Periyava Golden Quotes-535


ஆலோசனை பண்ணிப் பார்த்தால் தெரியும். லோகத்தில் எத்தனையோ ஸித்தாந்தங்களிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஏற்பட்டிருக்கிற கார்யங்களோ ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கின்றன. நாம் தீபாராதனை பண்ணினால் இன்னொருத்தன் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறான்; நாம் சாந்த்ராயண விரதம் என்றால் வேறே ஒருத்தன் ரம்ஜான் fasting என்கிறான். நம்முடைய தேவாலயங்களில் எப்படி பூஜை நடக்கிறதோ அப்படியேதான் பௌத்த, ஜைன ஆலயங்களிலும் நடக்கிறது. நமக்குள்ளேயே எடுத்துக் கொண்டால் ஒரே போல தப்த சின்னங்களை தரித்துக் கொள்கிறதில் [சூடு போட்டு முத்திரை பதித்துக் கொள்கிறதில்] த்வைத அநுபவம், விசிஷ்டாத்வைத அநுபவம் என்று வேறேவேறாயாக வருகின்றனவா என்ன அத்வைதத்துக்கு, இப்போது “வேதாந்தா” லெக்சர் பண்ணுபவர்கள் சொல்கிறபடி, எந்த ஆசார அநுஷ்டானமுமே இருக்கக்கூடாதுதான். ஆனால் அத்வைத ஆசார்யர்களும், மடங்களும் விதித்திருக்கிறபடி இந்த ஸித்தாந்திகளும் மற்றவர்களைப் போலவே ஸ்நான பானம், பூஜை, தீர்த்த யாத்திரை, திவஸ தர்ப்பணம் என்றுதானே பண்ணுகிறார்கள்? சைவன் எப்படி அபிஷேகம், அர்ச்சனை, கந்த, புஷ்ப உபசாரங்கள் செய்கிறானோ அப்படியேதான் வைஷ்ணவனும் செய்கிறான். ஸாளக்ராமமும் லிங்கமும் வேறேயாக இருக்கட்டும். இவன் போடுகிற துளஸியும் அவன் போடுகிற வில்வமும் வேறேயாக இருக்கட்டும். புளியோதரையும் சம்பாப் பட்டையும் வேறாக இருக்கட்டும். அவன் வைகுண்ட ஏகாதசிக்குக் கண்விழித்துப் பட்டினி கிடக்கிறானென்றால் இவன் சிவராத்திரிக்குத்தான் அப்படிச் செய்வது என்றே இருக்கட்டும். ஆகக்கூடி கார்யம் ஒன்றுதானே? இப்படியே  சின்னங்களும்; சாந்துப்பொட்டு, திருமண், விபூதி ஏதோ ஒன்று, ஆக நெற்றியில் சின்னம் இருந்தாக வேண்டும். மடிசார்ப் புடவை வலது பக்கம், இடது பக்கம், வெளியிலே கச்சம் தெரிவது, தெரியாதது – எதுவானாலும் கச்சம் என்ற சின்னம் பொது. ஸந்நியாஸியாகிவிட்டால்கூட ஏக தண்டம், த்ரி தண்டம் என்று ஏதோ ரூபத்தில் தண்டம் என்ற சின்னம் இருந்தாகணும்.

ஒரே மாதிரி ஸந்தியாவந்தனம், ஒரே மாதிரி பூஜை, பஜனை, விரத உபவாஸங்கள், ஷேத்ராடன தீர்த்தாடனங்கள், திவஸம் முதலியன பண்ணிக்கொண்டே வெவ்வேறே ஸித்தாந்தங்களில் ஸித்திக்காக முயற்சி பண்ணுவது என்றால் என்ன அர்த்தம்? ஒன்று, எந்த ஸித்தாந்தமானாலும் இவை வேண்டத்தான் வேண்டும் என்பது. இன்னொன்று, வேறு வேறு மாதிரியான ஸித்தாந்தங்களுக்கும் ஒரே மாதிரியான ஆசாரணை என்பதால் ஆசாரமும் ஸித்தாந்தமும் நேராக ஸம்பந்தப்பட்டவையல்ல என்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If we analyze it is very clear that though there are different philosophical convictions in this world their practices are almost the same. If we perform Deepaaraadhana another person lights candles. If we observe Saanthraayana fasting another person observes Ramzan fasting. The poojas performed in Buddhist and Jain temples are similar to what is performed in our temples. If we study our own religion, the marking of religious symbols on the body or their placement on the body through branding does not differ in the Dwaita or Visishtaadwaita experience. As the Vedantist-lecturer of today declares there should not be any ritual or tradition for Adwaita. But as per our Adwaita Achaaryas and the Matams established by them the believers in Adwaita tenets also have traditions of daily practices and perform poojas, pilgrimage, and ancestral rituals like others. Both the Saivite and Vaishnavite perform Abhishekam, Archana, and Gandha – Pushpa upachaarams (offering of flowers and fragrances) in the same manner. Salagramam and lingam may be different. The Thulasi the Vaishnavite offers and the Vilva that the Saivite offers may be different. The Puliyodharai Naivedhyam (the food offering) of the Vaishnavite and Samba Pattai of the Saivite may be different. The Vaishnavite may observe fasting and keep awake on the Vaikunta Ekadasi and the Saivite may do so on Sivaraathri. But the actions are the same. Same is the case with the symbols. The symbol of Saandhu Pottu, Thiruman, or Vibhuthi must be on the forehead. The nine yards saree may be worn with a pallu on the right or left and with the Kachcham visible or hidden but the Kachcham is a common symbol. Even if one renounces the world and becomes a Sanyaasi, there must be the symbol of the Dandam (the holy stick carried by the Sanyaasis) whether it is Ekadandam or thridandam. What becomes evident from the practice of the same kind of rituals like Sandhya Vandhanam, Pooja, Bhajans, ritualistic fast, pilgrimages, and ancestral rituals while trying to realize the Truth through various philosophical tenets is that these are requirements whatever the philosophical conviction. Also, that there is no direct connection between the philosophy and the ritualistic traditions since they are common to all branches of philosophy. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: