Sri Periyava Mahimai Newsletter – March 17 2009

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Three heartwarming incidents highlighting Periyava’s Karunyam and a dose from Deivathin Kural in this great newsletter from Sri Pradosha Mama Gruham.

Many Jaya Jaya Sankara to Smt. Savitha Narayan for the Tamizh typing and Shri.B. Narayanan Mama for the translation.

வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

                                             ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (17-3-2009)

                                                       ( நன்றி  : கச்சிமூதூர் கருணாமூர்த்தி )

உலகினுக்கெல்லாம் நீதிபதி

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பெரும் தவயோகியாய் சுகபிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு திகழ்ந்தாலும் மிக  எளிமையோடு நம்மிடையே தான் ஈஸ்வர அவதாரமென்ற உண்மையையும் மறைத்து அருள்மழை பொழிவது நாம் செய்த புண்ணியபலனே!

சாட்சாத் ஈஸ்வரராய் அவர் அளித்திட்ட  அனுபவங்கள் ஏராளம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பதினெட்டு கிராம வாத்திமர் குடும்பம். மிக நல்ல செல்வந்தர்கள். ஈஸ்வர ஆராதனைகள்.  ஈஸ்வர அவதாரமான ஸ்ரீ பெரியவாளிடம் மிக்க பக்தி கொண்டவர்கள்.

ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமர்சையாக விவாஹம் நடந்தது. தம்பதிகளின் இல்வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாகத் தான் இருந்தது. எந்த கிரகம் இடம் பெயர்ந்த பலனோ தெரியவில்லை. தம்பதிகளிடையே ஏற்பட்ட சாதாரண மனகசப்பு மெல்ல வளர்ந்து விவாகரத்துவரை  போய்விட்டது.

விவகாரம் கோர்ட்டுக்குச் சென்றது.  விசாரணைகள், ஆலோசனைகள் என்று தொடர்ந்தது. எதிலும் பயனில்லை.

அடுத்த நாள் விவாகரத்துப் பற்றிய தீர்ப்பு என்று முடிவானபோது இரு  குடும்பங்களுக்கும் எவ்வித தீராத வினைகளுக்கும் சாட்சாத் சர்வேஸ்வரரின் சன்னிதியில் தீர்ப்பு நல்லதாகவே கிடைக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவோ, தெரியப்படுத்தவோ சூழ்நிலை இல்லாத நிலையில் தனிதனியாக ஸ்ரீமகாபெரியவாளை தரிசிக்க அவர்களின் நல் விதி வகை செய்ததோ, என்னவோ!

முதலில் பெண்ணும், பெண்ணின் பெற்றோர்களும் ஸ்ரீ பரமேஸ்வரரான பெரியவளைத் தரிசித்து நின்றனர். தங்கள் ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தாமலேயே ஸ்ரீபெரியவாளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் ஸ்ரீபெரியவா “காமாட்சி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ” என்று திருக்கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் சென்றது. இப்போது பையனின் பெற்றோர்களும் வந்து நின்றனர். பையனின் தகப்பனாருக்குத்  தொண்டையை அடைத்துக் கொண்டதுபோல வார்த்தைகள் தடுமாறின..

“நாளைக்கு ஜ்ட்ஜ்மெண்ட்” என்று தழுதழுக்கக் கூறி நின்றார்.

இவர்களுக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரர் “காமாட்சி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ” என்ற உத்தரவே அளித்து அனுப்பி வைத்தார்.

இங்கே காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான கூட்டம். இரு குடும்பத்தினருக்கும் உள்ளத்தளவில் அந்த மனோநிலையில் பூர்வமான பக்தி ஒன்றுமில்லை. ‘ஸ்ரீபெரியவா சொல்லிட்டா, அதனால் வந்தோம்’ என்பதாக ஒரு அசிரத்தையான மனப்போக்கு!

ஸ்ரீ காமாட்சி சன்னிதிக்கு முன் அக்கூட்டத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் இவ்விரு குடும்பமும் வந்து நின்றபின்பும் ஒருவருக்கொருவர் தெரிந்துக் கொள்ளவில்லை.

அர்ச்சகர் அர்ச்சனைச் செய்துவிட்டுப் பிரசாதத் தட்டைக் கொண்டு வந்தார்.

வந்தவர் “சேர்ந்து வாங்கிக்கோங்கோ” என்றார்.

இரு குடும்பத்துக்கும் புரியவில்லை. அர்ச்சகர் சேர்ந்து வாங்கிக் கொள்ளும்படி சொன்னபோது “என்ன சேர்ந்தா……..நான் தனியாத்தானே வந்தேன்” என்று சொல்லியபடி தலை நிமிர்ந்தபோது பக்கத்தில் அந்த குடும்பம்.

“சேர்ந்து வாங்கிக்கோங்கோ” மறுபடியும் அர்ச்சகர் சொன்னபோது, அது எதிரே ஸ்ரீ காமாட்சி ரூபத்தில் சாட்சாத் ஸ்ரீ பெரியவாளே அருள்கட்டளையிடுவது போல இரு குடும்பங்களுக்கும் தெளிவு பிறந்து விட்டது.

கோயிலிருந்து வெளியே வந்தபோது இரண்டு குடும்பத்துப் பெரியவர்களும் நேருக்கு நேர் பார்த்து பேசிக் கொண்டு ஒரு புது உறவு பிறந்திருந்தது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஜட்ஜ்மெண்ட் அன்றே கிடைத்துவிட்டதில் அடுத்தநாள் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

நடந்ததெல்லாவற்றுக்கும் நல்ல தீர்ப்பு கிடைத்த மகிழ்ச்சியோடு காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஸ்ரீபெரியவா சன்னதிக்கு சேர்ந்தே வந்து நின்றனர்.

“என்ன ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்து போலிருக்கே” ஒன்றும் அறியாதவர்போல, சகல காரியங்களையும் நடத்தி வைக்கும் ஸ்ரீ நடராஜப் பெருமாள் கேட்டார்.

குடும்பம் இரண்டும் ஒன்று சேர்ந்த தம்பதிகளும் ஸ்ரீபெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தனர்.

கருணா மூர்த்தியாய் ஸ்ரீபெரியவா புன்னகைத்து ஆசி வழங்கினார். இனி அந்த தம்பதியினரை எந்த சக்தியும் பிரிக்க முடியுமா என்ன!

அருள்கரம்

ஒரு  வைணவப் பெண், மைலாப்பூரிலிருந்து ஸ்ரீ மடத்திற்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியிருந்தாள்.

“என்னை என் மாமியார் மிகவும் கொடுமைப்படுதுகிறார். எவ்வளவு சுத்தமாக வேலை செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறார். எப்போதும் என் பிறந்த வீட்டைப்பற்றி வசைமாரி பொழிகிறாள்.  ஒரு நிமிஷம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. நான் எதிர்த்துப் பேசுவது இல்லை. மிகவும் பொறுத்துக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் மனம் தளர்ந்து போய்விடுகிறது.

“ஏதாவது விபரீதம்  ஆகிவிடுமோ என்று கவலையாக உள்ளது. உங்களை எல்லோரும் நடமாடும் தெய்வம், பேசும் தெய்வம் என்று கூறுகிறார்கள். அது உண்மையானால் என் கஷ்டங்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று சேவித்துக் கேட்டுக் கொள்கிறேன்.”

இப்படி கட்டாயம் வழிக் காட்டியே ஆக வேண்டுமென்ற உரிமையோடு அந்த பெண்மணிக்குத் தெய்வத்திடம் வேண்ட வேண்டுமென்று தோன்றியதே ஒரு பாக்யம்தானே!

இக்கடிதத்தை மடத்து சிப்பந்தி படித்துக் காட்டியதும் ஸ்ரீபெரியவா சற்றே மௌனமாயிருந்தார். உலகினுக்கே அருள் சுரங்கமாய் நிற்கும் தயாளருக்கு இப்பெண்மணியின் கோரிக்கைக்கு உடனே வழிகாட்ட காருண்யம் பெருகலாயிற்று.

“அவனை கூப்பிடு” என்று மடத்து சிஷ்யர் ஒருவரை கூப்பிடச்சொன்னார் ஸ்ரீபெரியவா.

“இந்த லெட்டர்லே இருக்கிற விலாசத்தை வாங்கிக்கோ மைலாப்பூர் மடத்துக்கு போ. மடத்து மனுஷாள் வீட்டுப் பெண்மணி யாரேனும் இருந்தா அந்த ஸ்திரியை இந்த லெட்டர் எழுதியிருக்கிற பெண்கிட்டே போகச் சொல்லு. சீதை, தமயந்தி, திரௌபதி இவாளோட கதையைச் சொல்லச் சொல்லு அவாளும் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா …….பொறுமையாய் இருந்தா பின்னாடி பகவான் கிருபையாலே சௌக்யம் அடைஞ்சான்னு ஆறுதல் சொல்லிட்டு வரச் சொல்லு”.

என்று ஸ்ரீபெரியவாளெனும் அன்புத் தெய்வம் எங்கிருந்தோ ஒரு ஏழைப்பெண்மணி எழுதிய கஷ்டத்திற்கு தன் அருட்கரம் நீட்டி அருள் விழைந்தார்.

மடத்து சிப்பந்தியும் மைலாப்பூர் சென்று ஸ்ரீபெரியவா சொல்படியே செய்துவிட்டு திரும்பினார்.  ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டபோதே அந்த கஷ்டத்திற்கான நிவர்த்தி உதயமாகிவிடுமல்லவா மேலும் ஸ்ரீபெரியவாளே தன் தூதராக மடத்துப் பெண்மணிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ஆறுதல் கூறியபோதே கஷ்டங்கள் அங்கிருந்து பறந்திருக்க வேண்டுமல்லவா.

சிலநாட்கள் சென்றன. அதே பெண்மணியிடமிருந்து திரும்பவும் கடிதம் “சௌக்கியமாக இருக்கிறேன். மாமியார் குணம் அதிசயமாக மாறிவிட்டது. அதட்டல், மிரட்டல் எல்லாம் மறைந்தே போய்விட்டது. எல்லாம் ஸ்ரீபெரியவாளின் அருள் என்று நம்புகிறேன். நிஜமாகவே ஸ்ரீபெரியவா தெய்வம்தான்”.

இப்படி ஸ்ரீபெரியவா தெய்வம்தான் என்ற ஒப்புதல் ஏந்திவந்த கடிதத்தை படித்தபோது ஸ்ரீபெரியவா சிரித்துக் கொண்டார்.

“ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேன். நல்ல வேளையா அந்த பெண்ணோட மாமியார் நல்லபடியா மாறிட்டா…. இல்லைன்னா அந்த பொண்ணு என்னை பூச்சாண்டின்னு சொல்லியிருக்கும்.”

இப்படி தனக்கே உரித்தான நகைச்சுவையோடு அந்தத் தெய்வம் ஒரு பேருண்மையை மறைப்பதுப்போல பேச்சை மாற்றி மாயை செய்தது.

அன்பு தெய்வம்

ஒரு கிராமத்தில் முகாம். ஏழை விவசாயி ஒருவர் தயங்கியபடி தன் சொந்த சாகுபடியில் விளைந்த வரகு அரிசியைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

“சாமி சாப்பிடணும்” என்ற அந்த ஏழை சொன்னபோதும் அதை ஸ்ரீபெரியவா ஏற்றுக் கொள்வாரோ என்ற சந்தேகம்.

எளியோரின் அன்புக்கு எப்போதும் கட்டுப்படும் காருண்ய மூர்த்தி அதை வடிக்கச் சொன்னார். அத்துடன் புளிக்காய்ச்சல் சேர்த்து வரகு அரிசி புளியஞ்சாதம் செய்யச் சொன்னார்.

அன்று ஸ்ரீசந்திர மௌளீஸ்வரருக்கு அந்த வரகு புளியஞ்சாதம் நைவேத்யமானது.  தனக்கும் பொரி வேண்டாமென்று அன்றைய தினம் ‘சாமி சாப்பிடணும்’ என்ற அன்பு பக்தரின் கோரிக்கையை அதையே உணவாக்கி ஸ்ரீபெரியவாளெனும் அன்புத்தெய்வம் நிறைவேற்றியருளியது.

இப்பேற்பட்ட அன்புத்தெய்வமிருக்க, நாம் கொள்ளும் பக்திக்கு அக்கருணை எல்லா நலன்களையும் வழங்கி காத்தருளுமல்லவா!

-கருணை தொடர்ந்து பெருகும்.

ஒரு துளி தெய்வாமிருதம்

இப்போதுபோல, நாற்பது ஐம்பது வருடங்களுக்குமுன் எல்லோருக்கும் நோயும், நொடியும் அவ்வளவாக இல்லாதிருந்தது.  காரணம் இப்போது அநேகருக்கு மனதில் நெறியில்லாமல் இருப்பதும் அநேக துராசாரங்கள் வந்திருப்பதும்தான்.

சாஸ்திர பிரகாரம் நெறியோடு, ஆசாரத்தோடு இருப்பதுதான் சௌக்கியமாக, ஆரோக்யமாக இருக்கவும் உதவுவது. இப்போது எச்சில் தீண்டல் பார்க்காததாலேயே அனேக வியாதிகள் தொற்று நோய்களாய் பரவுகின்றன. அநாசாரத்தை ஃபாஷன் என்ற பெயரில் எடுத்துக் கொள்கிறோம்.

அதேபோல், எண்ணங்களும் பிறரை பாதிக்கின்றன.  மூளை எண்ணங்களும்  எலெக்ட்ரிக் கரண்ட் பொல பிறரை பாதிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூட சொல்கிறார்கள்.  அதனால் நாம் சரீரத்தையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் அதனால் பிறருக்கும் உபகாரமாயிருபோம்.

பல தினுசான பரோபகாரங்களை செய்யச் செய்ய நம் மனசு  தானே  சுத்தி  அடையும்.

(பாடுவார்  பசி  தீர்ப்பாய்!  பரவுவார்  பிணி  களைவாய் !) – சுந்தரமூர்த்தி  சுவாமிகள்  தேவாரம்.

————————————————————————————————————————————–

(VAyinAl  unnaipparavidum  adiyEn  paduthuyar  kalaivAy  PAsupathA  ParanjudarE)

                     THE  GREATNESS  OF  SRI  SRI  SRI   MAHAPERIAVA. (17—03—2009)

                                     (Thanks  to   KachchimoodhUr  KarunAmoorthy)

THE  HIGHEST  JUDGE  OF  THE  WHOLE  WORLD.

It  is  the  fruit  of  our  ‘PunyA’ (Good  KarmA)  that  Sri  Sri  Mahaperiava,  the  Yogi   who  shone  with  the  distinction  of  Suka  Brahma  Rishi,  was  always  simple  and  showered  His  blessings  on  all  of  us,  hiding  the  fact  that  He  was  the  Incarnation  of  Eswaran.

There  are  plenty  of  experiences  that  He,  as  Eswaran,   bestowed  us  with.  There  was  a  family  called  ‘Pathinettu  GrAma  VAththimAr’  (a  subsect )  in  Thanjavur  district.  They  were  affluent  people,   very  devoted  to  Eswaran,  as well  as  Sri  Periava  who  was  none  other  than  Eswaran.

Marriage  was  celebrated  elaborately,  after  matching  of  horoscopes  and  meeting  with  the  girl’s  family  etc.  The  couple  had  a  happy  life  too.  All  of  a  sudden,   a  small  bitterness  between  them  grew  steadily  and  reached  the  stage  of  divorce.

The  issue  went  to  the  court.  The  case  continued  there  with  a  lot  of  arguments  and  suggestions,  but  in  vain.

On  the  day  before  the  judgment  was  to  be  delivered,  both  the families  felt  that  a  good  decision  would  be  available  for  any  unsolvable  problems   in  the  ‘SannidhAnam’  of  SAksAt  Eswaran.

May  be,  their  good  fortune   made   them  decide  to  go  and  have   Sri  PeriavA’s  Darsan  separately,   as  there  was  no  communication   between  the  two  families.

The  bride  and  her  parents  were  the  first  to  go  and  stand  in  front  of  Sri  PeriavA,  for  His  Darsan.  Sri  PeriavA   must  have  realized  their  grief  without  them  telling  Him.

As  if  to  console  them,  Sri  PeriavA  told  them  to  go  and  have  Darsan  of  Sri  KAmAkshi  AmbAl   first  and  come  back,  and  sent  them  off.

After  some  time,  the  groom’s  parents  came  and  stood  there.  The  boy’s  father,  was  stuttering   in  a  choked  voice,  “Tomorrow  is  the  judgment”.

Sri  SarvEswaran  gave  them  also  the  same  order  to  first  go  and  have  KAmAkshi  Darsan  and  sent  them  off.

The  temple  of  Sri  KAmAkshi  Amman  was  extremely  crowded.  Because  of  the  grief—stricken  state  of  mind,  both  families  were  not  in  a  position  to  pray  from  their  heart.  They  had  that  careless  attitude,  “Because  of  PeriavA’s  order,  we  came  here”.

They  did  not  see  each  other,  while  standing  in  the  milling  crowd  in  front  of  KamAkshi  Sannidhi.

The  ‘Archakar’ (temple  priest),  performed  the  ‘ArchanA’  and  brought  the  plate  containing  the  ‘PrasAdham’  and  said,  “come  and  receive  this  TOGETHER !”.

The  two  families  did  not  understand.    When  the  priest  asked  them  to  come  and  receive  it  TOGETHER,  one  family  thought,  “Why  TOGETHER?  We  only  came  here!”  and  looked  up  and  back.  The other  family  was  standing  beside  them.

When  the  priest  told  them  again,  “come  and  receive  this  TOGETHER”,   the  two  families  realized  that  SAksAt  Sri  Periava   only  was  telling  them  in  Sri  KAmAkshi’s  swaroopam.

When  the  two  families  came  out  of  the  temple,  a  new  relationship  blossomed  between  them  when  the  elders  of  both  the  families  started  talking  with  each  other.

As  they  received   the    judgment  from  Sri  Sri  Sri  MahaPeriava  that  day  itself,  they  did  not  bother  about  the  next  day’s  judgment.  They  came  to  Sri  PeriavA’s  Sannidhi  straight  from  KAmAkshi  temple  together,  with  a  happy  state  of  mind  that  everything  ended  well.

“It  looks  that   the  judgment  has  come,  is  it?”—asked  Sri  NatarajaPerumAl,  who  makes  everything  and  anything  happen  (in  this  world),  as  if  He  was  not  aware  of  anything!

Both  the  families  and  the  couple  prostrated  before  Sri  Periava.

Sri  PeriavA,  the  epitome  of  compassion  that  He  was,  smiled  and  blessed  them.  Can  any  power  in  the  world  separate  them  again?

THE  HAND  OF  COMPASSION.

A  Vaishnavite  lady  wrote  an  emotional  letter  to  SriMatam.

“My  mother-in-law  is  torturing  me  very  much.  However  much  clean  my  work  be,  she  always  finds  fault  with  it.  She  always  talks  ill  of  my  parents.  There  is  not  a  single  moment  of  peace  for  me.  I  do  not  argue  with  them  at  all.   Even  though  I  am  bearing  with  all  this,   my  mind  gets  depressed  sometimes.

I  am  worried  that  some  terrible  thing  might  happen  anytime.  Every  one  talks  of  you  as  the  ‘Walking  God’  and  ‘Speaking  God’.  If  that  is  true,  I  pray  and  request  you  to  find  a  solution  to  my  problems.”

That  it  dawned  on  her  to  pray  to  that  God   rightfully,  that  He  should  show  her  a  way  to  solve  her  problems,  is  in  itself  a  big  boon,  is  it  not?

When  the  attendant  read  out  this  letter  to  Him,  Sri  PeriavA  was  silent  for  sometime.  Compassion  started  to  flow  from  the  ‘KArunya  Moorthy’  who  was  a  treasure  house  of  compassion,  to  solve  this  lady’s  problems.

He  mentioned the  name  of  a  Sri  Matam  disciple  and  asked  him  to  be  called  there.

“Take  the  address  found  in  this  letter  and  go  to  Mylapore  Matam.  Ask  a  lady  from  the  family  in  the  Matam  to  go  to  this  address  and  meet  the  lady  who  has  written  this  letter.  Ask  her  to  narrate  the  stories  of  Sita, Dhamayanthi  and  Droupathi  to  her.  Let  her   console  the  lady  by  telling  her  that  they  have  also  gone  through  a  lot  of  difficulties  in  their  lives,  but  because  they  were  very  patient,  their  difficulties  disappeared  and  happiness  engulfed  them.”

Thus,  Sri  PeriavA,  the  epitome  of  ‘KArunyam’  extended  His    hand  of  compassion  towards  a  poor  lady  from  somewhere  to  solve  her  problem.

The  SriMatam  attendant  went  to  Mylapore  as  directed  by   Sri PeriavA,  did  what  was  told  to  him  and  returned.  The  moment  the  problem  was  submitted  to  Sri  PeriavA,  the  solution  would  have  emerged;  moreover,  when  He  sent  the  ladies  of  the  (Mylapore)  Matam  family  as  His  messengers  to  the  lady  and  consoled  her,  all  her  difficulties  would  have  flown  away.

A  few  days  passed  by.  A  letter  came  from  the  same  lady.  “I  am  happy;  surprisingly   my  mother-in-law’s  behaviour  has  totally  changed  for  the  better  .  Scolding  and  threatening  have  totally  disappeared;  I  believe  it  is  all  PeriavA’s  blessing  only;  PeriavA  is  TRULY  A  GOD.”

Sri  PeriavA  laughed  when  He  read  the  letter  approving  that  PeriavA  is  truly  a   God !

“I  have  done  a  lot  of  good  KarmA (Punyam);  it  is  good  that  the  lady’s  mother-in-law  changed  for  the  better.  Otherwise   the   lady   would   have  said   that  I  am  a  bogyman.”

Thus,  the  ‘Pratyaksha  Deyvam’  with  His  natural  sense  of  humour,  was  hiding  a  great  Truth  and  played  a  game  of  illusion.

GOD  THAT  IS  LOVE.

The  camp  was  in  a  village.  A  poor  farmer  brought   ‘Varakarisi’(millet)  grown  in  his  farm  and  offered  the  same  with  some  hesitation.

When  he  said ‘Sami  should  accept  and  eat  this’,  there  was  doubt  if  Sri  PeriavA  would  accept  it.  The  Epitome  of  Compassion  who is   always  moved  by   the  love  shown  by  simple  folks,  asked  somebody  to  cook  that  rice.  He  asked  them  to  add   tamarind  paste (புளிக்காய்ச்சல்)  and  make  tamarind  rice.

That  tamarind  rice  was  the  ‘NivEdhyam’  for  Sri  Chandramouleeswarar  on  that  day.  Sri  PeriavA  also  consumed  the  tamarind  rice  instead  of  ‘Pori’ (puffed  rice),  just  to  please  the  poor  farmer.

Such  a  ‘KArunya  Moorthy’  who  is in  the  midst  of  all  of  us  will  certainly  shower  His  blessings  on  us  when  we  submit  ourselves  at  His  lotus  feet.

COMPASSION  WILL  CONTINUE  TO  FLOW………

A  DROP  OF  THE  DIVINE  NECTAR.

Forty  or  fifty  years  ago,,  there  was  not  so  much  of  diseases  and  illness  as  it  is  prevalent  at  present.  The  reason  is  that  many  people  have  no  discipline  in  their  minds  and  a  lot  of   bad  customs  have  come  to  stay.  Living  in  a  disciplined  manner  following  good  customs  and  practices   will  help  us  to  lead  a  healthy  and  happy  life.  A  lot  of  infectious  deceases  is  spreading  today  because  we  do  not  observe  cleanliness  in  our  daily  habits.  Instead   we   take  certain  unclean  habits  as  fashion  and  practice  them.

Similarly,  thoughts  also  affect  others.  Even  scientists  say  that  our  thoughts  affect  others  like  an  electric  current.  Therefore  if  we  keep  our  body  and  mind  clean,  others  will  also  benefit  from  it.

If  we  keep  doing  various  kinds  of  services  to  others,  our  minds  will    automatically  get   purified.

(PAduvAr  pasi  theerppAi  ParvuvAr  pini  kalaivAy)

DhEvAram  by  Sundaramurthy  Swamigal.

 

 



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Hara Hara Shankara Jaya Jaya Shankara

Leave a Reply

%d bloggers like this: