaa.blog/2017/04/11/anugraham-for-flower-vendor/)

Last  week,  I  had  gone  to  Kanchipuram  to  have  Darsan  of  PeriavA  AdhishtAnam  in  the  Sankara  Matam.  After  completeing  Darsan,  Pradhakshinam  etc.  we  started  for  the  Kamakshi  Amman  temple.  I  went  to  a  flower  vendor  in  the  bus  stand  to  buy  some  flowers  and  betel  leaves  before  proceeding  to  the  temple.  I  purchased  flowers  from  her.  Suddenly  something  in  me  made  me  ask  her, “Is  the  flower  vendor  who  got  the  velvet  PAdukA’s  from  PeriavA  somewhere  here?”

Her  answer  left  me  speechless  with  a  mixture  of   feelings  engulfing  me  —amazement,  happiness,  Bakthi  etc.—“She  is  my  mother  only  Amma!  I  am  doing  the  same  thing  now  in  the  Matam”.  Such  unexpected  boon  when  I  never  thought  about  it  even  in  my  dreams !  PeriavA’s   compassion  has  no  limits !

She,  then,   narrated  how   PeriavA,   had   blessed    her   and  her  mother  with  His  abundant  kindness  and  love.    She  said,  “My  mother  has  given  me  an  order  that  I  should  fulfill  the  prayers,  such  as  offering  of  flowers  to  AdhishtAnam,  and  to  Sri  Kamakshi, of  anybody  from    any   place,  when  they  contact  me  and  send  me  money.  She  said  she  had  given  such  a  promise  to  her  mother.  Her  mother  was  fortunate  to  have  received  the  ‘PAdukA’s  from  PeriavA  directly.  She  never  expected  anything  in  return  for  her  offering  of  flowers.  Hers   is  a  very  average  family.  Whatever  help  we  render  her  is  equivalent  to  performing   PoojA  to  PeriavA.  We  are  certain  to  receive  His  ‘Anugraham’.

It  will not  be  an  exaggeration  if  I  say  that  this  unexpected  pleasant  surprise  is  PeriavA’s   blessing  only.  My  mind  and  soul  melt  whenever  I  think  of  this.

The  flower  vendor’s  contact  details.:–

Mobile  number——09629220548

JAYA  JAYA  SANKARA !  HARA  HARA  SANKARA!

 



Categories: Devotee Experiences

Tags:

9 replies

  1. IFC code is not clear.Is it s or 5 after 000.Please clarify .Thank you .Periyava saranam.

  2. Thank you all for sharing this information. I also got a chance to speak to flower vendor madam few minutes back. She is a down to earth person and humbly accepts our request to deliver flowers to Sri Kanchi Kamakshi Ambaal and Sri Mahaperiyavaa.

  3. Her phone number should have BHIM app and whatsapp. Then can do the needful. I have newly installed BHIM app. I haven’t done any transaction on it yet. If possible, I wish to do the first auspicious transaction to this lady.
    Since I cant speak Tamil well, (i am telugu) someone could tell her on the phone

    • I talked today and sent money to her account. Her name is Koteeshwari Bank is Indian Bank Sankara Mutt Br Kanchi puram. IFC code IDIB000S085 A/C 411626260. She is so polite and kind. She will take a Poomalai to Mahaperiyava and Kanchi Kamakshi Ambal on this thursday and Friday respectively. So anyone needs her services, talk to her, send money to her acc. She has a simple mobile which does not have any facility like whatsapp etc etc. This is what i learned when she talked. So we cannot expect all hifi things on her mobile. On birthdays and wedding days, you can offer worship to Mahaperiyava and Kamakshi amman with the help of Smt Koteeshwari.

  4. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Preasha deivam sri Maha Periyava. ‘ANDINARKU ANUGRAHAM NICCHAYAM” Janakiraman. Nagapattinam.

  5. please indicate that woman name

Leave a Reply

%d bloggers like this: