Periyava Golden Quotes-524


வெறும் Physical Plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளி நேச்சர் அடங்கியிருந்ததானால் ஸுர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயன்ஸ்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக் கொண்டேயிருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊஹம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்திதான். அதுதான் இந்த பிரபஞ்ச தர்மத்துக்காக, லோகங்களின் நெறியான போக்குக்காகவும் வாழ்க்கைக்காகவும் ஸுர்யனில் குறையாத உஷ்ண சக்தியை ஊட்டிக் கொண்டேயிருக்கிறது. ஸயன்டிஸ்ட்கள் ஒன்றொன்றாகக் கேள்வி கேட்டுக் கொண்டு காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே போனாலும் கடைசியில் ஸயன்ஸினால் காரணம் சொல்ல முடியாத ஒரு ‘ஆரிஜினி’ல் [தோற்றுவாயில்] தான் போய் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள். ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்பப் பெரியவர்கள் அதுதான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். மநுஷ்ய மனநெறி, மனித வாழ்வின் ஒழுங்கு ஆகியனவும் அதே சக்தியுடைய தர்மத்துக்கு இன்னொரு ரூபந்தானாகையால், மனநெறியே இயற்கையையும் ஸாதகமாகவோ பாதகமாகவோ ஆக்குகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If Nature operated merely on a Physical Plane, then the sun would have frozen long time back, as even the Scientists state. They guess so many reasons for the continuous generation of heat within the Sun. The root cause is the Divine Power. It imbues the Sun with this continuous heat to ensure a certain Conduct of the Universe, a disciplined functioning of the world and Life. Scientists pose numerous questions and try to find many reasons but eventually they are all stuck when it comes to the Origin of Universe. Great people like Einstein bow down to what they recognize as a Supreme Divine Power (Eswara Sakthi). Since the virtues of human mind and the discipline of human life are another manifestation of this Divine Code, the discipline of the heart has a positive or negative impact on Nature. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. So many forces are in such fine balance in the universe to sustain life. So many forces are in such fine balance within each of us for us to live. There certainly has to be a creator with infinite intelligence to have created and to be sustaining all.

  2. //. மநுஷ்ய மனநெறி, மனித வாழ்வின் ஒழுங்கு ஆகியனவும் அதே சக்தியுடைய தர்மத்துக்கு இன்னொரு ரூபந்தானாகையால், மனநெறியே இயற்கையையும் ஸாதகமாகவோ பாதகமாகவோ ஆக்குகிறது.// மரம் வைத்தால் போதும், மழை வரும் என்று நினைப்பவர்களுக்கு சர்வேஷ்வரன் என்ன அருமையாக விளக்கியுள்ளார்!

Leave a Reply

%d