Source: http://valmikiramayanam.in/?p=1909
சிவன் சாரோட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தை படிச்சா, முதலில் “நான் ரொம்ப உத்தமன், பக்திமான், விவேகி” என்ற எண்ணங்கள் இருந்தால் அது அடியோட போயிடும். எதோ ஒரு கோவிலுக்கு போறோம், ஒரு தான தர்மம் பண்றோம், வேதாந்தம் படிக்கறோம், பஜனை பண்றோம் அதனால நாம உசத்தி, English ல Holier than thou attitude னு சொல்லுவா, அது காணாமல் போயிடும். நம்ம நிலையை புரிஞ்சுப்போம்.
அதே நேரத்துல நம்ம தப்புகளை உணர்ந்து, சார் சொல்றது போல நேர்மையாக, பணிவோடு இருக்கணும், மஹான்கள் கிட்ட பக்தி ஏற்பட்டு அது மூலமாக பகவானை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்தால், சிவன் சார் போல ஆசுதோஷி, அனுக்ரஹம் பண்ற தெய்வம் கிடையாது. இப்படி நம் குறைகளைச் சொல்லி பிரார்த்தனை பண்ணுவதற்காகவே ஆதி ஆசார்யாள் ஒரு ஸ்தோத்ரம் பண்ணி இருக்கார். அந்த சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரத்தை, சிவன் சார் பாதங்களில், அவருடைய ஆராதனை தினத்தில், சொல்லி வேண்டிப்போம்.
நம: பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவா…
Categories: Audio Content
For Shloka lyrics
https://sites.google.com/site/sriadishankarastutis/home/shiva