பூர்வாசாரங்கள் வேண்டியதில்லை என்று ஸுலபமாகச் சொல்லி, ஜனங்கள் இதை வேத வாக்காக (வேத வழி வேண்டாம் என்பதையே வேத வாக்காக) நம்பச் செய்து விட்டார்களே என்று மிகவும் துக்கமாக இருக்கிறது. வேணுமா, வேண்டாமா என்பதற்கு அதிகமாக வாதப் பிரதிவாதம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு சின்ன விஷயத்தைக் கொண்டே முடிவு செய்து விடலாம். வியாதியஸ்தன் மருந்து சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு விவாதம் பெரிசாகப் பண்ண வேண்டுமா? மருந்தைக் கொடுத்துப் பார்த்தால் என்ன நடக்கிறது, கொடுக்காவிட்டால் என்ன நடக்கிறது என்று பார்த்தால் போதாதா? மருந்து கொடுக்கிற மட்டில் வியாதி குறைகிறது, விட்டு விட்டால் ஜாஸ்தியாகிறது என்று பிரத்யக்ஷத்தில் தெரிகிறது. அப்போது மருந்து வேண்டத்தான் வேண்டும் என்றுதானே அர்த்தம்? பூர்வாசாரங்கள் இருந்தவரையில் தேசத்தில் எல்லாத் துறையிலும் அபிவிருத்தி இருந்தது. இதற்கு மேலாக ஒழுக்கமும் ஒற்றுமையும் இருந்தன. அவற்றை ஒழிக்க ஆரம்பத்ததிலிருந்து இவற்றையெல்லாமும் விரட்டியாகிறது என்பதிலிருந்தே அந்த மருந்து இல்லாவிட்டால் ஆத்மாவுக்கு வியாதிதான் என்று தெரியத்தானே வேண்டும்? ஒருவேளை சாப்பாட்டை நிறுத்தினால், உடனே ஓய்ச்சலாக வந்தால் சாப்பிட வேண்டும் என்று தெரிகிறதோ இல்லையோ? சாஸ்திரத்தை விட்டபின் தனி வாழ்க்கை, ஸமுதாய வாழ்க்கை இரண்டிலும் நிம்மதி போன பிற்பாடும் பூர்வாசாரம் வேண்டும் என்று தெரிந்து கொள்ள மாட்டோமென்றால் என்ன பண்ணுவது? தலைவர்களாயிருக்கப்பட்டவர்கள் மாட்டேனென்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It is very sad to see that people state that the traditions are not needed and this opinion that the Vedas or ancient scriptures are not required has come to assume the strength as a Vedic statement itself. There is no necessity for an argument on this subject. A small example is enough. Should we argue whether a patient should be given medicine or not? It is enough to understand what will happen if the medicine is given or withheld as the case may be. The ingestion of medicine improves the health and if it is held back, the health deteriorates. Hence it is obvious that medicines are needed. As long as the traditions were followed the country flourished in all fields. Moreover, there was unity and virtue in the country. By giving up the traditions, we have done away with all these things also. So is it not clear that the spiritual health of the country has suffered? If we do skip a meal we feel weak enough to realize that a proper meal is required. After giving up the traditions both the individual and society have lost the peace of mind but our leaders are refusing to acknowledge this even at this juncture. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
When representatives of Kalipurusha are calling the shots how changes for the better will come about? Another 45000 years to go. Mahaperiava only should protect us
Jaya Jaya Sankara ! Hara Hara Sankara !
When representatives of Kalipurusha are calling the shots how changes for the better will come about? Another 45000 years to go. Mahaperiava only should protect us
Jaya Jaya Sankara ! Hara Hara Sankara !