Periyava Golden Quotes-531



இதில் (இப்போதும் அப்படியே ஒருத்தன் ஹிந்துவாகவே இருந்துகொண்டு ஸ்மார்த்தத்திலிருந்து வைஷ்ணவத்துக்கோ, மத்வ மதத்திலிருந்து ஸ்மார்த்தத்துக்கோ போனால் என்ன?” – இப்படி ஆர்க்யுமென்ட் போகிறது). நியாயம் இருப்பதாகப்பட்டாலும் சாஸ்திர அபிப்ராயத்தைத்தான் நான் சொல்ல வேண்டும், பூர்விகர் வழிதான் போகவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் உபதேசித்துவிட்டு நானே பூர்விகர் அபிப்ராயத்துக்கு மாறாகச் சொல்லக்கூடாது என்பதால், அவரவரும் தாங்கள் பிறந்திருக்கிற குலாசாரப்படித்தான் நடக்க வேண்டும் என்றே சொல்கிறேன். சாஸ்திரத்தை நம்ப வேண்டுமென்றால் அப்புறம் ஆர்க்யுமென்டுக்கு வால்யூ இல்லை. ஆர்க்யுமென்டில் எத்தனை நியாயம் இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டு அதன்படிதான் செய்ய வேண்டும். நம்பிக்கை (faith) என்னும்போதே அது புத்தியால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியதல்ல என்று தானே அர்த்தம்? புத்திக்குப் புரிவதைத் தீர்மானமாக நாமே தெரிந்து கொண்டு விடுவோமாதலால், இதிலே ‘நம்ப’ என்ன இருக்கிறது? தெரியாததைத்தான் நம்ப வேண்டும். இதோ எதிரே ‘மைக்’ இருக்கிறது என்று கண்ணுக்குத் தெரிவதைச் சொன்னால் அதிலே ‘நம்புவதற்கு ‘என்ன இருக்கிறது? ஆனபடியால் மத நம்பிக்கை, சாஸ்திர நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்றெல்லாம் வார்த்தைகள் இருப்பதாலேயே – மதத்துக்குப் பேரே Faith என்று வைத்திருப்பதாலேயே – அதில் எல்லாவற்றையும் புத்தி தர்க்கத்தால் விளக்கிக் கொள்ள முடியாது என்றுதான் அர்த்தம்.

ஆனாலும் இப்படிச் சொல்லி அடியோடு விட்டுவிடாமல் [ஹிந்து மதப்பிரிவுகளுக்குள்ளும் பிறப்பின் படி அமைந்த பிரிவுக்கான பூர்வாசாரப்படித்தான் பண்ண வேண்டும் என்பதற்கு] கொஞ்சம் காரணமும் சொல்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Though there seems to be some justice in this argument (what is wrong if, in these days, somebody switches over from Smaarta sect to Vaishnavism or from the Madhvaa sect to Smaarta sect, remaining within the folds of Hinduism), I should express only the opinion of our sastras. After having advised all of you to follow the path of our ancestors, I should not express something contrary to the opinion of our ancestors. So I state that everyone should follow the traditions set by their own ancestors. If one has to believe the scriptures, then there is no value in the argument. One should continue to follow the scriptures, though recognizing certain validity in the argument. Faith means that it is beyond the capacity of intellectual perception alone. What is understood by the intellect is understood by us; so where is the question of Faith here? We have to have faith in what is not perceivable. For example, there is a mike in front of me. What is there to believe in that? But the very prevalence of words like Religious Faith, Faith in scriptures or Faith in God and use of the word Faith for religion, it means that everything cannot be explained by intellectual argument. But without leaving it at this, I will also give reasons as to why the traditions of the various sects into which we were born (within the Hindu fold) should be followed by us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: