Periyava Golden Quotes-534

இப்போது என்ன சொல்கிறேனென்றால்: ஆசார அநுஷ்டானங்களில் பொரும்பாலானவற்றுக்கும் ஸித்தாந்தத்துக்கும் நேர் ஸம்பந்தம் அதிகம் கிடையாது என்கிறேன். ஸமயாசாரங்களும் கர்மாக்களும் எதற்காக என்று திருப்பித் திருப்பிச் சொன்னேன். ஒரு ஜீவனுடைய சித்த சுத்திக்காக என்றுதானே சொன்னேன்? ஒரு ஜீவன் முடிவான லக்ஷ்யமாக ஏதோ ஒரு தத்வத்தின், ஸித்தாந்தத்தின் ஸத்யத்தைப் பிரத்யக்ஷ அநுபவமாக்கிக் கொள்வதற்கு நேர் உபயமாகவே சாஸ்திர கர்மாவைப் பண்ண வேண்டும் என்று சொல்லவில்லையே? கிருஷ்ண பரமாத்மாவும் ஸரி, சங்கர ராமாநுஜ மத்வாதி ஆசார்யர்களும் ஸரி, கர்மாக்கள் ரூபத்திலும் வெளிச் சின்னங்களாகவும் இருக்கிற ஆசார அநுஷ்டானங்களைச் சொன்னதெல்லாம் சித்த சுத்திக்காகத்தானேயொழிய முடிவான லக்ஷ்யமான தத்வ ஞான ஸ்வாநுபூதிக்காக அல்ல. (ஞானம் என்று இங்கே நான் சொல்வது பக்தி ஸித்தாந்தங்களில் பக்தி என்ன தத்வத்தை உள்ளபடி அறிந்து கொள்வதையும் குறிக்கும்.) எந்த ஸித்தாந்தமானாலும் அதன் ஸத்யத்வத்தை ஒருவன் தெரிந்து கொள்கிற பக்வம் வரவேண்டுமானால் அவனுடைய மனஸு அழுக்கிலாமலிருந்தால்தான் முடியும். சித்தம் என்ற கண்ணாடி அழுக்காகவும் ஆடிக்கொண்டும் இருக்கிற வரையில் அதில் எந்த ஸித்தாந்தத்தின் உண்மையும் தெளிவாகவோ, ஸ்திரமாகவோ பிரதிபலிக்காது. ஆகையால் ஸித்தாந்தம் வேறே வேறேயானாலும் அதைப் பெறுவதற்கு முந்தி எல்லாரும் common -ஆகப் பெற வேண்டியது சித்த சுத்தி. இப்படி சுத்தி ஏற்படவே ஆசார அநுஷ்டானம் என்பதே மறுபடி மறுபடி சொன்ன விஷயம். அதாவது ஸித்தாந்தத்தில் ஸித்தி என்ற முடிவான லக்ஷியத்துக்கு நேர் உபாயமான சித்த சுத்தி என்ற பூர்வாங்கமான லக்ஷ்யம் ஸித்திப்பதற்கு உபாயமாகத்தான் ஆசார அநுஷ்டான ரூபமான கர்மாக்களை வைத்திருக்கிறது. ஸித்தாந்தத்துக்கும் கார்யத்துக்கும் டைரக்ட் ஸம்பந்தம் கிடையாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

What I am saying now is there is no direct connection between majority of the traditions/rituals and philosophy. But I have been often stating the reason for the observance of these traditions and rituals. Did I not tell that it is for the purification of one’s mind?  A soul’s ultimate goal must be to experience the Truth of a certain philosophical conviction and I have not stated that the practice of rituals is a direct means for achievement of this goal. Lord Krishna or Acharyas like Sankara, Madhwa and Ramanuja advocated these traditional rituals and symbols for the purification of the mind and not for the ultimate goal of experiencing the Truth of one’s philosophical conviction (Gnana Swaanubhoothi). What I mean by Gnana here also includes realizing the true nature of the Bhakti in the various schools of Bhakti philosophy.  Whatever is the philosophy, if a person has to attain the maturity to experience its ultimate Truth, his mind should be pure. If the mirror of mind is vacillating and clouded by impurities, it will not reflect the Truth of the philosophy clearly and steadily. So the common factor to realization of any philosophical truth is the purity of mind. The rituals and traditions exist to enable one to attain this mental purity. As it has been repeated often, attainment of mental purity is the pre requisite for realization of the philosophical Truth and traditions and ritualistic practices exist to attain the former goal. There is no direct connection between these practices and philosophy. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: