Periyava Golden Quotes-532

முதல் கேள்வி: தத்வத்தில் ‘கன்விக்ஷன்’ [உண்மை என்ற உறுதிப்பாடு] என்பதற்காக த்வைதத்திலிருந்து அத்வைதத்துக்கு அல்லது அத்வைதத்திலிருந்து விசிஷ்டாத்வைதத்துக்கு மாறலாமா? இதற்காகக் குலாசாரத்தை விடலாமா? என்பது. தத்வத்தில் ‘கன்விக்ஷன்’ என்பது முழுக்க ஒருத்தனின் உள்விஷயம். மனம் போனபடி ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல், நன்றாகக் கற்றறிந்து ஆலோசித்து ஏற்பட்டதாகவோ, அல்லது நல்ல உள்ளநுபவத்தில் ஏற்பட்டதாகவோயிருந்தால் அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கன்விக்ஷன் மேம்போக்காக இருக்கக்கூடாது. ஆழமாகப் போயிருக்க வேண்டும். ஏன் அந்த ஸித்தாந்தத்திலே பற்று என்பதற்குக் காரணம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். காரணமில்லாமலே ஆழ்ந்த பற்று என்றால், அப்போது ஸம்ஸ்கார விசேஷத்தால் அப்படி ஏற்பட்டிருக்கும்; அப்போது அறிவால் சொல்லத் தெரியாதது, அநுபவத்தில் பேச ஆரம்பிக்கும். எப்படியாயினும் ஒரு தத்வத்திலே, ஸித்தாந்தத்திலே ஒருவனுக்குப் பற்று மேலெழுந்தவாரியாயில்லாமல் உறுதியாக இருக்கிறது என்றால் அந்த உள்விஷயத்தை யாரும் ஆக்ஷேபிப்பதற்கும், இப்படி மாறக்கூடாது என்று சொல்வதற்கும் இல்லை. ஆனால் – இப்போது நான் சொல்லப் போகிறது ரொம்ப முக்கியமான பாயின்ட் – ஒருத்தனுக்குப் பூர்விகர்களின் ஸித்தாந்தத்துக்கு வித்யாஸமாக இன்னொன்றில்தான் ஆழமான விச்வாஸமிருக்கிறது என்கிறதற்காக அவன் குலாசார அநுஷ்டானங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதேயில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The first question to be pondered upon is, prompted by a strong conviction, can a person switch over from Dwaitam to Adwaitam, or Adwaitam to Visishtaadwaitam, contrary to the belief of one’s ancestors. Philosophical conviction is purely a person’s internal matter. If it is based upon deep philosophical analysis with a thorough knowledge of the subject or a genuine internal experience and not upon a whim or fancy, this change of conviction has to be accepted. Conviction should not be superficial. It should have deep roots. One should be able to justify one’s conviction. If no reason is attributable then it must be due to some indefinable spiritual connections. In such a case, it cannot be explained with the help of intellect but it will express itself in practical experiences. Whatever be the reason, if a person’s particular philosophical conviction is deep rooted and not superficial no one can object to this internal matter and or his change of conviction. But what I am going to state now is a very important point. If a person’s philosophical conviction is different from that of his ancestors, there is no need for him to change his practice of the ancestral traditions. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: