Jaya Jaya Sankara Hara Hara Sankara – Newsletter from Sri Pradosham Mama Gruham. How many myriad of incidents we have seen that one does not get Guru/Aacharya anugraham when they let their near/dear down or treat them like dirt? How many more incidents will we see like this in future? In this case the brother realized his fault and mended himself back on the right track.
Many Jaya Jaya Sankara to Smt.Savita Raj for the Tamizh typing and Shri. B.Narayanan Mama for the translation. Rama Rama.
வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (17-2-2009)
( நன்றி : கச்சிமூதூர் கருணாமூர்த்தி)
சுகபிரம்மரிஷி அவர்களின் உயர்ந்த யோகநிலையும் தவசீலமும் ஒருங்கே சாட்சாத் ஈஸ்வர அவதாரமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் மாமுனிவரிடம் காணும் பாக்யம் நமெக்கெல்லாம் கிட்டியுள்ளது. நடமாடும் தெய்வமாக பல பக்தர்களுக்குத் தன் அவதார ரகசியத்தை உணரும் பெரும் பாக்யத்தையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அருளியுள்ளார்.
அதில் ஸ்ரீமடம்பாலு எனும் மகாபாக்யசாலி சாட்சாத் தெய்வத்திற்குக் கைங்கர்யம் செய்யும் பேரருள் பெற்று நித்தம் அந்த அவதாரத்தின் மேன்மையைக் காட்டும் சம்பவங்களை நேரில் அனுபவித்தவர். அவர் கூறும் அரிய அனுபவங்களுள் ஒன்று. மரவக்காடு ராமசுவாமி எனும் அன்பருக்கு நான்கு பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள். இளவயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால், மாத வருமானத்துக்கு உத்திரவாதம் இல்லை. வைதீகத்திற்கு பண்டிதர்களுடன் உதவிக்குப் போவதில் கிடைக்கும் மிக சொற்ப வருமானம்தான் குடும்பத்திற்கு ஆதாரம்.
பரம்பரையாக இருக்கும் வீடு, அதனால் வாடகை என்பது பிரச்சனையில்லை. கிராமத்துக்கு வெளியே ஒரு தென்னந்தோப்பும் சொந்தம். அதில் வரும் வருவாய் ஒரு வாய்ச் சாப்பாட்டிற்கு வகை செய்தது.
பெரிய பெண்ணிற்கு இருபத்திரண்டு வயதாகியிருந்தது. அடுத்தவளுக்கும் இருபது. இரண்டு பெண்ணிற்கும் ஒரே முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணினால் செலவு குறையும் என்பது இவர் எண்ணம். ஆனால் அப்படி இவர் எதிர்ப்பார்த்தது நடக்கத் தாமதமாகும் போலிருந்தது. மூத்தவளுக்கு ஒரு வரன் வந்தது. இதை நிச்சயம் செய்துவிடலாமென்ற துடிப்பில் பணத்திற்கு ஏற்பாடு செய்ய அந்த ஊர்க் கோடி தென்னந்தோப்பை கிரயம் பேசிவிட்டார்.
தம்பி இப்படி செய்தது அவர் அண்ணனுக்கு பிடிக்கவில்லை. அது பரம்பரைச் சொத்து. அவருக்கும் உரிமை உண்டாம். ஆகவே கோர்ட்டுக்குப் போய்த் தோப்பு விற்பதற்கு ஸ்டே ஆர்டர் வாங்கிவிட்டார்.
ராமசுவாமி அய்யருக்கு அடுத்து என்ன செய்வதென்றுப் புரியவில்லை. ஏற்கனவே பணக்கஷ்டம். இதில் ஏதோ முதல் பெண்ணுக்கு அந்த வரனை முடிக்கலாமென்று சுவாதீனமாக தோப்பை விற்றதில் முதலுக்கே மோசமாக இப்படி அண்ணன் செய்துவிட்டதில் மிகவும் வேதனையுற்றார்.
வேறு ஏது கதி என காக்கும் கடவுளாய் அனுக்ரஹிக்கும் பரமதயாளரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை நோக்கி ஒடிவந்தார்.
ஸ்ரீபெரியவாளை தரிசித்து நமஸ்கரித்து எழுந்து நின்றவர் தொண்டையை அடைக்கத் தன் நிலைமையைக் கூறி கண்ணீர் பெருக்கினார். மகா காருண்யரான ஸ்ரீபெரியவா ஐந்து நிமிடங்கள் ராமசுவாமி அய்யரையைத் தன்அருள்பார்வையை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒன்றும் கூறாமல் பிரசாதம் மட்டும் கொடுத்தனுப்பினார்.
சோகச் சுமையுடன் வந்த பக்தருக்கோ பெருத்த ஏமாற்றம். கவலைப்படாதே என்று ஒரு அடையாளமோ ஒரு குறிப்போ கூடக் காட்டாமல் இப்படி மகாபெரியவா உத்தரவருளிவிட்டாரே என்று பெரும் ஆதங்கத்தோடு வெளியே வந்தார்.
வெளியே வந்ததும் ஸ்ரீபெரியவாளின் கைங்கர்ய பாக்யம் பெற்ற பாலு இவர் கண்ணில் பட்டார். ராமசுவாமி தன் ஆதங்கத்தை ஸ்ரீபாலுவிடம் இப்படி கொட்டினார்.
“பெரியவா மனசு வைச்சா என்ன வேணும்னாலும் பண்ணாலாம். என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு. எப்போ பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லை. அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லை. என்னால் தனியா பண்ணமுடியுமா? நான் கஷ்ட ஜீவனத்தில் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணும்போது இப்படி இடைஞ்சலா செஞ்சுட்டாரே” என்று அழாதகுறையாகக் கூறினார். இதைக்கேட்ட ஸ்ரீபாலு “இதையெல்லாம் ஸ்ரீ பெரியவாகிட்டே சொல்றதுதானே” என்றார்.
“எல்லாத்தையும் சொன்னேனே, பெரியவா கேட்டுண்டே இருந்தா. விபூதி பிரசாதம் கொடுத்தா. வேற ஒரு அனுக்ரஹமும் பண்ணலே”.
மிகவும் வேதனையோடு ராமசுவாமி அய்யர் சொன்னபோது பாலுவிற்கும் இப்படி ஸ்ரீ பெரியவா நடந்துக் கொள்ளும் வாய்ப்பில்லையே என்று தோன்றியது. எல்லாருக்கும் ஆறுதலாக தன் கருணையைக் காட்டும் மகான் ராமசுவாமியை மட்டும் ஒதுக்கி விடவா போகிறார்? அதும் ராமசுவாமி போன்ற ஏழ்மை நிலையிலுள்ள பக்தர்களை ஸ்ரீ பெரியவாளின் பரிவும் அன்பும் எப்போதும் கைவிட்டதில்லையே?
“கவலைப்படாதே பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே ஆக வேண்டியதைப் பார்………………அவா எப்படியும் காப்பாத்துவா” என்று ராமசுவாமிக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
அடுத்த சில நாட்கள் சென்றன. ஸ்ரீ மார்க்கபந்து சாஸ்திரிகள் என்ற உபன்யாஸ திலகம் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வந்தார். ஜரிகை போட்ட தூய வேட்டி, பளபளக்கும் அங்கவஸ்திரம், தங்க கவசம் போட்ட ருத்ராட்ச மாலை, நவரத்தினமாலை, என செல்வச் செழிப்பு அவருடைய அலங்காரத்தில் தெரிந்தது.
எப்போதும் இந்த உபன்யாஸத்திலகத்திற்கு ஸ்ரீபெரியவாளிடம் ஒரு சலுகை இருப்பதுபோல தோன்றும். வெகு நேரம் பல விஷயங்களை ஸ்ரீபெரியவாள் இவரிடம் பேசிக்கொண்டிருப்பார். வரும்போதெல்லாம் மாலை நேரத்தில் இவரை உபன்யாசம் செய்யச்சொல்வார் ஸ்ரீபெரியவா.
ஆனால் இம்முறை தன் மனைவியும் இரு சிஷ்யர்களோடும் தட்டுநிறைய பழங்களோடு வந்து நின்றவரிடம் எதுவும் ஸ்ரீ பெரியவா பேசாமல், யார் யாருடனோ என்னெவெல்லாமோ பேசிக்கொண்டிருந்தது வித்யாசமாக இருந்தது.
இன்றைக்கு என்ன இப்படி? அகில பாரதத்திலும் புகழ் பெற்ற உபன்யாசம் செய்பவர் இப்படிக் காத்துக்கொண்டிருக்கிறாரே? ஸ்ரீபெரியவாளிடம் இதை எடுத்துக் கூறலாமென ஸ்ரீபாலு ‘மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்’ என்று சப்தமாக சொன்னார்.
ஸ்ரீபெரியவா லேசாக இவர் பக்கம் பார்வையைத் திருப்புவது போல் தெரிந்தது. இந்த சமயத்திற்க்குக் காத்திருந்ததுப் போல மார்க்கபந்து சாஸ்திரிகள் பழத்தட்டை சமர்ப்பித்து “ரொம்ப அபூர்வமா ஏழெட்டு நாளுக்கு ஒரு புரோகிராமுமில்லாம ரெஸ்ட்! அதனாலே திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன். ஸ்ரீநிவாஸனுக்கு திருக்கல்யாணம் பண்ணனும்னு என் பத்தினி ஆசைப்பட்டா. உடனே புறப்பட்டுட்டேன். ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீநிவாஸ கல்யாணம் நடத்தணும்.”
இப்படிக் கூறி நின்றவரை ஸ்ரீபெரியவா ஏறிட்டுப் பார்க்கவில்லை. முகம் கொடுத்தும் பேசவில்லை. தரிசனத்திற்கு வந்திருந்த மிக எளிமையானவர்களொடெல்லாம் உற்சாகமாகப் பேசியவர். மார்க்கபந்துவிடம் மட்டும் அரை மணிநேரமாகியும் பேசவில்லை.
ஸ்ரீபெரியவாளுக்கு நினைவூட்டுவதுபோல “சாஸ்திரிகள் நின்னுண்டிருக்கார்” என்று ஸ்ரீபாலு மீண்டும் எடுத்துரைத்தார்.
“ஆமாம்……ஸ்ரீபெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம் செய்ய திருப்பதி போறேன்” மார்க்கபந்து சாஸ்திரிகள் எப்படியாவது ஸ்ரீபெரியவா தனக்கு அனுக்ரஹித்து அனுப்பவேண்டுமே, ஏன் இன்று இப்படி பாராமுகமாக பரமேஸ்வரர் தன்னை சோதிக்கிறார் என்ற தவிப்போடு முறையிட்டார்.
ஸ்ரீ பெரியவா சடாலென்று எழுந்து நின்றார் “முதல்லே பத்மாவதி ‘பரிணயம்’ பண்ணுங்கோ” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டார். எல்லோருக்கும் இந்த செயல் விநோதமாகப் பட்டது.
ஸ்ரீ நிவாஸ கல்யாணம் என்றால், அது பத்மாவதி கல்யாணமும் தானே? திருப்பதியில் நிறைய பேர் கல்யாண உற்சவம் செய்கிறார்களே, நீ திருச்சானூரில் பத்மாவதி கல்யாண உற்சவம் செய் என்கிறாரா?
“பெரியவா இப்படி உத்தரவு போட்டுட்டு போயிட்டாரே” என்று முதலில் மார்க்கபந்து சாஸ்திரிகளுக்குப் புரியவில்லைதான்.
ஆனால் அந்த ஈஸ்வர கட்டளையின் ரகசியம் உடனே அவர் மனதிலும் அந்த ஈஸ்வர கிருபையே பளிச்சிட வைத்து அர்த்தத்தை புரிய வைத்து விட்டது.
இன்னும் இரண்டுமாதங்கள் ஓடின. முகமெல்லாம் பூரிப்போடு திரும்பவும் ராமசுவாமி அய்யர் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வந்து நின்றார். இப்போது தன் பெண்ணின் கல்யாணப் பத்திரிக்கையை சமர்ப்பிக்கும் சந்தோஷத்தில் வந்திருந்தார்.
“எல்லாம் ஸ்ரீபெரியவாளோட அனுக்ரஹம்தான். கல்யாண செலவு அத்தனையும் என் அண்ணாவே ஏத்துண்டுட்டார். கன்னிகாதானம் பண்ணிக்கொடுக்கிறது மட்டும் தான் உன் பொறுப்பு மீதி எல்லாத்தையும் என்கிட்டே விட்டுடுன்னு அண்ணா சொல்லிட்டார். தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிட்டார். சின்னப்பையனுக்கு உபநயனம் செஞ்சு வைச்சு தன் சிஷ்யனா வைச்சுக்கிறேன்னு சொல்லிட்டார். அண்ணா இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட காணலே……… இதெல்லாம் ஸ்ரீபெரியவா அனுக்ரஹம் தான்” என்று ராமசுவாமி தழுதழுக்க சொல்லிமுடித்தார். இதற்கு ஸ்ரீபெரியவா எப்படி அனுக்ரஹம் செய்தாரென்ற ரகசியம் அவருக்கும் தெரிந்திருப்பதாக தோன்றவில்லை.
ஸ்ரீபெரியவா தன் திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்.
ராமசுவாமி வெளியே வந்தபோது, இப்போதும் ஸ்ரீபாலு எதிர்ப்பட்டார். “என்ன ராமசுவாமி கையிலே கல்யாணப் பத்திரிக்கையா? பெண்ணுக்குக் கல்யாணமா? கையிலே காலணா இல்லேன்னு சொன்னீரே” என்றபடி தன்னிடம் காட்டிய பத்திரிக்கையை ஸ்ரீபாலு பார்த்தார்.
“மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகளின் பௌத்திரியும் என் இளய சகோதரன் சிரஞ்சீவி ராமசுவாமியின் சீமந்த புத்ரி சௌபாக்யவதி பத்மாவதியை” என்ற ஆரம்பித்த பத்திரிக்கையில் “இப்படிக்கு’ என்று மார்க்கபந்து சாஸ்திரிகள் என்று போட்டிருந்தது.
ஸ்ரீபாலுவுக்கு ஆச்சர்யத்தால் நிலை தடுமாறியது.
இரண்டு மாதங்களுக்கு முன் ‘முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ’ என்று ஸ்ரீபெரியவா மார்க்கபந்து சாஸ்திரிகளிடம் சொன்னதன் அர்த்தம் இதுதானோ? இவர்தான் ராமசுவாமியின் தமையனார் என்று ஸ்ரீபெரியவாளுக்கு தெரிந்திருக்கலாம்தான், ஆனால் ராமசுவாமியின் பெண்ணின் பெயர் பத்மாவதி என்பது எப்படி தெரிந்திருக்க முடியும்?
ஸ்ரீஸ்ரீஸ்ரீபெரியவாளெனும் அன்பு தெய்வத்திற்கு அனைத்தும் தெரியும் என்பது ஒரு விசேஷமாகாதென்பதோடு, அந்த தெய்வத்திற்கு அனுக்ரஹம் செய்ய மட்டுமே தெரியுமென்பதும் உண்மையல்லவா!
இப்பேற்பட்ட அனுக்ரஹத்தை அள்ளிப் பருகும் ஸ்ரீபெரியாளின் பக்தர்கள் வாழ்வில் சகல நன்மைகளும், சர்வ மங்களங்களும். ஐஸ்வர்யங்களும் எப்போதும் பெருகி நிற்குமென்பது உறுதி..
கருணை தொடர்ந்து பெருகும்.
ஒரு துளி தெய்வாமிருதம்
கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படையாக சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. கண்ட இடத்தில் சொல்லிக் கொள்ளாமல், கேட்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ என்றில்லாமல் பகவானிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொள்ளலாம். அவன் கிருபா சமுத்திரமாயிருந்து , நாம் கேட்காமலேயே கஷ்ட நிவர்த்தி தந்தாலும் சரி, அல்லது நம் பாவத்திற்குத் தண்டித்தே தீருவான் என்றாலும் சரி, அல்லது கஷ்டத்தை மாற்றாமல் அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை தந்தாலும் சரி, அவனிடம் முறையிட்டுக் கொள்வதே ஒரளவு சாந்தி.
ஆனால் நான் ஈஸ்வரபக்தி என்று சொல்வது நம் கஷ்ட நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்வதையோ, சந்தோஷத்தைத் தரும்போது நன்றியாக பக்தி செய்வதையோ அல்ல. இப்போது கஷ்டம், சந்தோஷம் என்று நான் சொன்ன இரண்டும் மனத்தை ஆட்டுபவைதான். மனம் ஆடாமல் இருப்பதுதான் உண்மையான ஆனந்தம். மற்ற சந்தோஷங்கள் நிரந்தரமல்ல.
ஆகவே, ஸ்வாமியை சதா சர்வகாலமும், தியானம் செய்யச் செய்ய ஞானம், சாந்தம் இரண்டும் நமக்கு நன்றாக சித்திக்கின்றன. இதற்கே ஸ்வாமி வேண்டும், அவரையே நினைத்துக் கொண்டேயிருக்கும் பக்தி வேண்டும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
__________________________________________________________________________________
(VAyinAl unnaipparavidum adiyEn paduthuyar kalaivAy PAsupathA ParanjudarE)
THE GREATNESS OF SRI SRI SRI MAHAPERIAVA. (17—02—2009)
(Thanks to KachchimoodhUr KarunAmoorthy)
We have been fortunate to witness for ourselves, the high Yogic status and the excellence of austerity present together in the great sage Sri Sri Sri MahaPeriavAl . Sri Sri Sri MahaPeriava has blessed many devotees who have been fortunate to realize the secret of His AvatAr
SriMatam Balu is one among them who was blessed with the duty of serving the ‘Pratyaksha Dheyvam’ (God one can see); he has witnessed almost daily, a lot of incidents which revealed the greatness of the ‘AvatAr’. The following is one such rare experience narrated by him.
A devotee by name MaravakkAdu Ramaswami had four daughters and two sons. As he did not show any interest in anything and was wandering here and there, in his young age, there was no guaranteed regular monthly income. The small sum which he got by helping pundits in their Vedic rituals, was the only support for his family.
The house where he lived was his inherited property and so, there was no need for payment of rent. He also owned a coconut grove on the outskirts of the village and the income from that gave them the daily meal.
The eldest daughter was twenty two years and the next one was twenty. ‘If both their marriages are celebrated in one ‘Muhoortham’ then the expenses can be minimized’ was his thought. But things were getting delayed for this to happen. He got a good groom for the eldest daughter, and in his enthusiasm to conduct the marriage at the earliest, he decided to sell the coconut grove and settled a price also with someone.
But his elder brother did not like what he was trying to do. As the grove was a hereditary property, he also had a share in that; therefore, he approached the court and got a stay order for the sale.
Ramaswami Iyer did not know what to do next. He was having financial problem already; added to that, when he was trying to conduct the marriage of his daughter, the elder brother had prevented him from selling the coconut grove; he was very very unhappy.
Unable to find any other way, He ran to Sri Sri Sri MahaPeriavA, the epitome of compassion. After prostrating in front of Sri PeriavAl, he stood up and explained his position, with a choked voice and tears running down his cheeks. Sri PeriavA, the epitome of compassion was looking at him steadily for five minutes.
Without saying anything, He gave PrasAdham to him and sent him.
The devotee who came with a big burden of sorrow, was disappointed. He came out with a distressed mind that MahaPeriava had sent him off without even giving him a hint not to worry.
When he came out, he saw Balu who had the good fortune of serving Sri Periava. He poured out his distress to Balu, “If Periava wanted, He could have done anything. My brother has no wants; he has a big house; and he is always on tour; I cannot even see him personally; he does not call me for our Father’s ceremony; I cannot perform it by myself; when I was trying to conduct my daughter’s marriage in spite of my difficult position, he has done a thing like this!”
After hearing all this Balu quipped, “Why did you not tell Periava all this?”
“I told Him everything and Periava was listening to it also; He just gave me Sacred ash PrasAdham but did not do any ‘Anugraham’.”
When Ramaswami Iyer told him all this with a lot of grief, Balu also thought ‘there was no way Sri Periava would do this way’. The MahAn who showers His compassion on everyone, would not leave out Ramaswami like this. That too, Sri PeriavA’s love and compassion had never let down poor people like Ramaswami.’
“Do not worry, leave the problem with Periava and do what is necessary. He will save you somehow”—saying these consoling words, he sent him away.
A few days passed by. The king of ‘UpanyAsam’ Sri Margabandhu SAstrikal came for Sri PeriavA’s darsan. His wealth and prosperity showed in his dress consisting of a pure white dhoti, an ‘angavastram’ with zari border, a garland of gold coated RudhrAksham beads, a garland of nine gems etc. It would seem that this ‘king of UpanyAsam’ had a special favour with Sri PeriavA. Sri PeriavA would be talking to him at length on various subjects. Whenever he came, Sri PeriavA would ask him to do UpanyAsam in the evenings.
But it was quite different this time as Sri PeriavA was talking to different persons on different matters, without paying any attention to him who had come with his wife and two of his disciples, and with a plate full of fruits.
Balu thought, ‘why is it like this today? The ‘king of UpanyAsam’ famous all over India is waiting; let me tell PeriavA’, and said to Sri PeriavA in a loud tone, “Margabandhu Sastrikal has come”.
It looked as though Sri PeriavA was turning His eyes this side. Waiting for such a moment, Margabandhu SAstrikal offered the plate of fruits and said, “After a very long time, I have no programmes for about seven or eight days; therefore, I am proceeding to Thirupathi; My wife wanted to perform ‘SrinivAsa KalyAnam’. I immediately started; We want to perform ‘SrinivAsa KalyAnam’ with PeriavA’s Anugraham.”
Sri Periava did not look at him, nor did He talk to him. While He was talking enthusiastically to all the simple folks around Him, He did not talk to him for half an hour.
As if to remind Sri PeriavA, Balu again told Him,”SAstrikal is standing here”.
Margabandhu SAstrikal, with an anxious thought ‘PeriavA should bless me and send me to Thirupathi. Why is He testing me by neglecting me like this today?’, said to Sri PeriavA, “Yes. Sri PeriavA should bless me; I am proceeding to Thirupathi to conduct ‘SrinivAsa Kalyanam’”.
Sri PeriavA suddenly got up. “Perform PadhmAvathi Kalyanam first”—saying this He quickly went inside. For all those who were watching everything, this looked strange.
SrinivAsa KalyAnam means PadhmAvathi KalyAnam only ! Is He saying “everybody performs SrinivAsa Kalyanam in Thirupathi; therefore, you go to ThiruchAnoor and perform PadhmAvathi Kalyanam”?
Margabandhu also did not understand what this meant, thinking “Why PeriavA has given an order like this and gone inside?”
But suddenly, Divine Grace itself made him understand the meaning of that Eswaran’s order!
Another two months passed by. Ramaswami Iyer came back for Sri PeriavA’s Darsan with a booming face. He came now to submit the invitation of his daughter’s marriage.
“Everything is PeriavA’s Anugraham only. My brother had undertaken to meet all the marriage expenses. He told me that performing ‘KannikA DhAnam’ is the only job of mine and the rest may be left to him. He has withdrawn the court case on the coconut grove. He has also told me that he will conduct the Upanayanam of my younger son and take him as his disciple. I did not even dream that my elder brother would change like this. Everything is Sri PeriavA’s Anugraham only.”—said Ramaswami Iyer with a choking voice. He did not seem to know how Sri PeriavA would have performed this Anugraham.
Sri Periava raised His hand, blessed him and gave him PrasAdham.
When Ramaswami Iyer came out, he met Balu again. “Ramaswami! What is in your hand? Is it wedding invitation? Daughter’s wedding? You have been saying that you do not have a paisa in your hand?”—-Balu, looked at the wedding invitation which Ramaswami gave him.
It started like this “SowbAgyavathi PadhmAvathi, the granddaughter of MaravakkAdu Jagadheeswara SAstrikal, and the eldest daughter of my younger brother Chiranjeevi Ramaswami……..”(in Tamizh) and ended as “Yours faithfully, Margabandhu SAstrikal.”
Balu was surprised and shaken !
‘Oh! This is the meaning of what Sri PeriavA told Margabandhu SAstrikal two months ago (“First, perform the marriage of PadhmAvathi”)? PeriavA might have known that he is the elder brother of Ramaswami. But how could He have known that Ramaswami’s daughter’s name is PadhmAvathi?
There is nothing special about the fact that Sri Sri Sri PeriavAl knows everything but is it not true that the ‘Pratyaksha Dheyvam’ knows only to bless?
It is certain that the devotees who enjoy such Anugrahams from Sri PeriavA will be blessed with prosperity.
COMPASSION WILL CONTINUE TO FLOW……..
A DROP OF DIVINE NECTAR.
No one can keep their difficulties from expressing out. The mind becomes peaceful once they are expressed (to some one). Instead of expressing them everywhere, and not feeling anxious how those who hear them will take it, we can express them to BagavAn. Whether He, who is an ocean of kindness, solves our difficulties without our asking Him, or He punishes us for our sins, or gives us the maturity to withstand those difficulties without removing them, placing our difficulties at His feet will only give us peace.
But what I mean by devotion to God is not praying to Him to offset our difficulties, nor for thanking Him for granting us happiness. Both difficulties and happiness are instruments which make our mind unstable. A stable, unwavering mind is the real happiness. Any other happiness is not permanent.
Therefore as we keep on worshipping and meditating on SwAmi always, we achieve both wisdom and peace. SwAmi is required for this only. Devotion must be such that we should always be thinking about Him.
(PAduvAr pasi theerppAi ParvuvAr pini kalaivAy)
DhEvAram by Sundaramurthy Swamikal.
Categories: Devotee Experiences
Karunaikkadalin thiruvadi charanam.Hara Hara Sankara. Jaya Jaya Sankara, Kamakshi Sankara.
பெரிவா கடைகண் பார்வை பட்டாவே போறுமே…. ஏழேழு ஜன்மத்ல நாம சேஞ்ச பாவமெல்லாம் போயிடும்….. கருணாசாகரா…… ஆபத்பாந்தவா…… பாதபங்கஜம் ஸிரஸா நவாமி.