Periyava Golden Quotes-521


ஆசாரத்தால்தான் டிஸிப்ளின் எனும் மனநெறி ஏற்படுகிறது. ஆசாரம் வெளிவிஷயம் என்பது சுத்தப் பிசகு. அதனால்தான் மனஸில் உத்தமமான பண்பும், உயர்ந்த கட்டுப்பாடும் உண்டாகிறது. மநுஷ்யனின் மனநெறி நன்றாயிருந்து விட்டால் அதன் சக்தி ஸாமான்யமானதில்லை. அது இவனுடைய ‘நேச்சர்’ என்னும் இந்திரிய வேகங்களை அடக்கியாள்வது மட்டுமில்லை; வெளி ‘நேச்சரை’யே அடக்கியாண்டு விடுகிறது. பிராம்மணன் அத்யயன ஆசாரத்தை அநுஷ்டித்தால் அதற்காகவே மும்மாரிகளில் ஒன்று பெய்கிறது என்பது தமிழ் மூதுரை; வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை. இப்படியே பதிவ்ரதைகளின் கற்பு நெறியினால் இயற்கை இன்னொரு மழையைப் பெய்கிறது என்று சொல்கிறது: மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை.

இதையே இப்போது பகுத்தறிவாளர்களும் கொண்டாடும் திருக்குறளும் சொல்கிறது:

தெய்வம் தொழாள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

ராஜா நீதி நெறிப்படி ஆட்சி பண்ணுவதும் ஒரு மழையை வரவழைத்து விடும்:

நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை

இதற்கு மறுதிசையில், இவர்கள் நெறி தப்பினால் இயற்கையும் கன்னா பின்னா என்ற பண்ண ஆரம்பிக்கும். வள்ளுவரே சொல்கிறார்: ராஜா நீதிமுறை தப்பினால் பிராம்மணனும் தன் ஆசாரமமான அத்யயனத்தை மறந்து விடுவான் — அறுதொழிலோர் நூல் மறப்பர். ஒருத்தன் முறை தப்பினால் மற்றவர்களும் முறை தப்பிப் போய்விடுவார்களென்று எச்சரிக்கிறார். இப்படி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மனநெறி கெட்டுப் போவதால் பாதகமான பலன் தொடர்ந்து போவது மட்டுமில்லை. ராஜா தன் ஆசாரத்தை விட்டால் பால் வளமும் குன்றிவிடும்: ஆ பயன் குன்றும் என்று ‘தெய்வப்புலவர்’ என்னும் திருவள்ளுவர் சொல்கிறார். இதற்குப் பகுத்தறிவு பதில் சொல்ல முடியாது. மாற்ற முடியாதவை என்கிற Natural Forces -ம் (இயற்கைச் சக்திகளும்) மநுஷ்யனின் மனநெறிக்கு அடங்கியவைதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

It is because of the observance of Aachaaram or traditions prescribed by our saastras that the virtue of mental discipline develops. It is very wrong to assume that aachaaram is merely external. Adherence to traditions develops nobility of character and a high degree of discipline. If a man’s heart is virtuous, it has a tremendous power. It is not only able to control man’s intrinsic nature – his senses – but is also able to rule over the external Nature. The ancient Tamizh scripture states that one rainfall occurs (three were supposed to occur in a month) when Brahmins follow the tradition of Veda adhyayanam or Vedic scriptural education and practice. Similarly another rainfall occurs when virtuous ladies adhere to their principles. This is also stated in ‘Thirukkural’ which is eulogized even by the rationalists. If the Kings rule according to the right code, the third rainfall occurs. If all these people stray from the prescribed path, nature also starts behaving in a haphazard manner.

Thiruvalluvar himself states that if the King strays from the virtuous path, Brahmin will forget his Vedic duties. Thiruvalluvar warns that if one person chooses the wrong path the others will also be led astray. Not only there is a cumulative effect when mental discipline is corrupted, but the milk production of the country suffers – the cows yield less milk – when the King strays from the virtuous path. Rationalists cannot counter this statement of Thiruvalluvar. Even the so called unchangeable natural forces are also subject to the virtue of human beings.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. I want to share an incident I witnessed @ Thiruvannamalai. On the Girivalam Path, a few youngsters were sitting and talking on spiritual matters. I was there around and was paying heed to their discussion. A few sadhus were also sitting around. One young guy said only devotion is important. Everything else like puja, homam are all சும்மா. (As usual) he started narrating Kannapa Nayanar story. One sadhu asked, தம்பி கண்ணை பிடுங்கி சிவ லிங்கத்தின் மீது வைக்கும் அளவுக்கு, உங்களுக்கு கண்ணப்ப நாயனார் போல பக்தி வந்து விட்டதா? He god bit furious on this unexpected question…he asked “How about you?”. The sadhu replied, ’இல்லப்பா, இன்னும் கொஞ்சமும் பக்தி வரலை. அதுக்கு தான் இந்த அண்ணாமலையாரிடம் தினமும் பக்தி பிச்சை கேட்டு கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

Leave a Reply

%d bloggers like this: