63. Gems from Deivathin Kural-Vedic Religion-Factoral Analysis in Dharma

Jaya Jaya Sankara Hara Hara Sankara – After explaining in depth the unique features of our religion Sri Periyava moves onto to the sociological foundation of our religion viz. Varnashrama Dharma. Explains why Varnashrama Dharma needs to be there and draws a parallel with division of labor that various other are trying to implement, not so successfully. The key point highlighted here is one should focus on doing their duties instead of focusing on money which has the been the case now.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri R. Sridhar for the fabulous translation. Rama Rama.

தர்மங்களின் பாகுபாடு

சமுதாய வாழ்வுக்குப் பல காரியங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. புத்தியினால் செய்கிற காரியங்கள், சரீரத்தால் செய்கிற காரியங்கள் – இவற்றில் பல பல தினுசுகள் – இத்தனையும் ஜன சமூகம் சுபிட்சமாக இருப்பதற்கு அவசியமாக இருக்கின்றன. இதில் ஒரு தொழில் உயர்வு, ஒரு தொழில் தாழ்வு என்று நினைத்தால் அது சுத்தத் தப்பு.

நம் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரிசி வேண்டும், உப்பு வேண்டும், துணி வேண்டும், புஸ்தகம் வேண்டும், இன்னும் எத்தனையோ வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் தானியங்கள் பயிரிட்டுக் கொண்டும், உப்புக் காய்ச்சிக் கொண்டும், துணி நெய்து கொண்டும், புஸ்தகம் அச்சுப் போட்டுக் கொண்டும் இருக்க முடியுமா? உழுகிறவன் தனக்காக மட்டுமில்லாமல் எல்லாருக்காகவும் விளைவிக்கிறான். துணி நெய்கிறவன் எல்லாருக்காகவும் நெய்கிறான். இப்படியே சமுதாயம் முழுவதற்குமாகச் சிலர் வியாபாரம் செய்கிறார்கள்; சிலர் யுத்தம் செய்கிறார்கள். இப்படியே லோகம் முழுவதற்கும் ஆத்ம க்ஷேமம் ஏற்படச் சிலர் தியானமும் யாகமும் பூஜையும் செய்து கொண்டு லோகோபகாரமான சாஸ்திரங்களை ரக்ஷித்து வரவேண்டும். இப்படிப் பரஸ்பரப் பிரயோஜனத்துடன் ஜனங்கள் பல தொழில்களைப் பங்கீடு செய்து கொண்டு சௌஜன்யமாக வாழவே நம் தர்ம சாஸ்திரங்கள் அழகாக வழி வகுத்திருக்கின்றன.

‘எப்படிப் பங்கீடு செய்வது?’ அவரவர் தகுதியை வைத்து என்றால், எல்லோருமே தங்கள் தகுதியை அதிகமாகத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ‘அவரவர் மனோபாவத்தை வைத்து’ என்றால் எல்லாரும் அந்தஸ்தான வேலைகளுக்குத்தான் ஆசைப்படுவார்கள். அப்படியானால், மற்ற காரியங்கள் என்ன ஆவது? எல்லாக் காரியங்களிலும் ஜனங்களைச் சமூக வாழ்வுக்கு இசைவாக நிரவி வைப்பது எப்படி? இப்போது நிரவி விட்டால் மட்டும் போதாது. தலைமுறைக்குத் தலைமுறை எப்படி நிரவுவது? தகுதி, மனோபாவம் இவற்றை வெளியிலிருந்து பரீக்ஷித்து முடிவு பண்ணுவது எப்படி முழுக்க சரியாக இருக்க முடியும்? எல்லோரும் எல்லாவற்றுக்கும் போட்டி போடலாம் என்றால் இதெப்படி சாத்தியமாயிருக்கும்? யார் நிரவுவது? எப்படி நிரவுவது? இதனால்தான் தொழில்களைப் பாரம்பரியமாக நிரவி வைத்து வர்ண தர்மம் என்று ஏற்படுத்தினார்கள்.

எந்தத் தொழிலானாலும் சரி, பாரம்பரியமாக வாய்ந்த அதைப் பரமேசுவரன் விதித்த ஆக்ஞையாக, ‘லோக க்ஷேமார்த்தம்’ செய்கிறேன் என்று உணர்ந்து செய்தால், அதுவே ஒருத்தனுக்கு ஆத்ம க்ஷேமார்த்தமாகவும் ஆகிறது. ஒவ்வொரு காரியத்தில் உள்ள ஜீவனும் கடைத்தேறுவதற்கு அநுகூலமாக வெவ்வேறு அநுஷ்டானங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உடல் வருந்த உழைக்கிறவனை உபவாசம் இரு என்றால் அவனால் முடியுமா? புத்தியினால் காரியங்களைச் செய்கிறவனுக்குச் சரீர போஷணம் அவசியமில்லை. அவர்கள் சரீராபிமானம் நீங்கவே அதிக அநுஷ்டானங்கள், ஸ்நானங்கள், விரதங்கள், உபவாசங்கள் வைத்திருக்கிறது. காரியங்களைப் பொறுத்தே அநுஷ்டானங்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டால் சண்டைக்கு இடமே இல்லை.

நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதால் இந்த ஆசாரங்களை விட்டுவிடாமல், பின்பற்றப் பிரயத்தனம் பண்ணி வந்தால், பிற்காலத்தில் நமக்கு அர்த்தம் தெரிகிறபோது உதவும். அவரவரும் தங்களுடைய தர்மத்தை ரக்ஷித்துக் கொள்வதோடு, மற்றவர்களும் அவர்களது தர்மத்தை ரக்ஷித்துக் கொள்ள உதவி செய்வது சிலாக்கியமாகும். ‘உனக்கேன் அந்த தர்மம்? நீங்க என்னோடு வா அல்லது நானும் உன் தர்மத்தை எடுத்துக் கொள்வேன்’ என்று போட்டி போடாமல், மற்றவன் தன் தர்மத்தை விட நினைத்தாலும் ‘அப்பா நீ அதிலேயே இரு; அதுதான் உனக்கும் க்ஷேமம், எனக்கும் க்ஷேமம்’ என்று சொல்ல வேண்டும்.

காரியங்கள் செய்வதில் ஒருத்தன் உயர்ந்தவன், ஒருத்தன் தாழ்ந்தவன் என்பது இல்லை. சமூகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதால் பலவாகப் பிரிந்து பல காரியங்களைச் செய்ய சாஸ்திரம் வழி சொல்கிறது. அவரவரும் மனசு போனபடி காரியம் செய்ய ஆரம்பித்தால் பொதுக் காரியம் ஒழுங்காக நடக்காது. ஏனென்றால், இன்றைக்கு ஒவ்வொருத்தனுக்கும் பிறன் பணம் எல்லாம் தன் பர்ஸுக்குள் வரவேண்டும் என்ற ஒரே ஆசைதான் இருக்கிறது. நிறையப் பணம் கிடைக்கிற வழிகளில்தான் எல்லாரும் இறங்குவார்கள்.

இதில் லோக க்ஷேமத்துக்கு அநுகூலமான தொழில் பாகுபாடு இருக்காது. எனவே அவரவரும் பரம்பரைக் கிரமமாக வந்த காரியங்களையும் அநுஷ்டானங்களையுமே பின்பற்றிவந்தால் ஜன சமூகத்தில் போட்டி, பொறாமை இல்லாமல் பொதுக்காரியம் நடப்பதோடு, அவரவருக்கும் ஆத்ம பரிசுத்தியும் உண்டாகும். சீர்திருத்தம் (reform) என்று சொல்லிக்கொண்டு சீர்குலைக்காமல் (deform) இருக்க வேண்டுமானால் இதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

யார் எந்தத் தொழில் செய்தாலும் எல்லாருக்கும் சாப்பாடு, துணி, வீடு ஆகிய அத்தியாவசியமான வசதிகளைத் செய்துதரச் சர்க்கார் கடமைப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் தேவைகளை அதிகரித்துக் கொண்டு போனால்தான் போட்டி, பொறாமை எல்லாம் உண்டாகிறது. இப்போது எல்லா நிறைவும் பணநிறைவு என்ற ஒன்றாக இருப்பதால்தான் இத்தனைக் குழப்பங்கள். இது மாறி, தன் காரியத்தை ஒழுங்காகச் செய்தால் ஏற்படுகிற நிறைவே அவரவருக்கும் ஸ்வாமி என்ற மனோபாவம் வர வேண்டும். அப்போது எங்கும் சாந்தமாக இருக்கும்.

பலவித தின்பண்டங்கள் உள்ளன; பல ராகங்கள் உள்ளன. அதுபோல சமூகத்தில் பல காரியங்கள் நடக்க வேண்டும். ரசத்தில் உப்பு போட்டிருக்கிறதே என்று பானகத்தில் உப்பு போட்டால் அது ரஸாபாஸம். ஒரு ராகத்தில் இன்னொரு ராகத்தின் ஸ்வரத்தைச் சேர்த்தால் அது ரஸாபாஸம். இப்போது ஜனங்களுக்கு ரஸனைகளைப் பற்றிய ருசியே போய்விட்டது. உருக்கமான புராணக்கதை நடுவே பாகவதர்கள் கேலிப் பேச்சுக்கு வருகிறார்கள். இதை ஜனங்களும் ரஸிக்கிறார்கள். எத்தனையோ நல்ல போஜன வகைகள் இருக்கும் போது ருசியும் இல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவாமல் இருக்கிற புகையிலையைப் புகைக்கிறார்கள். இவை சின்ன ரஸாபாஸங்கள். பெரிய ரஸாபாஸம், பொது தர்மத்துக்கு அநுகூலமான பல விசேஷ தர்மங்களை வகுத்துத் தரும் வர்ணங்களைப் போட்டுக் குழப்புவதே!

__________________________________________________________________________

Factoral Analysis in Dharma

Several activities have to take place for social life. Some activities are physical and some relate to mind, etc. All these are primarily to ensure that the people live a harmonious life. If we think one profession is superior to another then it is a complete mistake.

For our family we need several things like rice, salt, clothing, books, etc. For that purpose can each one of us cultivate rice, extract salt, weave our clothes and print our books? The farmer cultivates the land not only for himself but for the entire society. The weaver also does it for the entire society only.  Some do trading for the sake of the society. Some go to warfare for defense of society.  Similarly for the spiritual welfare of the entire humanity, some have to perform Yagnyas and Dhyana and they also have to protect the Dharma Shastras. Our Dharma Shastras have laid the path beautifully for the society to live harmoniously through such mutually helpful division of labour.

Now how to decide on this division of labour?  If it is based on one’s competence then everyone will think that they are more competent than the other.  Else if it is based on one’s mentality or personality then everyone will aspire only for the jobs which they consider as being of higher status.  Then what will happen to other professions? How can all the jobs equally be distributed across the society, not only for this generation, but to all the generations to come in the future? How right can we be to judge one’s competence and mentality from outside? If it was decided that everyone could compete for every profession, how right that could be? Then how this could be done and who will do it? That is why the Varna-Dharma was formed based on one’s ancestral profession.

Whatever may be one’s ancestral profession, if it is performed as God’s commandment and for the welfare of society, then that itself will be spiritually beneficial to that person. For every Jeeva (soul) in every profession, rituals (anushtanams) have been prescribed for their salvation. Will it be possible for a person whose profession involves hard physical labour to fast (upavasam)? For people involved in non-physical profession, it is not paramount to take care of the body. For such people, lots of rituals, baths, fasting, etc. are prescribed so as to remove their attachment to their body. If we understand that all religious practices are based on the respective profession, then there will not be any reason for disputes.

Even if we do not understand its significance now, we have to put sincere efforts to follow these customs and that will help us when we come to know of their meanings in the future. It will good for everyone to observe and protect their own customs (dharma) and also help others to observe theirs. We should not argue ‘Why that profession for you?  Either you come with me or I will take over your profession”. Instead of such arguments, even if other person attempts to leave his profession (Dharma), we should say “Kindly continue with your profession (Dharma). That is always beneficial for you and me too”.

No one can be termed as superior or inferior based on the professions.  The Shastras prescribe different jobs to different people for the general well-being of the society.  If each one does any job as per his choice, then the general well-being cannot be maintained.  Nowadays each person wants the money of another person in his own purse.  So everyone will follow that profession which gives them more money. In this kind of division of labour the general well-being of the society will not find a place. Hence everyone should follow their own ancestral profession and rituals which will ultimately eliminate competition and jealousy in public work and result in cleansing of one’s mind (Aatma-Shuddi).  If we should avoid deforming the society in the name of such reforms, then we should think all these aspects.

The Government is obliged to provide food, cloth, and shelter to its citizens irrespective of the profession they follow.  Beyond these, if our wants increase, this will result in competition and jealousy among the people. All these dilemmas are because money is considered to be the ultimate thing. This should change and everyone should realize that if they follow their respective profession and do the jobs sincerely, that itself is worship. Then there would lasting peace everywhere.

There are varieties of eatables. There are different Raagas. Similarly there will be different professions in the world. Just because salt is added in rasam someone adds salt in a sweet-dish then that will spoil that dish. If one adds the swara of another Raaga while singing one raaga that will result in corruption of that raga.

Nowadays people have lost the taste for good things. Even amidst serious exposition of Puranas, the upanyasakar (speaker) indulges in cheap humour. People also seem to enjoy this. When so much healthy food is available, people smoke tobacco which is tasteless and also harmful. These are all smaller level of corruption. But the bigger damage to the society is discrediting the Varna-Dharma which was formulated for the general welfare of all.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: